போகர் சப்தகாண்டம் 451 - 455 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

451. குறிப்பாக வெங்காரக் கட்டுகேளு கூறியது இதன்பெருமை சிவனுங்காணார்
நெரிப்பாகச் சத்தெலஃலாம் இதினாலல்லோ நேரான காமவிடாய் சத்துப்போச்சு
வெறிப்பான லோகங்கள் தம்மினத்துக்கெல்லாம் விரவியிதைவிட்டல்லோ கண்விட்டாடும்
கறுப்பாகம் கபாலல்லோ கார ஆட்டு கைவிட்டால் சரக்கெல்லாம் உட்கொள்ளாதென்னே

விளக்கவுரை :


452. என்னவே சாரமது பலகைபோல எடுத்துமே ஆவெருதின் சாணியாலே 
கன்னவே கழுவிநன்றாய் சுத்திபண்ணு கலங்காதே சவர்க்காரச் சுன்னம் வீரம்
என்னவே பூரமொடு மூன்று கேளு பதறாமல் கழஞ்சிவைதான் சாக்கிக்கொண்டு
தன்னவே மத்தித்து சாரநீரில் தயங்காதே ரவிதனிலே தோய்த்துப்போடே

விளக்கவுரை :

[ads-post]

453. போடவே தினமெழில் வெளிரிக்கட்டும் பூனைக்கண்போல வரவும் காணும்
ஆடவே நாகத்தின் செயநீர்க்குள்ளே அபாஞ்சி ரேக்கதனை மேலேசுற்றி
நிடவே தீபத்தில் வாட்டு நேர்ந்த நேரான அபஞ்சியைத்தான் சுளித்து வாங்கும்
மாடவே அருணனைப்போல் சிவப்பேயாகும் மாதளம்பூப் போலிருக்கும் மக்காள்பாரே

விளக்கவுரை :


454. பார்க்கவே நவலோகம் நூற்றுக்கொன்று பாச்சிடவே பதினாறு மாற்றுமாகும்
ஆர்க்கவே தினம்பணந்தான் உண்டாயானால் அருணனைப்போல் தேகமுமாம் கண்ணொளியேயீறும்
சேர்க்கவே காயமது கர்ப்பாந்தகாலம் திரையாமல் பண்ணிவைக்கும் நரையோயில்லை
சார்க்கவே சூதத்தை ஷணத்தில்கொல்லும் கண்ணிமைக்குள் பாஷாணம் சத்துமாமே

விளக்கவுரை :


455. சத்தான சாரநீர்க் குள்ளே மைந்தா தயங்காத சவர்க்காரச் சுன்னமிட்டும்
மகத்தான வீரமிட்டும் பூரமிட்டுப் பரிவாகப் பீங்கானில் வாங்கிக் கொண்டு
அத்தான அண்டமது அன்பத்தொன்று அதிகமென்ற மஞ்சளாய்க் கருவைவாங்கி
நித்தான சட்டியிட்டு அடுப்பிலேற்றி நினைவாக வருத்திடுவாய் கருகத்தானே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 446 - 450 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

446. பூசியே சுண்ணாம்புக் குகையில்வைத்துப் பொலிவாகப் புடம்போடப் பூப்போலாகும்
காசியென்ற நடுங்காரச் செயநீர்குத்தி கனமாக அண்டத்தின் மேலேபூசி  
தேசியென்ற சேர்த்துருக்க முன்னேவைத்து சிறப்பாக மூன்றுநாள் ரவியிற்போடு
தூசியென்ற மேலோடு ரண்டுசுருக்கூடும் சுழன்று வெந்து சுண்ணாம்பாய் நீறிப்போமே

விளக்கவுரை :


447. நீறியதில் வீரமென்ற சுன்னம்போட்டு நேர்ப்அகச் சாரநீர்விட்டு ஆட்டி
மாறியதில் நிமிளைதனை கவசங்கட்டி மகத்தான சுண்ணாம்புக் குகையில்வைத்து
தேறியதில் மேல்மூடிசீலைசெய்து சிறப்பாக கெசபுடத்தில் போடுநீயும்
ஆறியபின் எடுத்துப்பார் கடிதாம் சுன்னம் ஆகாரம் அதின் ஆண்மை அறிந்திலேனே

விளக்கவுரை :

[ads-post]

448. அறிந்திலேன் இச்சுன்னம் வீரச்சுன்னம் அப்பனே ரண்டையும்தான் சாரநீரால்
பிறிந்திலேன் மத்தித்துத் தங்கத்துக்கப்பி பேரானயண்டத்தோல் கீழ்மேலிட்டு
செறிந்திலேன் கெசபுடமாய் வெளியில்போடு சிறப்பான பரிதானும் சுன்னமாகும்
கறிந்திலேன் வாதமடம் திறந்துப்போச்சு கரைக்குள்ளாய் வாதமடம் சிக்கிப்போச்சே

விளக்கவுரை :


449. போச்சப்பா பரிதானும் சுன்னமானால் போட்டிட்டால் சூதமது கட்டிப்போகும்
நீச்சப்பா வாதமெல்லாம் கைக்குள்ளாகும் நிரைநிரைத் தாதுவெல்லாம் மணிபோலாடும்
காச்சப்பா தேகமது பொன்போலாகும் கண்டுகொள்ளு காயயித்தி சுருக்குமெத்த
வாச்சப்பா இத்தனையும் முப்பாலாச்சு மயங்காதே உப்பைமந்திக் கட்டியாடே

விளக்கவுரை :


450. ஆடவே வாசினையை அடித்துத்தள்ளு அப்பனே அஷ்டாங்கம் அறிந்துபாரு
போடவே கற்பமுண்டு காயசித்தியுண்டு புகழும் மனோன்மணித்தாயை நீராய்ப்பூசி
கூடவே குருபதத்தை தொண்டுபண்ணு குறிப்பாக கைமுறையும் இனமும்பாரு
நீடவே சத்துரு மித்துருவும்பாரு நினைவெல்லாம் வேதாந்தக் குறிப்பில்வையே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 441 - 445 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

441. கேளப்பா வங்கத்தைக் குகையிலிட்டு கெடியாக வருகையில் தோய்த்துவாநீ
வாளப்பா ஏழுதரம் தோய்த்துவாநீ வகையான காரமது சுத்தியாகும் 
தாளப்பா சவர்க்காரச் சுன்னவீரம் தயங்காத பூரமொடு மூன்றுங்கேளு
வேளப்பா வெடியுப்பு நீரைவார்த்து விரவியதை சாரத்தின் மேலேபூசே

விளக்கவுரை :


442. பூசியதைச் சுண்ணாம்புக் குகையில்வைத்துப் புடம்போட்டு எடுத்துப்பார் தவளநீராம்
ஆசியதைக் கடுங்காரச் செயநீர்குத்தி அப்பனே பனியில்வைக்கச் செயநீராகும்
தேசியதில் சரக்குகளில் சுருக்குப்போட செயமான மெழுகாகும் வேதையாகும்
ஆசியதை எண்ணாதே கற்பமுண்ணு அருணனைப்பொல் சிவப்பாகும் காயந்தானே

விளக்கவுரை :

[ads-post]

443. தானென்ற செயநீரில் வீரச்சுன்னம் சமரசமாய் பூரமொன்று சுன்னமொன்று
கானென்ற சவர்க்காரச் சுன்னம்தானும் கலந்தசெயநீரால் படிகைமேலே
வானென்ற தினந்தோறும் தோய்த்துத் தோய்த்து மகத்தான ரவிதனில் ஏழுநாள்போட்டு
பானென்ற வெடியுப்புச் சுன்னம்பூசப் பருவமாய் சுன்னமொரு குகையில்வையே

விளக்கவுரை :


