போகர் சப்தகாண்டம் 436 - 440 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

436. தானென்ற புழுகோடு உரமுங்கூட்டிச் சமரசமாய்க் கடுங்காரச் செயநீர்குத்தி
மானென்ற துரிசியின்மேல் கவசங்கட்டி வகையான சுண்ணாம்புக் குகையில் வைத்து
கானென்ற மேல்மூடிச் சீலைசெய்து கசபுடத்தில் போட்டெடுத்து ஆறவிட்டு
ஆனென்ற கவசத்தை உடைத்துப் பார்த்தால் அம்மம்மா கடுஞ்சுருக்குச் சுன்னமாச்சே

விளக்கவுரை :


437. ஆச்சப்பா துரிசியது குருவுமானால் அண்டரண்ட கடாகமெல்லாம் கிழிந்துபோகும்
மூச்சப்பா ஆடுமுன்னே நாகங்கட்டு மூதண்ட சவ்வீர மெழுகேயாகும்
பாச்சப்பா அண்டமெல்லாம் மெழுகாய்ப்போகும் பாஷானகுலமெல்லாம் வெண்மையாகும்
ஏசப்பா பனிநீரும் வெள்ளைநீரும் எடுத்துவந்தால் ஒன்றிரவில் கோடியாமே

விளக்கவுரை :

[ads-post]

438. கோடியென்று சொல்லுவதும் கொஞ்சம்கொஞ்சம் குறுக்காமல் எடுக்கலாம் அனேகவித்தை
மாடியென்றும் இளையாமல் சித்தியாகும் மாசித்தர் ஆட்டமெல்லாம் இதுதானல்லோ
நாடியென்றும் துரிசினால் சிங்கிபண்ணி நலமுற்ற குளிகைகட்டிச் சாரணைசெய்து
ஆடியென்றும் குளிகைதனை வாயில்வைத்து அண்டரண்ட பதமெல்லாம் பார்த்திட்டேனே

விளக்கவுரை :


439. பார்த்திட்டேன் அண்டத்தில் சித்தர்கோடி பரிவாக அவரைநீகண்டு பேசில்
மார்திட்ட குருவேது என்றாராகில் மகத்தான மூலரிட பேரனென்று சொல்லு
சேர்திட்டால் அஸ்திரமும் சூஸ்திரமும் கேட்பார் சிறப்பாகக் கக்கத்தில் இருக்குதென்று
கார்த்திட்ட குளிகையுட வேகங்கேட்கில் கண்ணிமைக்குள் கற்பமென்று புக்குமென்றுன்னே

விளக்கவுரை :


440. என்னவே சாரத்தை பண்டம்போல்சீவி இதமான அபினோடு மிளகு பூரம்
கன்னவே மேனிச்சார் அரைத்துப்பூசிக் கடுகவே ரவிதன்னில் உலரப்போடு
பன்னவே அதின்மேலேச் சரக்குத்தானும் பக்குவமாய் இறக்கியதில் கவசங்கட்டி
மன்னவே சாணாக்கில் சீலைசெய்து வகையாக வங்கத்தில் தோய்க்கக்கேளே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 431 - 435 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

431. மஞ்சளென்ற கெந்தகமே வெள்ளையாகும் மாசற்ற வீரமது சுன்னமாகும்
மஞ்சளென்ற லிங்கமது மெழுகேயாகும் ஆதியென்ற கல்லுப்பும் மணியுப்பாகும்
துஞ்சளென்ற உபசாரங்கள் ஈயமாகும் தொடுமுன்னே தேகமது விரைத்துப்போகும்
சுஞ்சலென்ற லோகங்கள் வெண்ணையாகும் காட்டிடவே நூற்றொன்றில் ஏமமாமே

விளக்கவுரை :


432. ஏமமே ஆச்சுதென்று புளகிக்க வேண்டாம் மெளிதாக மூலத்தையிருத்திப் பாரு
வாமயம கெதியாக அனுதினமும் போற்று வழியாறு தளமெல்லாம் கண்டுபாரு
தேவமே சமரசவாசலுக்குள்ளே புக்கிச் செப்பரிய மதியளவும் தொட்டுயேறு
காமமே கதியென்று விழுகவேண்டாம் கருத்தென்ற வாளினால் பொறியைவீசே

