போகர் சப்தகாண்டம் 231 - 235 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 231 - 235 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

231. ஆச்சென்றத் துவல்ப சமாதிமுத்தி அறிவான நிருவிகற்பம் ஆகும்போது
நீச்சென்ற நிருவிகற்ப சமாதிக்குள்ளே நேரான விக்கினங்கள் நானதுண்டு
தூச்சென்றது எதுவென்றால் சொல்லக்கேளு சுருதிலயம் விட்சேமம் சட்சேமமாகும்
காச்சென்ற கரமாம் சுவாசமொன்று கருத்தூணிச் சொல்லுவது நாலுதானே

விளக்கவுரை :


232. நாலென்றது இதற்குள்ளே இடத்தைக்கேளு நனிந்துநின்ற நித்திரைதான் விட்சேபந்தான்
காலென்ற ராகமுறும் கலகத்தாலே கலந்துவரும் வாசியும் காரணத்தாலே
மாலென்ற மனோக ராஜ்ஜியத்தினாலே வருகுந்தான் சஞ்சேபம் நித்திரையுமல்ல
ஆலென்ற மனோக ராஜ்ஜியமுமல்ல அரவான சொருபங்கள் மறக்குமதுவே

விளக்கவுரை :

[ads-post]

233. அதுமறந்து இடமாக அகண்டுநிற்கும் அத்தியதில் ஆச்சரியம் சுவாசமாகும்
கதுநமக்கு மனமொழிந்த கணுவில்நின்ன கருதுகின்ற சுரூபத்தே சந்தோஷித்துச்
சதுமறந்து தனித்துயர்ந்த சமாதியுள்ளே தனித்துநின்ற ஆனந்தம் அனுபோகத்தைந்து
பறந்துபோம் நாலுவிக்கினமுமற்று நலமுற்ற சொரூபத்தில் லயிக்கநன்றே

விளக்கவுரை :


234. அயிக்கவே நன்றான அகண்டவிருத்திய நாதகாற்றில்லா விளக்குபோல
ஐயிக்கவே அலைச்சலற்றுத் தண்ணீருமுப்பம் அடக்கி நின்றவாறதுபோல அழுத்திநிற்கும்
தயிக்கவே பிரமன்மாலு ருத்திரனும் கேட்டுத் தனித்துமே வேற்றுருவாய்ப் பிரமன்தானும்
அயிக்கவே இப்படிதான் கடிகையொன்று யறுநேரம் கடிகையுற்றால் பதத்தைக்கேளே 

விளக்கவுரை :


235. கேளுமே அசுவாதி யாகங்கோடி கிருபைபண்ணி செய்ததோர் பலனுக்கொக்கும்
மூளுமே இப்படித்தான் சமாதி மூட்டில் முனையாகச்சுழுத்தியென்று எண்ணவேண்டாம்
கேளுமே சுழுத்திக்குச் சித்தந்தானும் திலங்கி நின்ற வஸ்துமே நசித்துப்போகும்
ஆளமே சமாதிக்கு நாம்பிரமம் என்று ஆண்மையாய் அதுவிருத்த இருக்கும்பாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar