போகர் சப்தகாண்டம் 226 - 230 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 226 - 230 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

226. கலறவே புருடனையந் திட்டமான மாகக்கலந்துநின்ற அறைதன்னியமாகக்கண்டு
ஒலறவே கருத்தழிந்து ஒன்றேயாகி உன்னனாயின் காற்றசையா விளக்குபோல
அலறவே அலைச்சலற்றுத் தானேதான் ஆயகண்ட மெய்ப்பூரணமாய் நின்றுபின்னை
துலறவே தேகமற்று இருப்பதாலே சுத்தமாம் தத்துவல்ப சமாதியாச்சே

விளக்கவுரை :


227. சமாதியாம் சல்விகற்ப சமாதிகேளு தனித்தனித்தான் இரண்டுவகை அதிலேயுண்டு
சமாதியாம் சத்தானு வித்தையுண்டு தரிப்பான திரிசானு வித்தையொன்று
மெமாதியாம் சத்தானு வித்தைமார்க்கம் பெரியதொரு தத்துவ சமாதிக்குத்தான்
மமாதியாம் சத்தங்கள் பட்சியோசை படுகிறது உன்மனத்தை பாருமங்கே

விளக்கவுரை :

[ads-post]

228. பருவமாம் சத்தானு வித்தையொன்று படிப்பான சல்விகற்பம் என்றுபேரு
திருவமாம் திரிசானு வித்தைமார்க்கம் சூட்சியாய் அந்தநிலைக்குள்ளே நின்று
தருவமாம் தன்னை அனுசந்தானம்பண்ணி சஞ்சரிச்சு திரிசானு வித்தையாகும்
அருவமாம் சல்விகற்ப சமாதிமார்க்கம் மருவியதோர் சஞ்சாரத்திருக்கில் பாரே

விளக்கவுரை :


229. பாரென்ற நிருவிகற்ப சமாதிகேளு பாங்கான தத்துவநிலை சமாதிமுத்தி
காரென்ற சத்தானு வித்தைமுத்தி தன்னைத்தான் மறந்து தூக்கமுறு மயக்கம்போல
வாரென்ற பிறசத்தம் காதில்கேளா மருவியந்த பூரணத்தே லயித்துநிற்கும்
நேரென்ற அசைதன்னியமாகப்போனால் நிருவிகற்ப சமாதியென்ற நேர்மையாச்சே

விளக்கவுரை :


230. நேர்மையாய் சமாதிவிட்டு சஞ்சரிக்கையில் நினைவாகச் சமாதியிலே இருக்கும்போது
தீர்மையாய் பக்கானமென்ற திரையத்துள்ளும் சிதைந்த பிரபஞ்சமெல்லாம் பொய்யென்றெண்ணு
வேர்மையாய் விவகாரத்தாலே தோன்றி விரிந்த பிரபஞ்சத்தின் பாசந்தள்ளி
நேர்மையாய் நிருவிகற்ப மாகநின்றால் நெளிவான நிருவிகற்பம் இதுவேயாச்சே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar