போகர் சப்தகாண்டம் 706 - 710 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

706. ஆமப்பா சிற்பரைதான் சொல்லவேண்டாம் அதிகமாய்ப் பொன்னுனக்குத் தாரோமென்று
வேமப்பா வெள்ளியைத்தான் உருகச்சொல்லி விரைந்த மூவாயிரத்திற் காசெடைதான் போட்டார்
தாமப்பா மாற்றதுவும் இருபாதாச்சு சாதகமாய் குளிகையிட்டு மறைந்திட்டாரே
சேமப்பா தவசியெங்கே என்றுகேட்கத் தேடியெங்கும் பார்த்திட்டுத் திகைத்திட்டாரே

விளக்கவுரை :


707. திகைத்திட்டு வந்துசொன்னார் சோழன்முன்னே சிவசிவாவென்றுசொல்லி வாயைப்பொத்தி
நகைத்திட்டு சிற்பருக்கு வெகுமானஞ்செய்து நாதாக்கள்மகிமைசொல்ல எவரால்கூடும்
மிகைத்திட்டு விடுதிக்குப் போனார்சோழன் வேண்டியாதோர் கெந்தகத்தின் சத்துவேகம்
பகைத்திட்டு சித்தரூபங்களுக்கும் சொன்னேன் பாரிதுக்குள் செந்தூரஞ்செய்யக்கேளே

விளக்கவுரை :

[ads-post]

708. கேளப்பா கட்டியதோர் சூதமொன்று கொடியாக உருகையிலே சத்துவொன்று
நீளப்பா தங்கமொன்று நாகமொன்று நேராகவுருக்கி ஒருமணியாய்வாங்கி
வேனப்பா கல்வத்தில் பொடியாய்ப்பண்ணி விளங்கிநின்ற தாளகமும் சிலையுமொன்று போட்டு
நாளப்பா பொற்றலையின் சாற்றாலாட்டி நலமாகத் தெல்லுப்பொல் வில்லைபண்ணே

விளக்கவுரை :


709. பண்ணியதோர் வில்லைதன்னை அகலிலிட்டு பாய்ச்சியே மூடியொருசீலைசெய்து
கண்ணியே பத்தெருவிற்புடத்தைப்போடு கண்கொள்ளா வருணன்போல் செந்தூரமாகும்
கண்ணியே செந்தூரம் ஆயிரத்துக்கொன்று நாட்டிடவே பதினாறு மாற்றுமாகும்
புண்ணியமே செய்தவர்க்கு செந்தூரமாகும் பொல்லாத துரோகிக்கு எய்தவாறே

விளக்கவுரை :


710. வாறுகேள் செந்தூரங் குன்றியுண்ணு மண்டல்ந்தான் அந்திசந்தி மறவாமல்நீயும்
தேறுகே தேகமது செப்புத்தூணாம் சிதறடித்தால் மலைகளெல்லாம் தவிடுபொடியாகும்
சாறுகேள் கத்தியிலே வீசினாக்கால் கனீரென்று வெங்கலத்தின் ஓசையாகும்
நாறுகேள் நரமெல்லாம் சிவந்து காணும் நாதாக்கள் சித்தியெல்லாம் இதற்குள்ளாச்சே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 701 - 705 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

701. வார்த்துமே அடுப்பேற்றி வில்லைதட்டி வாகான கமலம்போல் எரிநேர்ப்பாக
ஏர்த்துப்பொறுத்த பதந்தன்னில்வாங்கு யிருபுவிமுந்துருத்தியிட்டுச் சரவுலையிலூது
பேர்த்துமே மணிமணியாய்ச் சத்துவிழும் பேராகக் கட்டையெல்லாம் சோதித்துவாங்கி
கார்த்துமே முன்போலக் காரங்கூட்டி கலங்காதே ஐந்துதரம் ஊதிடாயே

விளக்கவுரை :


702. ஊதியே சத்தெல்லாம் ஒன்றாய்ச்சேர்த்து உத்தமனே வெண்காரம்கூடக்கூட்டி
காதியே ஐங்குதுகையிலிட்டுருக ஆட்டிக்கனமான அப்பிரேகம் சாய்த்தாப்போல
சாதியே சாய்க்காக்கால வருணன்போலத் தயங்காதே சத்தாகும் கெந்திசந்து
வாதியே இதைக்காணப் போறார் மாண்பர் மாசற்றநாதாக்கள் ஆடும்ஆட்டே

