போகர் சப்தகாண்டம் 616 - 620 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

616. தமரிட்டு உண்டைபண்ணி அதிலேபோட்டு சாதகமாய் மூன்றுதினம் கழிந்தபின்பு
அமரிட்ட செம்பட்டில் கோர்த்துக்கொண்டு ஆதியாம் பராபரியைபூசைபண்ணி 
கமரிட்ட வஸ்துசுத்தி அர்ச்சனையேசெய்து காரணமாம் சாம்பவி விமோசனமேபண்ணி
குமரிட்டு ஆதாரம் நிராதாரம் பார்த்து கொள்கியதோர் சபைதன்னில் மனதையுண்ணே

விளக்கவுரை :


617. உன்னிய பிரசத்தம் கேளாப்பக்கம் உவந்திருந்து நிஷ்டையிலே ஜபமேசெய்து
கன்னிய அஞ்செழுத்து மூன்றெழுத்தும் ஓதி காரணமாம் குருசொல்ல வுறுதிகேட்டு
மன்னியே மதியில்நின்று அமுதத்தையுண்ண பரிதிகண்ட பனிபோல பாவம்நீங்கி
மன்னியே சிலம்பொலி நாதம்கேட்டு மகிழ்ச்சியாய் கற்பமதை உண்டுதேறே

விளக்கவுரை :

[ads-post]

618. தேறியே காந்தசத்து பலத்தைவாங்கிச் சிவப்பாகத் தங்கத்தை இடைக்கிடையேகூட்டி
மாறவே ரெண்டுமொன்றாய் புகும்போது மைந்தனே நாகமொரு பலத்தைப்போடு
ஆறவே கல்வத்தில் இதனைக்கொட்டி அதட்டியே பொடிபண்ணி சூதம்சேர்த்து
காரவே ரெண்டுபலம் கெந்தியிட்டுக் காரியமாய் பொற்றலையின் சாற்றாலாட்டே

விளக்கவுரை :


619. ஆட்டியே அறுசாமம் ரவியில்வைத்து அப்பனே பொடிபண்ணி குப்பிக்கேற்றி
நீட்டியே வானுகையின் மேலேவைத்து நினைவாகத்தீ போட்டு பனிரண்டுசாமம்
பூட்டியே செந்தூரப்பதத்தைப் பாரு புகழாகச் சலாகைநுனி கருப்புகாணும்
வாட்டியே ஆறவிட்டு இறக்கிக்கொட்டி மைந்தனே தங்கமென்ற சிமினில்வையே

விளக்கவுரை :


620. வைக்கவே நவலோகம் நூற்றுக்கொன்று மாட்டிடவே பனிரண்டு மாற்றுமாகும்
மெய்க்கவே பணவிடைதான் தேனிலுண்ண மேனியெல்லாம் தங்கமாகும்பாரு
நைக்கவே நரைதிரை எல்லாம்மாறும் நமனென்ற சொல்லுமில்லை கற்பகோடி
சைக்கவே புளியுப்பு இரண்டும்விட்டு கன்னியின் மேலாசைவிட்டு உண்ணு உண்டே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 611 - 615 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

611. போட்டபின்பு எடுத்துஅதைக் கல்வத்தாட்டி புகழான கொள்ளிலையின் சாற்றினாலே
நீட்டபின்பு கல்வத்தில் சாறுவிட்டு நினைவாக அதற்குள்ளே காந்தம்வைத்து
வாட்டபின்பு மேல்மூடிச்சீலைசெய்து வலியபுடம் போட்டெடுத்துவைத்துக்கொண்டு
நாட்டபின்பு நல்லெண்ணை படிதானொன்று நலமான குன்றிமணி படியரைதான்போடே

விளக்கவுரை :


612. போட்டதனைக்குள்சாற்றில் ஊறவைத்து புகழாக ஊறியபின் கல்வத்தாட்டி
நீட்டதனை மெழுகதுபோல் அரைத்துவாங்கி நினைவாக நல்லெண்ணெய்தனில்போட்டு
ஆட்டதனை யெலியாலம்பால் சேரைவிட்டு அழகான கொள்ளிலைசாறு சேரைவிட்டு
கேட்டபின்பு கெந்தகந்தான் நாலுபலம் போட்டு கெடியான வெண்காரம் ரண்டுபலம்போடே

