போகர் சப்தகாண்டம் 651 - 655 of 7000 பாடல்கள்
651. போக்கான கிளிமூக்குமாவொன்றுண்டு புகழான கிளிபோலே காயும்காய்க்கும்
வாக்கான இலையதுவும்
அரசிலைபோல்காணும் மைந்தனே இதனுடைய பழத்தையுண்ணு
நோக்கான கெவுனவழி
சறுக்காபோடும் நொடியிலே காயசித்தி கிடைக்குமப்பா
போக்கான பூப்பூத்த பத்துநாள்
பழமாம் புண்ணியராம் சித்தருக்கு எய்தும்வாறே
விளக்கவுரை :
652. வாறுகேள் இடத்தோல்வேர்
பட்டைவாங்கி மருவநன்றாய் நிழலுலர்த்திச் சூரணமேசெய்ய
பேறுகேள் பலம்நாலு
நிறுத்திக்கொண்டு பேச்சரிய சூதமதுபலந்தான் நாலு
தாறுகேள் கல்வத்தில்
இதனைப்போட்டு சாதகமாய் மல்லிகையின் சாறுவிட்டு
தேறுகேள் எண்சாமம்
அரைப்புமைபோல் தேன்வார்த்து வுண்டைசெய்து வைத்துக்கொள்ளே
விளக்கவுரை :
[ads-post]
653. வைத்ததொரு மருந்தெடுத்து
அந்திசந்தி வகையாக மண்டலந்தான் உண்டாயானால்
கைத்ததொரு பித்தமது
கபத்தைச்சாடும் கசடான ஆறுதளம் திறந்துபோகும்
வெய்த்ததொரு வாதமெண்பதுவும்
போகும் மேலான சிலேத்துமமும் அகன்றுபோகும்
வித்ததொரு சரசோதி
நிர்த்தஞ்செய்வாள் வினைபோல் ஒளியாகும் வாக்குத்தானே
விளக்கவுரை :
654. தானென்ற
பொற்சீந்தியானால்நன்று சாதகமாய் சிகப்புநன்று கிடையாவிட்டால்
பானென்ற நற்சீந்தி
மேல்தோலைப்போக்கி மருந்தண்டாய்க் கொண்டுவந்து கிழித்துப்போட்டு
கோனென்ற நிழலுலர்த்தி
சூரணமேசெய்து கூறானகற்கண்டு சமபாகஞ்சேர்த்து
வேனென்ற ஒருகடித்தூள்
அந்திசந்தி வெகுளாதே மண்டலமும் உண்டுபாரே
விளக்கவுரை :
655. பாரப்பா மேகமென்ற
தெல்லாம்போகும் பரிவாக வாதபித்தம் பக்குவமாகும்
சேரப்பா கபாலத்தின்
வெட்டைபோகும் செகமறிய அட்டசர வேகம்போகும்
காரப்பா தாதுமூற்றும்
தழைக்குந்திரேகம் சதிரான ஆறுதளம் வன்னிமீதும்
பேரப்பா சிந்திக்கு
சாவேயில்லை பேரின்ப சாஸ்திரத்தைப் பேணிப்பாரே
விளக்கவுரை :