போகர் சப்தகாண்டம் 246 - 250 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

246. போச்சுதே பாழாச்சு முன்பின்னில்லை பெரும்பரியாந் திசைநாதங் காதில்கேட்கும்
ஆச்சுதே மதிகோடி வன்னிகோடி அடங்காத ரவிகோடி காந்தியாகும்
பாச்சுதே தினந்தோறும் பார்க்கக்கிட்டில் பண்பாக முழுகிப்போ மவுனப்பாம்புபோலே
தேச்சுதே சடத்துக்கு சிதைவுகாணும் சடந்தானும் சித்தியாய்த் திடமாய்ப்பண்ணே

விளக்கவுரை :


247. திடமாகப் பண்ணினால் சடம்போகாது சிதையாது மவுனத்தை திடமாய்நில்லு
மடமாக வுளத்தால் ஆவியைப்பாரு மனமொன்றில் கண்டத்தில் ஒளியேகாணும்
பிடிக்கப் பொய்யாம் பெரிதான கற்பூர தீபம் போல் நிற்கும்
சடமாகக் கண்ணினால் சாய்கையினாலாச்சு சச்சிதானமென்ற தேகமாமே

விளக்கவுரை :

[ads-post]

248. தேகமே மாறுதலை ஆறுகாலாய்ச் சித்திமுத்தி கண்டுநின்ற பானுவுக்குள்
மாகமே இப்படியே மதியைப்பார்த்தால் மகத்தான அமுர்தமென்ற தேகமாகும்
பூசுமே பொன்போலே வர்ணமாகும் பொருள்கடந்தும் அண்டத்தில் புக்கலாகும்
சோகமே சோம்பதுண்டு சட்டைத்தோலுரியும் மவுனத்தின் சூட்சந்தானே  

விளக்கவுரை :


249. தானென்ற சமாதியத்தான் முன்னேபார்த்து சாதித்து வம்பியாசம் பண்ணக்கேளு
ஊனென்ற ஓகாரமாம் உதாசனந்தான் தள்ளு உத்தமனே சிகாரமென்ற கோபம்போக்கு
வானென்ற வாயில் வந்தால் மனதுட்கொள்ளு மகத்தான துவைதமென்ற வாசினைதான் முந்தும்
தேனென்ற விதிரண்டுஞ் ஜெயிக்கமாட்டார் திறமாகத் தள்ளிவிட்டுச் சமாதிசேரே

விளக்கவுரை :

250. சேராக முந்தின தத்துவத்தைப்பாரு சேர்ந்தபின்பு ஏமமென்ற சயதயைத்தான்பாரு
பூராக கிரிகைசென்ற நேமத்தைப்பாரு பகழான ஓமென்ற பிராணயாமம்
பேராக உண்ணியபின் பிரத்தியாகாரம் பெரிதான தாரனையும் யோகமாச்சு
தாராக சமாதி ஐந்தும் ஞானமாச்சு சாதகமாய் இதனாலும் சார்ந்துபாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 241 - 245 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

241. கொள்ளென்ற தேவதைகள் வந்தாலுந்தான் குவித்து சட்டை பண்ணாதே அகண்டமாய்நில்லு
அள்ளென்ற பத்துவித நெறியிற்கூடி அறிந்துமே சஞ்சார சமாதிக்குள்ளும்
தெள்ளன்ற திடம்பட்ட பின்புகேளு தெளிந்துமே சகலத்தில் சஞ்சலம் போக்கித்
துள்ளென்ற சுட்டசட்டி விட்டாப்போலே தோற்றமாம் தேவதையை சத்தாய்க்காணே

விளக்கவுரை :


242. காணவே தேவதையை மனதிலெண்ணிக் கலங்காமல் மலைபோலே அசைவுமற்று
நீனவே தேவதைகள் காற்று போலென்று நிச்சயித்து ஒன்றாக நில்லுனில்லு
ஆனவே பத்துவித நிலைதானென்று அறிவொடே திடப்பட்டு திறத்தில்நில்லு
பூணவே சாதகத்தின் நிலையைக் கூட்டி உத்தமமாம் ஆரூட சமாதியாச்சே

