236. பாரென்று சொல்லுகையால்
இரண்டுக்கும் பேதம் பண்பான நிருவிகற்ப சமாதிமார்க்கம்
தாரென்ற சஞ்சாரச் சமாதிகேளு
சார்ந்துநின்ற நிருவிகற்பம் பட்டேயப்பா
பேரென்று எழுந்திருந்து
பிரபஞ்சத்தைப் பார்த்து விரிவாக விவரிக்குங்காலமெல்லாம்
ஆகான்ற பிரபஞ்சமெல்லாம்
சமுத்திரத்தில் நிற்கும் துறைபோல மாயம்தானே
விளக்கவுரை :
237. தானான மாயம்மூன்று
கிலந்தியிட மலைபோல் தயங்குகின்ற கூர்மத்தின் அங்கம்போல்
ஆனான தோயமூற்ற ஆகாசம்போல்
அழுத்துகின்ற சொர்ப்பனத்தின் நிலைபோலே
தானான நம்மிடத்தே
உண்டாச்சையா தம்மிடத்தே இருந்துகொண்டு மாரபுக்கி
கானான அறிவழிந்து போறதானால்
கலந்து நம்மைவிட ஒன்று காண்கிலேனே
விளக்கவுரை :
[ads-post]
238. காண்கிலேன் சகலமும் யானென்று
நின்று கலந்து நாமொன்றல்லோ வேறொன்றில்லை
பூன்கிலேன் என்னிடத்தே
பிறந்ததெல்லாம் பேயாகவழிந்தெல்லாம் எண்ணிலெய்தும்
என்கிலேன் என்னைவிட்ட
தொன்றுமில்லை இயல்பாக உரைந்துநில்லு எந்நேரந்தான்
மாண்கிலேன் மனத்தோடு
சந்தானத்து மருகியே உள்ளிட்டு உரைதல் நன்றே
விளக்கவுரை :
239. உரைத்திட்டார் சாதாரப்
பயந்தான்வந்து உறப்பெரிய பிராமணன் உருப்பயந்தான் வந்து
மறைத்திட்டு மானபங்கம்
அகத்தாய்வந்து மயக்கமாய்க் கண்முன்னே தேவதைகள்வந்தும்
குறைத்திட்ட குருவினுட
கோபம்வந்தும் கோளுகையும் விகற்பமென்ற அறியரியுமாகி
பரைத்திட்டு பரிபாசம்
அதில்பழிபோட்டு பதவிகற்க மனதிங்கே இல்லையென்னே
விளக்கவுரை :
240. என்னவே என்னிடத்தே ஒன்றும்காணேன் இயல்பாக நானொருவன் என்னில் எல்லாம்
பொன்னவே நான்கண்டதெல்லாம்
பொய் பொய் பேரான சத்தியுட இந்திர ஜாலம்
மன்னவே மனமுரைந்து
சஞ்சரித்தால் மகத்தான சஞ்சார சமாதியாச்சு
அன்னவே யாரூட சமாதிதன்னை
பாய்ந்துமே சொன்னபடி அறிந்துகொள்ளே
விளக்கவுரை :