போகர் சப்தகாண்டம் 636 - 640 of 7000 பாடல்கள்
636. பொடியாவதேதென்றால்
சொல்லக்கேளு பேரான பொற்கொன்றைப் பூவினோடு
கொடியான மல்லிகையின்
பூவினோடு கொக்கிறகு மந்தாரை வெள்ளைப்பூவும்
அடியாக நிழலுலர்த்தாய்
உலர்த்திக்கொண்டு அப்பனே பொடித்துநன்றாய்ச் சூரணமேசெய்து
கொடியான தேனதனில்
குழைத்துயுண்ணு நேர்பாகமாலையிலே மண்டலந்தானுண்ணே
விளக்கவுரை :
637. மண்டலந்தானுண்டபின்பு
சொல்லக்கேளு வாகான தூதுவளை இலையினோடு
விண்டலந்தான்
தக்கோலஞ்சாதிக்காயு மேலான வாலுழுவைவித்தினோடு
குண்டலந்தான் கொடிவேலி
பொற்கொன்றைப்பூவு கூரான நிலப்பனையின் கிழங்குசூட்டி
முண்டலந்தான்பொடிசெய்து
வைத்துக்கொண்டு மூக்கழஞ்சு முட்பன்றி நெய்யில்கொள்ளே
விளக்கவுரை :
[ads-post]
638. கொள்ளவே வதத்தைக் கறிப்போடு
கொடிதான பித்தமெல்லாம் முறிந்துபோகும்
கள்ளவே சிரசில்நிற்கும்
கற்பத்தை சாடுஞ்சங்கிலைபோல் கோழையறுந்தமர்ந்திருக்கும்
விள்ளவே மதிதன்னில்
அமுதஞ்சேர்க்கும் மெய்நிறைந்து ஆடியெல்லாம் இறுகிக்கொள்ளும்
துள்ளவே இந்திரியச்
சேறுபொங்கும் துடியாதே காமநோய்க் கொல்லுந்தானே
விளக்கவுரை :
639. கொல்லுகிற காமத்தை
மதியிலேற்று குறிபார்த்து தளங்களெல்லாம் கூர்ந்துபாரு
வொல்லுகிற மனக்குரங்கு
அஞ்சகொப்பிற்றாண்ட விடுகாதே யோகமென்ற வாளால்வீசு
மல்லுகின்ற யோகத்தை
சதாநித்தம் பகரு மதியினிற்கும் மூதத்தைச்சிந்தியுண்ணு
அல்லுகிற ஆத்தாளை
நித்தம்பூசி பரிவில்நின்ற குருபதத்தை யடுத்துக்கேளே
விளக்கவுரை :
640. கேளப்பா கரிசாலை குப்பைமேனி
கொடியான கரந்தையொடு வல்லாரைநீலி
வாளப்பா பொற்றலையின்
சமூகமோடு வகையாக நிழலுலர்த்த உலர்த்திக்கொண்டு
தாளப்பா இடித்துநன்றாய்
சூரணமேசெய்து சாதகமாய் வெகுகடிதான தேனிலுண்ணு
கேளப்பா கட்டியதோர் வேசம்போல
கெணத்திலே காயசித்தி இருவேளையுண்ணே
விளக்கவுரை :