போகர் சப்தகாண்டம் 706 - 710 of 7000 பாடல்கள்
706. ஆமப்பா சிற்பரைதான்
சொல்லவேண்டாம் அதிகமாய்ப் பொன்னுனக்குத் தாரோமென்று
வேமப்பா வெள்ளியைத்தான்
உருகச்சொல்லி விரைந்த மூவாயிரத்திற் காசெடைதான் போட்டார்
தாமப்பா மாற்றதுவும்
இருபாதாச்சு சாதகமாய் குளிகையிட்டு மறைந்திட்டாரே
சேமப்பா தவசியெங்கே
என்றுகேட்கத் தேடியெங்கும் பார்த்திட்டுத் திகைத்திட்டாரே
விளக்கவுரை :
707. திகைத்திட்டு வந்துசொன்னார்
சோழன்முன்னே சிவசிவாவென்றுசொல்லி வாயைப்பொத்தி
நகைத்திட்டு சிற்பருக்கு
வெகுமானஞ்செய்து நாதாக்கள்மகிமைசொல்ல எவரால்கூடும்
மிகைத்திட்டு விடுதிக்குப்
போனார்சோழன் வேண்டியாதோர் கெந்தகத்தின் சத்துவேகம்
பகைத்திட்டு
சித்தரூபங்களுக்கும் சொன்னேன் பாரிதுக்குள் செந்தூரஞ்செய்யக்கேளே
விளக்கவுரை :
[ads-post]
708. கேளப்பா கட்டியதோர்
சூதமொன்று கொடியாக உருகையிலே சத்துவொன்று
நீளப்பா தங்கமொன்று
நாகமொன்று நேராகவுருக்கி ஒருமணியாய்வாங்கி
வேனப்பா கல்வத்தில்
பொடியாய்ப்பண்ணி விளங்கிநின்ற தாளகமும் சிலையுமொன்று போட்டு
நாளப்பா பொற்றலையின்
சாற்றாலாட்டி நலமாகத் தெல்லுப்பொல் வில்லைபண்ணே
விளக்கவுரை :
709. பண்ணியதோர் வில்லைதன்னை
அகலிலிட்டு பாய்ச்சியே மூடியொருசீலைசெய்து
கண்ணியே
பத்தெருவிற்புடத்தைப்போடு கண்கொள்ளா வருணன்போல் செந்தூரமாகும்
கண்ணியே செந்தூரம்
ஆயிரத்துக்கொன்று நாட்டிடவே பதினாறு மாற்றுமாகும்
புண்ணியமே செய்தவர்க்கு
செந்தூரமாகும் பொல்லாத துரோகிக்கு எய்தவாறே
விளக்கவுரை :
710. வாறுகேள் செந்தூரங் குன்றியுண்ணு மண்டல்ந்தான் அந்திசந்தி மறவாமல்நீயும்
தேறுகே தேகமது
செப்புத்தூணாம் சிதறடித்தால் மலைகளெல்லாம் தவிடுபொடியாகும்
சாறுகேள் கத்தியிலே
வீசினாக்கால் கனீரென்று வெங்கலத்தின் ஓசையாகும்
நாறுகேள் நரமெல்லாம் சிவந்து
காணும் நாதாக்கள் சித்தியெல்லாம் இதற்குள்ளாச்சே
விளக்கவுரை :