விளக்கவுரை :

[ads-post]

433. வீசிடவே பூரமென்ற நீரினாலே விளங்கியதோர் தாளகத்தில் சுருக்குப்போடு
தூசிடவே சவர்க்காரச் சுன்னம்தானும் துடியான பூரமென்ற சுன்னம் மூன்று
ஆசிடவே வெடியுப்பு நீரால் ஆட்டி அப்பிய தாளகத்தில் விரவிப்போடு 
வாசிடவே சுண்ணாம்புக் குகையில்வைத்து மண்செய்து ஊதிடவே சுன்னமாமே

விளக்கவுரை :


434. சுன்னமென்ற தாளகத்தில் வீரம்கூட்டித் துடியாக மத்தித்து வங்கத்தப்பி
கன்னமென்ற அண்டோடு கீழ்மேலிட்டு கடுகவே சுன்னமென்ற குகையில் ஊது
வன்னமென்ற வங்கமது சுன்னமாகும் வாதமென்ற கடைதிறக்கும் திறவுகோலாம்
சின்னமென்ற வேங்கையில் ஆடுபோன திடுக்கிட்டுச் சூடமது உண்டையாமே

விளக்கவுரை :


435. ஆமப்பா துரிசியொரு பலமேதூக்கு அதிகமென்ற பூதநீர் தன்னில் தோய்த்து
சேமப்பா ரவிதனிலே உலரப்போடு சிறப்பாக ஏழுநாள் ஆனபின்பு
தாமப்பா சவர்க்காரச் சுன்னமொன்று தயங்காத வீரமொன்று சுன்னமொன்று
வாமப்பா வங்கமொன்று பூரமொன்று வகையாக சூதமொரு காசுந்தானே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 426 - 430 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

426. ஆடவே உப்பென்ற சுன்னமொன்று அணைத்திடுநீ சாரத்தை ரண்டையுந்தான்
நீடவே கல்வத்தில் அரைநாற்சாமம் நேர்ந்த பின்பு சுன்னமென்ற குகையில்வைத்தூது
நாடவே கடுங்காரச்செயநீர்குத்தி நாள்மூன்று மத்தித்து ரவியில்வைப்பாய்
மூடவே ரவியில்வைக்கச் செயநீருமாகும் உத்தமனே இந்நீரின் ஓட்டங்கேளே

விளக்கவுரை :


427. கேளப்பா இந்நீரில் வீரச்சுன்னம் கெடியாக மத்தித்துப் பலந்தான்பூரம்
நாளப்பா பீங்கானில் பூரம்போட்டு நலமாகச் செயநீரை அதிலேவாரும்
நீளப்பா மூன்றுநாள் நிழலில்வைத்து நேர்பாக ரவிதனிலே ஐந்துநாள்போடு
வாளப்பா அரைத்துநன்றாய் பில்லைதட்டி வளமான சவர்க்காரச்சுன்னம்பூசே

விளக்கவுரை :

[ads-post]

428. பூசியல்லோ சுன்னமென்ற குகையில்வைத்து பொருந்தவே மேல்மூடிசீலைசெய்து
ஆசியல்லோ பீசானம் பூசைபண்ணி ஐந்தெருவில் புடம்போடப் பூரம்நீறும்
வாசியல்லோ கடுங்காரம் செயநீர்குத்தி மகத்தான ரவிதனிலே உலரப்போடு
தேசஇயல்லோ சிவகாமி சொன்ன மார்க்கம் செப்புகிறேன் அதின்வேகம் செப்புறேனே

விளக்கவுரை :