விளக்கவுரை :

[ads-post]

703. ஆட்டான கெந்தகத்தின் சத்துவேகம் ஆரறிவார் சிவயோகி அல்லார்காணார்
நீட்டான அம்பலத்தில் சோழன்றாலும் நிலைத்த நடராசரைத்தான் வார்க்கச்சொன்னார்
பூட்டான சிற்பர்கள்தான் கருக்கட்டி வார்த்தார்பின்பு போகவுமே சிற்பரேங்கி  
கூட்டான மனதுநொந்து திகைக்கும்போது கொடுமூலநாயனங்கே வந்திட்டாரே

விளக்கவுரை :


704. வந்திட்டு சிற்பரைதான் வரவழைத்து மனக்குறைதான் என்ன சொல்லு மைந்தாவென்ன
மெந்திட்டு விக்ரகம் வார்க்கவார்க்க வின்னமாய்ப் போடுதென கெய்வோமென்ன
கெந்திட்ட மனதுகண்டு திருமூலர்தாமும் நொடிக்குள்ளே வார்த்திடுநீ என்றுசொல்லிக்
கந்திட்டுக் காசெடைதான் செம்பையீந்தார் கடுகவே சிற்பருந்தான் வார்த்திட்டாரே 

விளக்கவுரை :


705. வார்த்திடவே தங்கமெல்லாம் செம்பாய்ப்போச்சு மனம்புண்ணாய் நிற்குறப்போ சோழன்வந்தார்
ஏத்திடவே விக்கிரகம் வார்ப்பித்தாயோ எடுத்துவா என்றிடவே கொண்டுமுன்வைத்தார்
பார்த்திடவே தங்கமெல்லாம் எடுத்துக்கொண்டு பரிவாகச் செம்பாலே வார்த்தாயென்று
வேர்த்திடவே ஆக்கினைதான் பண்ணச்சொன்னார் வடுபட்டார் சோழன்முன்னே நாயன்தாமே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 696 - 700 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

696. கூட்டியெல்லாம் பொற்றலையின் சாற்றாலாட்டி குறிப்பாகப் பொடிபண்ணி குப்பரக்கேற்றி
ஆட்டியே வாலுகையின் மேலேவைத்து மறுசாமமானபின்பு கடுந்தீப்போடு
நீட்டியே பனிரண்டு சாமமானால் நிலைத்துநிற்கும் மாதளம்பூ நிறத்தைப்போல
வாட்டியே நவலோகம் நூற்றுக்கொன்றீய மாற்றெண்ண பனிரண்டாம் பணவிடைதானுண்ணே

விளக்கவுரை :


697. உண்ணவே மண்டலந்தான் அந்திசந்தி உத்தமனே யுகாந்தவரை இறுத்துந்தேகம்
தண்ணவே இருட்டரையில் இருந்தாயானால் சந்திரனோ சூரியனோ யென்பார்பாரு
கண்ணவே மேனியது கஸ்தூரிவீசும் கமலம்போல் கால்கைரண்டு மிருதுவாகும்
எண்ணவே கற்பமெல்லாம் படிப்படியாய்யேறு இருந்துபார் சமாதிக்குள் கற்பமொன்றே

விளக்கவுரை :

[ads-post]

698. ஒன்றான கெந்தகந்தான் பலமோபத்து உத்தமனே சுத்திபண்ணி அயச்சட்டியிட்டு
கன்றான குமரிச்சோர் கீழ்மேலுமிட்டு கலறவே கொதிப்பாக நாலுசாமம்  
பன்றான பழச்சாறு சுருக்குப்போடு பருவமாய்ப் புங்கம்பால் நாலுசாமம்
கன்றான நிழலுலர்த்திக் கல்வத்திட்டுக் கடுகவே பொடிபண்ணி மாந்துளிரின்சாறே

விளக்கவுரை :