விளக்கவுரை :

[ads-post]

243. சமாதியெல்லாம் பார்க்கும் முன்னே சாதகத்தைக்கேளு தம்பித்து வாசியைநீ பூட்டிமூட்டு
உமாதியாம் மூலங்கண்டு உரைத்தபின்பு யோகமெல்லாம் நவ்வொன்றா ஊட்டிப்பாரு
வமாதியாம் பயமெல்லாம் தள்ளிப்போட்டு வகையாகச் சமாதி ஐந்தும் வாய்க்கும்பாரு
நமாதியாய் நாலுமங்கே முன்னேத் தோன்றும் நாடினால் சமாதிக்கு முறை இதாமே

விளக்கவுரை :


244. முறையான மவுனமான சமாதிகேளு மொழிந்துநான் சொல்வதேது குருசொல்லக் கேளு
மறையான மாய்கையறு மனஞ்செம்மையாகு மாசற்றால் ராஜமென்ற யோகந்தானும்
அறையான மனஞ்சென்று அறிவில்கூடும் அதீதமதாங்கண்ட வெளிகாந்திகாணும்
பாறையா அதுக்கெல்லாம் படுதீபற்றும் பண்பான மவுனத்தை பரைகிறேனே

விளக்கவுரை :


245. பறையுறேன் அகாரமது மூலத்தில் நிற்கும் பண்பான உகாரமது கண்டத்தில் நிற்கும்
வரையிறேன் மகாரமது மனோன்மணியில் நிற்கும் வாகாக இழுத்தொன்றாய்க் கூட்டினாக்கால்
நிரையிறேன் மவுனமதறிவில் கூடுநின்றுரைக்கில் கண்டந்தான் உள்ளே கொள்ளும்
இறையிறேன் நடக்கையிலும் இருக்கையிலும் மைந்தா இருந்துரைக்க பிரபஞ்சமெல்லாம் எளிதாய்ப்போச்சே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 236 - 240 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

236. பாரென்று சொல்லுகையால் இரண்டுக்கும் பேதம் பண்பான நிருவிகற்ப சமாதிமார்க்கம்
தாரென்ற சஞ்சாரச் சமாதிகேளு சார்ந்துநின்ற நிருவிகற்பம் பட்டேயப்பா
பேரென்று எழுந்திருந்து பிரபஞ்சத்தைப் பார்த்து விரிவாக விவரிக்குங்காலமெல்லாம்
ஆகான்ற பிரபஞ்சமெல்லாம் சமுத்திரத்தில் நிற்கும் துறைபோல மாயம்தானே

விளக்கவுரை :


237. தானான மாயம்மூன்று கிலந்தியிட மலைபோல் தயங்குகின்ற கூர்மத்தின் அங்கம்போல்
ஆனான தோயமூற்ற ஆகாசம்போல் அழுத்துகின்ற சொர்ப்பனத்தின் நிலைபோலே
தானான நம்மிடத்தே உண்டாச்சையா தம்மிடத்தே இருந்துகொண்டு மாரபுக்கி
கானான அறிவழிந்து போறதானால் கலந்து நம்மைவிட ஒன்று காண்கிலேனே

விளக்கவுரை :

[ads-post]

238. காண்கிலேன் சகலமும் யானென்று நின்று கலந்து நாமொன்றல்லோ வேறொன்றில்லை
பூன்கிலேன் என்னிடத்தே பிறந்ததெல்லாம் பேயாகவழிந்தெல்லாம் எண்ணிலெய்தும்
என்கிலேன் என்னைவிட்ட தொன்றுமில்லை இயல்பாக உரைந்துநில்லு எந்நேரந்தான்
மாண்கிலேன் மனத்தோடு சந்தானத்து மருகியே உள்ளிட்டு உரைதல் நன்றே

விளக்கவுரை :