429. செப்பியதோர் பூரமது பலந்தான் ஒன்று தெள்வான சாரமது பலமுமொன்று
ஒப்பியதோர் இதுரெண்டும் கல்வத்தாட்டு ஓங்கியதோர் நெட்டெழும்ப மாட்டுமாட்டு
தப்பியதோர் சுண்ணாம்புக் குகையில் வைத்து சார்பாக மேல்மூடி சீலைசெய்து
அப்பியதோர் புடத்தைப்போட வெந்துநீராம் ஆச்சரியம் பனியில்வைக்கச் செயநீராமே

விளக்கவுரை :


430. ஆமப்பா இந்நீரில் வீரச்சுன்னம் அதட்டியே கலக்கிமெள்ளவைத்துக்கொண்டு
ஓமப்பா சரக்கான அறுபத்திநாலு முற்றும்மெள்ள மாட்டிடவே மணியுமாகும்
சாமப்பா சாரமது லவணமெல்லாம் ஷணத்திலே சுண்ணாம்பாய் விரிந்துபோகும்
வேமப்பா கண்டருமோ வெள்ளையாகும் வேதித்ததாளகத்தின் மஞ்சள்போமே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 421 - 425 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

421. போச்சென்ற உப்பினுட மெழுகைக்கேளு பேரானுவப்பதுவும் பலமுமொன்று
ஆச்சென்ற குகையில்நின்று உருகும்போது அப்பனே சாரமது பலமும்கால்தான்
நீச்சென்ற வெண்காரம் பலமும் கால்தான் நேரான கந்தகமும் பலம் அரைதான் சேர்த்து
காச்சென்ற சவர்க்கார நீரைவார்த்துக் குன்றியளவு உண்டைசெய்யே

விளக்கவுரை :


422. செய்த உண்டையுப்பு நின்று உருகும்போது சிதராமல் ஒவ்வொன்றாய்க் கொடுத்துவாநீ
மைதவுண்டை புகையாமல் உள்ளேவாங்கி மகிழாமல் உப்பதுவும் இப்பால்வாங்கிப்
பெய்தநவலோகத்தில் நூற்றுக்கொன்று போட்டிடவே தசமாற்றாய் நிற்கும்பாரு
ஐதவுப்புக் காவிக்கும் ஓடாதப்பா ஆச்சரியம் காயசித்தி சுருக்கம்பாரே

விளக்கவுரை :

[ads-post]

423. பாரிந்த மெழுகதனை குன்றியண்ணு பத்தியமாய்ப் புளியுப்புப் பெண்ணும்தள்ளு
காரிந்த நாற்பது நாள் உள்ளவரையில் வாழும் கனமான யோகத்தே நின்றுதேரு
சாரிந்த சட்டையொன்று தள்ளிப்போடும் சந்திரனோ சூரியனோ என்பார்பாரு
ஆரிந்தபடி செய்வார் நாதாக்கள் செய்வார் ஆச்சரியம் உலகத்தோர் பாஷாண்டிதானே

விளக்கவுரை :


424. தானென்ற உலகத்தோர்க்கு வாதமெய்தில் அத்தருவம் அயனாய்த்திரிந்து பெண்ணைச்சேர்ந்து
பானென்ற அமுதமுண்டு மற்றேயாகிப் பலநிலைவாய்க்கப் பழுத்துப்பாசமெய்தி
கோனென்ற குருவேது காயசித்தியேது குறிப்பான ஆதாரவழிதானேது
வானொன்றி யாடுகிற குளிகையென்ன வென்று வாய்ப்பேச்சாய்த் திரிந்துழன்று மருளுவானே

விளக்கவுரை :


425. மருளாமற் போகவல்லோ வாதஞ்சொன்னேன் மாண்டிறந்து போகாமல் காயசித்திச்சொன்னேன்
இருளான வெளிகான யோகஞ்சொன்னேன் ஏழுவகைக் காணவல்லோ குளிகைச்சொன்னேன்
அருளான மனமடங்க போதஞ்சொன்னேன் வாநந்தமாவதற்கு வஸ்துசொன்னேன்
பொருளான குருபதத்தில் தொண்டுபண்ணி போக்கோடே உப்பைமுந்திக் கட்டியாடே

விளக்கவுரை :


Powered by Blogger.