போகர் சப்தகாண்டம் 471 - 475 of 7000 பாடல்கள்
471. பாரப்பா அடுக்குகளிற்
புத்திகொள்வார் பாய்ந்துபோய்நீயங்கே தடவப்போறாய்ச்
சேரப்பா பாட்டருட
மணியைவாங்கி திறமாகப் பார்ப்பமென்று
வாயில்வைத்து
காரப்பா அண்டத்திற் புக்கிப்போனால் கடுகவொருமணி
வாயில்வைத்துப் பாட்டர்
தூரப்பா கேதனத்தில்
தேடிப்பார்த்தார் சுற்றியெங்கும் காணாமல் திகைத்திட்டாரே
விளக்கவுரை :
472. திகைத்திட்டுக் குகையில்வைத்து சீஷருக்குச் செப்பினார் கேசரத்தில்
ஆடும்போது
பகைத்திட்ட
சித்தர்கள்தான் அநேகங்கோடி
பாசிக்கும் குளிகையைதான் கேட்பார்மக்கள்
நகைத்திட்டு அவர்கையில்
ஈயவேண்டாம் நம்போலே ஏளிதயாய்ப் போகவேண்டாம்
புகைத்திட்டார் பாட்டர்சொல்லக்கேட்டே இனியானும் போய்மக்காள்
புத்திகொண்டு பிழைத்திட்டாரே
விளக்கவுரை :
[ads-post]
473. பிழைத்திட்டு
குளிகைகட்டி யோகம்பார்த்து பேரானகாயத்தை
சுத்திபண்ணி
குழைத்திட்டு ஆத்தாளை பூசைபண்ணிக் கூறரிய வஸ்துசுத்தி பானம்பண்ணி
அழைத்திட்டு வாசியைத்தான்
அங்கென்றூணி அடுக்காறு தளத்தில்நிற்கும் அச்சமுங்கண்டு
வழைத்திட்ட சாந்திதனில் அமுர்தத்தையுண்டு வழியோடே மனதூன்றிப் பாருபாரே
விளக்கவுரை :
474. பார்த்திடவே தங்கமொன்று
உருகும்போது பரிவான சூதமொன்று காரத்தோடீய்ந்து
கார்திடவே நாகமொன்று
கொடுத்துவாங்கிக் காணிதுக்கு சமனாககெந்திகூட்டி
ஆர்த்திடவே தாளகமும்
சிலையும் வீரம் அழகாக நாலிலொன்று கூடக்கூட்டி
மார்த்திடவே கல்வத்தில்
இதனைவிட்டு மல்லிகையினிலைச் சாற்றில் அரைத்திடாயே
விளக்கவுரை :
475. அரைத்திடுவாய்
தினமூன்று சாறுவிட்டு அழகாகப் பொடியாக்கிக்
குப்பிக்கேற்றி
நிரைத்திடுவாய் வாலுகையின்
அடுப்பிலேற்றி நேர்பாகத்
தீயெரிப்பாய் பனிரெண்டுசாமம்
விரைந்திடுவாய் ஆயிபதம்
பூசைபண்ணி வெகுளாதே எடுத்துப்பார் அருணன்போலாம்
கரைத்திடுவாய் ஆயிரத்துக் கொன்றேயீயக் கைகண்ட மாற்றென்ன இருபத்தஞ்சே
விளக்கவுரை :