444. வைத்துமே சீலைசெய்து புடத்தைப்போடு வாகாக எடுத்துப்பார் சீனச்சுன்னம்
கைத்துமே கடுங்காரச் செயநீர்குத்தி கணிதமாய்ச் சமனான சாரம்சேர்த்து
தைத்துமே கல்வத்திட்டு ஆட்டிச்சமமாகப் புடம்போடு எடுத்துக்கொட்டி
மைத்துமே பனியில்வைக்கச் செயநீராகும் மாசற்ற நீராலே எல்லாம்சாமே

விளக்கவுரை :


445. சாமென்ற நீரிலே வீரச்சுன்னம் தயங்காத பூரமென்ற சுன்னம்போட்டு
காமென்ற நீரிலே கலக்கிவைத்துக் கடுஞ்சூடன் பலமொன்றில் நீரைவார்த்து
ஆமென்ற நிழலிலே மூன்றுநாள் வைத்து அதன்பிறகு ஏழுநாள் ரவியில்போட்டு
வாமென்ற பில்லைபண்ணி உலரப்போட்டு மாசாரக்கல்லுப்பு சுன்னம்பூசே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 436 - 440 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

436. தானென்ற புழுகோடு உரமுங்கூட்டிச் சமரசமாய்க் கடுங்காரச் செயநீர்குத்தி
மானென்ற துரிசியின்மேல் கவசங்கட்டி வகையான சுண்ணாம்புக் குகையில் வைத்து
கானென்ற மேல்மூடிச் சீலைசெய்து கசபுடத்தில் போட்டெடுத்து ஆறவிட்டு
ஆனென்ற கவசத்தை உடைத்துப் பார்த்தால் அம்மம்மா கடுஞ்சுருக்குச் சுன்னமாச்சே

விளக்கவுரை :


437. ஆச்சப்பா துரிசியது குருவுமானால் அண்டரண்ட கடாகமெல்லாம் கிழிந்துபோகும்
மூச்சப்பா ஆடுமுன்னே நாகங்கட்டு மூதண்ட சவ்வீர மெழுகேயாகும்
பாச்சப்பா அண்டமெல்லாம் மெழுகாய்ப்போகும் பாஷானகுலமெல்லாம் வெண்மையாகும்
ஏசப்பா பனிநீரும் வெள்ளைநீரும் எடுத்துவந்தால் ஒன்றிரவில் கோடியாமே

விளக்கவுரை :

[ads-post]

438. கோடியென்று சொல்லுவதும் கொஞ்சம்கொஞ்சம் குறுக்காமல் எடுக்கலாம் அனேகவித்தை
மாடியென்றும் இளையாமல் சித்தியாகும் மாசித்தர் ஆட்டமெல்லாம் இதுதானல்லோ
நாடியென்றும் துரிசினால் சிங்கிபண்ணி நலமுற்ற குளிகைகட்டிச் சாரணைசெய்து
ஆடியென்றும் குளிகைதனை வாயில்வைத்து அண்டரண்ட பதமெல்லாம் பார்த்திட்டேனே

விளக்கவுரை :


439. பார்த்திட்டேன் அண்டத்தில் சித்தர்கோடி பரிவாக அவரைநீகண்டு பேசில்
மார்திட்ட குருவேது என்றாராகில் மகத்தான மூலரிட பேரனென்று சொல்லு
சேர்திட்டால் அஸ்திரமும் சூஸ்திரமும் கேட்பார் சிறப்பாகக் கக்கத்தில் இருக்குதென்று
கார்த்திட்ட குளிகையுட வேகங்கேட்கில் கண்ணிமைக்குள் கற்பமென்று புக்குமென்றுன்னே

விளக்கவுரை :


440. என்னவே சாரத்தை பண்டம்போல்சீவி இதமான அபினோடு மிளகு பூரம்
கன்னவே மேனிச்சார் அரைத்துப்பூசிக் கடுகவே ரவிதன்னில் உலரப்போடு
பன்னவே அதின்மேலேச் சரக்குத்தானும் பக்குவமாய் இறக்கியதில் கவசங்கட்டி
மன்னவே சாணாக்கில் சீலைசெய்து வகையாக வங்கத்தில் தோய்க்கக்கேளே

விளக்கவுரை :


Powered by Blogger.