போகர் சப்தகாண்டம் 726 - 730 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

726. பார்க்கவே கெந்தகந்தான் பலமும்மூன்று பரிவான வெண்காரம் பலமுமைந்து
ஏர்க்கவே இதைவிற்று செலவுசெய்து வெளிதான வீரமதுபலமுமொன்று 
கார்க்கவே குடோரியது பலமுமொன்று கல்வத்திலிட்டெல்லாம் பொடியாய்ப்பண்ணி
சேர்க்கவே முன்மருந்திலொக்கப்போட்டு சிறப்பாகக் குழம்பான பதத்தில்வாங்கே

விளக்கவுரை :


727. வாங்கியே காந்தத்தில் பிசறிக்கொண்டு வளமான சரவுலையில் வூதுவூது
தாங்கியே காட்டோடு சத்தாய்வீழும் தப்பாமல் சத்தெல்லாம் பொருக்கிக்கொண்டு
தேங்கியே கரடெடுத்துத் தயிலத்தில்பிசறிச் செப்பரியநாளத்தால் ஊதித்தீரு
பங்கியே ஐந்துதரம் ஊதித்தீரு பரிதிபோல் செம்பாக நிறமுமாச்சே

விளக்கவுரை :

[ads-post]

728. செம்பான காந்தமது பலந்தாநாலு திறமானதங்கமது பலந்தானொன்று
கம்பானநாகமது பலந்தானொன்று கருதியதோர் கட்டான சூதமொன்று
நம்பான இதுநாலும் உருக்கிக்கொண்டு நலமாகக் கல்வத்தில் பொடியாய்ப்பண்ணி
கொம்பான குலாமல்லிச் சாற்றாலாட்டி கூறவேமுன்னநாள் ரவியிற்போடே

விளக்கவுரை :


729. போட்டுவா முன்சொன்ன சூதத்திலாட்டி பெரிதான கெந்தகத்தைச் சுத்திப்போடு
கேட்டுவா பொடிபண்ணி மேறுக்கேற்றி கெடியான வானுகையில் மேலேவைத்து
நாட்டுவா பனிரன்டு சாமந்தீயை நலமாகஆறவிட்டு எடுத்துப்பாரு
காட்டுவாய் மாதளப்பழம் பூப்போலேயாகும் சாத்திரத்திற் கொண்டாடும் வேதைதானே

விளக்கவுரை :


730. தானென்ற செந்தூரங்குன்றியுண்ணு சாதகமாய் மண்டலத்திற் சட்டைகக்கும்
கோனானகாயமெல்லாம் சிவந்துமின்னும் கெடிதான நாகமெல்லாம் பவளம்போலாம்
பானான வஸ்துவுண்டால் லாகிரியில்லை பாஷானவர்க்கங்கள் கறிசோறாகும்
ஊனான சடந்தானும் கோடிகாணும் உத்தமனே சமாதியிலே இருக்கலாமே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 721 - 725 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

721. கொள்ளாத அயச்செம்பு பலந்தானாறு குறிப்பான தங்கமொன்று நாகமொன்று
விள்ளாத ஈயமொன்று உருக்கியாட்டி விரவிடுநீ கல்வத்தில்பொடியாய்ப்பண்ணி
அள்ளாத சூதமது பலந்தானொன்று அசடில்லா கெந்தகந்தான் பலமும்நாலு
தள்ளாத மாளிகையின் சாற்றாலாட்டி துடியாகவெண்சாமம் ரவியிற்போடே  

விளக்கவுரை :


722. போட்டெடுத்து பொடியாக்கி மேருக்கேற்றி புகழான வானுகையின் மேலேவைத்து
ஆட்டெடுத்து பனிரண்டுசாமந்தீயை ஆறவிட்டு பார்த்தாக்கால் செந்தூரமாகும்
பூட்டெடுத்து ஆயிரத்துக்கொன்றுபோடு புகழாகப் பதினாறுமாற்றுகாணும்
நீட்டெடுத்து மண்டலந்தான் தினங்குன்றியுண்ணு நேரானசட்டைகக்கிப் பாலையாமே