699. சாறதினால் எண்சாமமட்டு ஆட்டு தயங்குமணித்தக்காளிச் சாற்றாலாட்டு   
யேறதினால் மந்தாரைப் வெள்ளைப்பூவைப் பிசைந்தரைச்சாற்றினால் எண்சாமமாட்டு
வாறதினால் புளிப்பான மாதளையின் பழந்தான் வகையான சாறதினால் எண்சாமமாட்டு
தேறதினால் தாமரைப்பூச் சாற்றாலாட்டி சிறப்பாகக் காந்தமைந்து பலந்தான்போடே  

விளக்கவுரை :


700. போடவே வெண்காரம் பலந்தானைந்து புகழான குடோரியொரு பலமும்போடு
நீடவே குன்றிமணிக் கட்டுவுப்பு நிலைக்கவொரு பலம்போட்டு ஆகலையின்பாலால்
வாடவே எண்சாமமாட்டிப்பின்பு வகையாகவில்லைதட்டி யுலரப்போட்டு
நாடவே நல்லெண்ணெய் பலந்தானொன்று நயமான அயச்சட்டிக்குள்ளேவாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 691 - 695 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

691. உலர்ந்தபின்பு வங்கமென்ற தாதொத்தாலூனு உத்தமனே சரவுலையில் வைத்துவூது
அலர்ந்தபின்பு அப்பிரேகம் சத்தாய்வீழும் ஆராய்ந்து சத்தெல்லாம் பொருக்கிக்கொண்டு
கலர்ந்தபின்பு காடெடுத்துக் கல்வத்தாட்டி கலங்காதே முன்போலே மருந்தரைத்துக்கூட்டி
நலர்ந்தபின்பு வில்லைதட்டிச் சரவுலையிலூது நலமாக அப்பிரேகம் சத்துமாமே

விளக்கவுரை :


692. ஆமப்பா காடெடுத்து மூன்மருந்துகூட்டி அரைத்துநன்றாய் வில்லைதட்டி ஐந்துதரமூது
ஓமப்பா சத்தெல்லாம் ஒன்றாய்ச்சேர்த்து உத்தமனே வெண்காரம் சரியாய்க்கூட்டித்
தாமப்பா குகையிலிட்டு உருக்கிநன்றாய் சாய்க்கவே நல்லெண்ணெய் தேங்காய்ப்பாலும்
காமப்பா இலுப்பைப்பூ நெய்யுந்தேனும் கலந்தொன்றாய் மத்தித்து சாய்த்திடாயே

விளக்கவுரை :

[ads-post]

693. சாய்த்திடவே மூன்றுதரம் கன்மிசங்கள்போகும் தங்கமது ரண்டுக்கு அப்பிரேகம்காணும்
மாய்த்திடவே ரண்டுமொன்றாய் உருக்கிக்கொண்டு பரிவாக மெழுகுகட்டி கிண்ணிதாரு
மாய்ந்திடவே சீலையது திறமையாச்செய்து வானுகைமேல்வைத்து அதற்குசூதம்பாரு
சாய்த்திடவே கருமத்தஞ்சாருவிட்டு கிண்ணிக்கிதமாக வைத்திடவே வெண்ணெயாவே

விளக்கவுரை :


694. வெண்ணெயெல்லா வழித்துமொரு மொத்தையாக்கி மேலானகுளிந்ததண்ணீரில்போட்டு
திண்ணெய்தாய் உருகியது கல்லுப்போலாம் சேர்ந்தெடுத்து ஆரையிலைகவசங்கட்டி
தண்ணெயா யவிர்ப்புடமாய்ப் பத்துபோட்டு தயங்காதே மத்தங்காய்க் குள்ளேவைத்துப்போடு
விண்ணெயாய் விராலியிலைக்குள்ளேபோடு விதமான விராலியிலைக்குள்ளேபோடே

விளக்கவுரை :


695. போட்டெடுத்துச் சூடனுட தீயில்வாட்டிப் புகழாக கரண்டியிலெண்ணெய்குத்தியுருக்கி
ஆட்டெடுத்து வொன்றுக்கு நாலுதங்கம் அழகாகச் சூதத்தில் பாதிநாகம்
நீட்டெடுத்து உருக்கியொன்றாய் மணியாய்வாங்கி நேர்ப்பாகக் கல்வத்தில்பொடித்துநன்றாய்
தொட்டெடுத்து சத்தித்த கெந்திதானும் துரிசாக சூதயிடை கெந்திகூட்டே

விளக்கவுரை :


Powered by Blogger.