விளக்கவுரை :

[ads-post]

613. போட்டப்பா குடோரியொரு பலமுங்கால்தான் பொடித்தெல்லாம் கொள்ளிலையின் சாற்றாலாட்டி
நாட்டப்பா நல்லெண்ணெய்தன்னிற்போட்டு நலமாக அடுப்பேற்றி யெறிநேராக
கூட்டப்பா குழம்பாகி இறக்கிவைத்து கொடியதொரு காந்தத்தில் பிசறிகொண்டு
மூட்டப்பா மூன்றுநாள் ஆனபின்பு மூச்சைக்கே எடுத்திட்டு உருக்கிடாயே

விளக்கவுரை :


614. உருக்கவே வெந்துருகிக் கரடுமாகும் உத்தமனே உடைத்தெடுத்துப் பொடியாய்ப்பண்ணி
தருக்கவே முன்குழம்பிற் பிசறிவைத்துச் சாதகமாய் முன்போலே உருக்கித்தீரு
பருக்கவே இப்படிதான் ஏழுமூது பண்பான காந்தமது சத்தேயாகும் 
இருக்கவே கற்பாந்த காலமென்றால் என்மகனே மெழுகுகட்டி கிண்ணிவாரே

விளக்கவுரை :


615. வார்த்திந்த கிண்ணியிலே பாணம்பண்ணி வகைவகையாய் கற்பமெல்லாம் அதிலேயுண்ணு
போர்த்திந்த கிண்ணியிலே சூதம்வார்த்து புகழான கருவூமத்தம் சாறுவிட்டு
பேர்த்திந்த வானுகையின் மேலேவைத்து மருபமாய்த் தீயெரிக்க வுண்டையாகும்
பார்த்திதனை வழித்தெடுத்து கழஞ்சிநிறையாக பக்குவமாய் உண்டைபண்ணித் தமரும்போடே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 606 - 610 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

606. வைத்துமே மூன்றுநாள் ஆனபின்பு வஜ்ஜிரமாம் குகைதன்னில் அடைத்துமூடி
மொய்த்துமே சரவுலையில் வைத்துவூத பேரான அயந்தானும் உருகியாடும்
நைத்துமே பொடியாக்கித் தயிலத்தில் பிசறிநலமாக முன்போலவுருக்கித்தீரு
தைத்துமே தாமுருக்கித்தீர்ந்தால் கனமான அயந்தானும் நாகந்தானே   

விளக்கவுரை :


607. நாகமாம் அயந்தானும் சிவந்திருக்கும் நண்பாக இடைக்கிடைதான் தங்கத்திலீய்ந்து
பாகமாயுருகையிலே நாகமீயப் பதையாமல் நாகமங்கே கட்டிப்போகும்
சாகமாம் கல்வத்தில் இதனையிட்டு தனைப்பொடித்து நாகயிடைச் சூதங்கட்டி
ஆகமாம் சூதத்தில் ரெட்டிகெந்தி அரைத்துமே மல்லிகையின் சாற்றாலாட்டே

விளக்கவுரை :

[ads-post]

608. ஆட்டுவது நாகரசமானபின்பு அப்பனே ரவியில்வைத்து பொடியாய்ப்பண்ணி
பூட்டுவது காசிபென்ற மேருக்கேற்றி பேரானவானுகையில் மேலேவைத்துக்
காட்டுவாய் பனிரண்டுசாமம் தீயைக்கமலம்போல் எறியிட்டுக் கலரவாங்கி
ஊட்டுவது நவலோகம் நூற்றுக்கொன்று உட்புகுந்து பத்தரைதான் தப்பாவாறே

விளக்கவுரை :