விளக்கவுரை :

[ads-post]

723. ஆமென்ற காந்தமது பலந்தான்பத்து அப்பனேகுன்றிபோல் உடைத்துக்கொண்டு
காமென்ற செம்பிலிப்பால் படிதான்நாலு கலரவிட்டு சுருக்கிடுநீ நாலுசாமம்  
தாமென்ற கல்வத்தில் செம்பிலிப்பால் விட்டுத்தாக்கி அரைநால்சாமம் புடத்தைப்போடு
ஆமென்ற பாலாலே யரைத்தரைத்து அப்பனே ஐந்துபுடம் போட்டுத்தீரே

விளக்கவுரை :


724. தீர்ந்தபின்பு பொடியாக்கி சட்டியிட்டு செம்பிலியின் ரோமமது பலந்தான்பத்து
ஆய்ந்தபின்பு சுருக்கிட்டு ரோமந்தன்னை அப்பனே தயிலத்தில் பிரட்டிப்போடு
காய்ந்தபின்பு ரோமத்தின் தயிலமெல்லாம் கரியோடே வாரிவைத்து கருத்தைக்கேளு
தேய்த்தபின்பு கருங்குன்றிச் சாறதுவும்படிதான் சிறப்பான கொள்ளிலைசார் படிதானொன்றே

விளக்கவுரை :


725. ஒன்றானபொன்னினாவாரையின்சாறு உயர்ந்த ஆதளையின்பால் படிதானொன்று
கன்றான செவ்வல்லிக்கிழங்கு சார்படிதான் கார்த்திகையின் கிழங்குசார்படிதானொன்று
தின்றான புளிபரணைக்கிழங்குச்சாறு சிறப்பான நல்லெண்ணெய்ச் சமனாக்கூட்டி
நன்றான அடுப்பேற்றி கமலம்போல் எரித்து நலமாக்குழம்பான பதத்தில்பாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 716 - 720 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

716. கட்டியே அஞ்செருவிற் புடத்தைப்போட்டு கைம்முறையாய் ஆறவிட்டு எடுத்துப்பாரு
தட்டியே மாதளம்பூப்போலேயாகும் தனையெடுத்து ஆயிரத்துக்கொன்றேபோடு
மட்டியே மாற்றென்ன பதினாறுகாணும் மைந்தனே பணவிடைதான் பாலிலுண்ணு
நாட்டியே காயமது இரும்புத்தூணாம் என்னென்ன கடித்தாலும் செத்துப்போமே

விளக்கவுரை :


717. போமென்ற அயத்தினுட செம்புகேளு புகழான ரோமமது எள்ளெண்ணெய்த்தோய்த்து
வாமென்ற அயச்சட்டிக்குள்ளேயிட்டு அப்பனே மூன்றுபத்து பலத்தைப்போடு 
காமென்ற யரப்பொடிதான் பலமோபத்து கைம்முறையாய் யறைப்பொடியை பிசறிவைக்க
தேமென்ற அடுப்பேற்றி ரோமத்தின்தயிலம் சிறப்பாகயுண்ண பிரட்டித்தீரே

விளக்கவுரை :

[ads-post]

718. தீரென்று ரோமமெல்லாம் கரியாகுமட்டும் செய்முறையாய் யரப்பொடியைப்பரட்டிவாங்கி
காமென்ற கரியோடே வைத்துக்கொண்டு கார்த்திகையின் கிழங்கதுவும் பலமும்பத்து
சேரென்ற செவ்வல்லிக் கிழங்குபத்து செர்த்திடித்து சாறுவொருபடியும்வாங்கி
ஆரென்ற ஆதளையின் பாலைவார்த்து அழகான எள்ளெண்ணெய்படிதான் வாரே 

விளக்கவுரை :