239. உரைத்திட்டார் சாதாரப் பயந்தான்வந்து உறப்பெரிய பிராமணன் உருப்பயந்தான் வந்து
மறைத்திட்டு மானபங்கம் அகத்தாய்வந்து மயக்கமாய்க் கண்முன்னே தேவதைகள்வந்தும்
குறைத்திட்ட குருவினுட கோபம்வந்தும் கோளுகையும் விகற்பமென்ற அறியரியுமாகி
பரைத்திட்டு பரிபாசம் அதில்பழிபோட்டு பதவிகற்க மனதிங்கே இல்லையென்னே

விளக்கவுரை :


240. என்னவே என்னிடத்தே ஒன்றும்காணேன் இயல்பாக நானொருவன் என்னில் எல்லாம்
பொன்னவே நான்கண்டதெல்லாம் பொய் பொய் பேரான சத்தியுட இந்திர ஜாலம்
மன்னவே மனமுரைந்து சஞ்சரித்தால் மகத்தான சஞ்சார சமாதியாச்சு
அன்னவே யாரூட சமாதிதன்னை பாய்ந்துமே சொன்னபடி அறிந்துகொள்ளே

விளக்கவுரை :



போகர் சப்தகாண்டம் 231 - 235 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

231. ஆச்சென்றத் துவல்ப சமாதிமுத்தி அறிவான நிருவிகற்பம் ஆகும்போது
நீச்சென்ற நிருவிகற்ப சமாதிக்குள்ளே நேரான விக்கினங்கள் நானதுண்டு
தூச்சென்றது எதுவென்றால் சொல்லக்கேளு சுருதிலயம் விட்சேமம் சட்சேமமாகும்
காச்சென்ற கரமாம் சுவாசமொன்று கருத்தூணிச் சொல்லுவது நாலுதானே

விளக்கவுரை :


232. நாலென்றது இதற்குள்ளே இடத்தைக்கேளு நனிந்துநின்ற நித்திரைதான் விட்சேபந்தான்
காலென்ற ராகமுறும் கலகத்தாலே கலந்துவரும் வாசியும் காரணத்தாலே
மாலென்ற மனோக ராஜ்ஜியத்தினாலே வருகுந்தான் சஞ்சேபம் நித்திரையுமல்ல
ஆலென்ற மனோக ராஜ்ஜியமுமல்ல அரவான சொருபங்கள் மறக்குமதுவே

விளக்கவுரை :

[ads-post]

233. அதுமறந்து இடமாக அகண்டுநிற்கும் அத்தியதில் ஆச்சரியம் சுவாசமாகும்
கதுநமக்கு மனமொழிந்த கணுவில்நின்ன கருதுகின்ற சுரூபத்தே சந்தோஷித்துச்
சதுமறந்து தனித்துயர்ந்த சமாதியுள்ளே தனித்துநின்ற ஆனந்தம் அனுபோகத்தைந்து
பறந்துபோம் நாலுவிக்கினமுமற்று நலமுற்ற சொரூபத்தில் லயிக்கநன்றே

விளக்கவுரை :


234. அயிக்கவே நன்றான அகண்டவிருத்திய நாதகாற்றில்லா விளக்குபோல
ஐயிக்கவே அலைச்சலற்றுத் தண்ணீருமுப்பம் அடக்கி நின்றவாறதுபோல அழுத்திநிற்கும்
தயிக்கவே பிரமன்மாலு ருத்திரனும் கேட்டுத் தனித்துமே வேற்றுருவாய்ப் பிரமன்தானும்
அயிக்கவே இப்படிதான் கடிகையொன்று யறுநேரம் கடிகையுற்றால் பதத்தைக்கேளே 

விளக்கவுரை :


235. கேளுமே அசுவாதி யாகங்கோடி கிருபைபண்ணி செய்ததோர் பலனுக்கொக்கும்
மூளுமே இப்படித்தான் சமாதி மூட்டில் முனையாகச்சுழுத்தியென்று எண்ணவேண்டாம்
கேளுமே சுழுத்திக்குச் சித்தந்தானும் திலங்கி நின்ற வஸ்துமே நசித்துப்போகும்
ஆளமே சமாதிக்கு நாம்பிரமம் என்று ஆண்மையாய் அதுவிருத்த இருக்கும்பாரே

விளக்கவுரை :


Powered by Blogger.