609. வாறுகேள் செந்தூரம் குன்றியுண்ணு மண்டலத்தில் நரைதிரைகளெல்லாம் மாறும்
கூறுகேள் தேகமது கருங்கல்லாகும் குத்தினால் மலைகளெல்லாம் பொடியாய்ப்போகும்
தேறுகேள் தேகமது வுவர்ந்தகாலம் சென்றாலும் பதினாறுவயது போலாகும்  
வேறுகேள் வாசியெல்லாம் உள்ளெநிற்கும் வெளியோடே மனங்கப்பண்ணும்பாரே  

விளக்கவுரை :


610. பண்ணவே காந்தத்தின் சத்துகேளு பருக்கையாய்ப்பொடித்து அயச்சட்டியிட்டு
குண்ணவே கொள்ளிலையின் சாறுவாங்கிக் குன்றாதே நால்சாமம் சுறுக்குப்போடு
விண்ணவே வெள்ளாட்டு உதிரம்வார்த்து விளங்கவே அதின்தோலில் வைத்துகட்டி
கண்ணவே குழிவெட்டி குப்பைக்குள்வைத்து கலங்காதே இருபதுநாள் மூடிப்போடே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 601 - 605 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

601. வருதல்கண்டு கருவாயின் பட்டைதன்னை வகையாகத் தூள்பண்ணி தயிலம்வாங்கி
திருகல்கண்டு படிதானும் கூடவிட்டு சிறப்பான புட்டான பதத்திற்காய்ச்சி
கருதல்கண்டு இறக்கியே ஆறவிட்டுக் கசகாமல் உளிகொண்டு வெட்டிவாங்கி
அருகல்கண்டு பரணிதனில் அடைத்துப்போடு ஆச்சரியம் சூடனென்ற பேருமாச்சே

விளக்கவுரை :


602. ஆச்சிந்த சூடனைத்தான் பொடியாய்ப்பண்ணி அகண்டசெம்புபானைதனில் கால்வாசிபோட்டு
பாச்சிந்த செம்பினுட சூடத்துநீரை பக்குவமாய் மேல்வைத்துச் சீலைசுற்றி   
காச்சிந்த அடுப்பேற்றிக் கமலம்போல கையொருக்கத் தண்ணீரை பதத்தைப்பார்த்து
கீச்சிந்த ஆவிவிடுத்துப் பார்க்க கிண்ணியென்ற கற்பூரமாகும்பாரே

விளக்கவுரை :

[ads-post]

603. பாரப்பா கிண்ணியென்ற கற்பூரத்தில் பக்குவமாய்க் கட்டினதோர் சரக்கையெல்லாம்
வாரப்பா பரிசுற்றி வாட்டென்றதெல்லாம் மைந்தனே இதினுடைய தீயில்வாட்டு
நேரப்பா புகையடங்கி பரியுள்ளவாங்கி நேர்ப்பாகச் செந்தூரமாகும்பாரு
காரப்பா விளக்குதான் கற்பூரவிளக்கு கருகாமல் சிவக்குமிந்த தீபந்தானே

விளக்கவுரை :


604. தானென்ற அயமுருக்கு வித்தைகேளு சாதகமயெலியாலம்பால் ரண்டுசேரில்
கானென்ற கெந்தகத்தைப் பொடியாய்ப்பண்ணி கனமான நாலுபலம் கூடப்போட்டு
லவனென்ற வெண்காரம் பலமும்ரண்டு மெலிவான குடோரி கால்பலமும்போடு
ஊனென்ற செவ்வல்லிக் கிழங்குதானும் உரலிலிட்டு இடித்துச்சார் சேரவாரே 

விளக்கவுரை :


605. வார்த்துடனே யெள்ளெண்ணை ரெண்டுசேரு வாகாக வுதுவெல்லாம் அயச்சட்டிலிட்டு
பேர்த்துடனே அடுப்பேற்றி யெறித்துமெள்ளப் பொங்காமல் தயிலமென்ற பதத்தில்வாங்கு
சேர்த்துடனே யரப்பொடிதான் பலமும்நாலு திறமான காந்தத்தால் எடுத்துக்கொண்டு
ஏர்த்துடனே பீங்கானில் பொடியைப்போட்டு இதமாகத் தயிலத்தில் பிசறிவையே

விளக்கவுரை :


Powered by Blogger.