719. வார்த்தெல்லாம் குழம்புபோல் வருதல்கண்டு வகையான வெண்காரம் பலந்தானைந்து
சேர்த்தெல்லாம் துரிசியொரு பலந்தானைந்து தேசில்லாக் கந்தகந்தான் பலமும்மூன்று
சேர்த்தெல்லாம் பொடியாக்கி யெண்ணெயிலேபோட்டு கொதிப்பித்துக் குழம்பான பதத்தில்வாங்கி
கார்த்தெல்லாம் வழித்துவொரு கல்வத்திட்டு கைம்முறையாய் யரைப்பொடியைப் பிசிறிவையே

விளக்கவுரை :


720. வையப்பா ரோமமென்ற கரியினோடே மயங்காதே குகையிலிட்டு மாட்டியூது
தெயப்பா மணிமணியாய் இறங்கும்பாரு தனையெடுத்து முன்போல் தைலத்தில்பிசறி
கையப்பா அஞ்சுதரம் உருக்கித்தீரு கசடற்ற வெள்ளிபொன்போல் கண்விட்டாடும்
மையப்பா கசடற்ற செம்பேயாகும் வயதையிதில் முடிவுசொல்லி விண்கொள்ளாதே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 711 - 715 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

711. ஆச்சப்பா மயூரத்தின் செம்பெடுக்க அறைகிறேன் நானறிந்தமட்டுந்தானும் 
வாச்சப்பா மயிலிறகு கொண்டுவந்து வளமாக திரிதிரித்து நல்லெண்ணெய்தோய்த்து
நீச்சப்பா கட்டெடுத்து கரியாய்ப்பண்ணி நிலைக்கவொரு சேருமட்டும் நிறுத்துகொண்டு
தேச்சப்பா கல்வத்திலிதனைப்போட்டுத் தூரியாகக் காரமொரு பலந்தானஞ்சே

விளக்கவுரை :


712. அஞ்சான வெண்காரம் பலந்தானஞ்சு ஆதியாங்குடோரியொரு பலமுங்கொண்டு
நஞ்சான வீரமொரு பலமும்மூன்று நாயகமாம் கல்லுப்புப் பலமுமொன்று   
பிஞ்சான குன்றிமணி யெள்ளுமொச்சை பேசாதே யொவ்வொன்று பலமும்போட்டு
கஞ்சான வாதளையின் பாலைவார்த்து கடுகியே திரைமூன்றுநாள் வில்லைகட்டே

விளக்கவுரை :

[ads-post]

713. கட்டியே வில்லைதன்னை நாளத்தூதிக் கட்டோடே மணிமணியாய் ரவிதனினிற்கும்
ஒட்டியேதே செம்பெல்லா மெடுத்துக்கொண்டு ஓகோகோ காடெல்லா முன்போலூது
தெட்டியதோரைந்துதரம் மருந்திட்டு தெல்லிப்போல் வில்லைதட்டி வூதுவூது
யெட்டியதோர் செம்பெல்லாம் காரமிட்டு பாட்டியே காரமுன்போல் சாய்த்திடாயே 

விளக்கவுரை :


714. சாய்த்திடவே செம்பாலே சூதங்கட்டும் சமுசயங்களெண்ணாதே பாஷாணஞ்சாகும்
மாய்த்திட்ட அரவமது தீண்டாதையா மகத்தான விஷங்களொன்றுங் கிட்டாதப்பா
பாய்த்திட்ட செம்போடே தங்கஞ்சேர்த்து பாங்கான கைவளைகள் பண்ணுபண்ணு
காய்திட்ட குண்டலங்கள் விக்கிரகம்பண்ணு காட்டினுள்ளே சித்தரெல்லாம் தரிப்பார்பாரே

விளக்கவுரை :


715. பாரப்பா மயூரத்தின் செம்புஒன்று பாங்கான தங்கமொன்று நாகமொன்று   
சேரப்பா மூன்றுமொன்றாயுருக்கிக்கொண்டு செயலான சூதத்தைபொங்கக்கூட்டி
காரப்பா கல்வத்தில் பொடியாய்ப்பண்ணி கசடற்ற கந்தகத்தைப் பாதிகூட்டு
வாரப்பா செருப்படையின் சாற்றாலாட்டி வளமாக கல்லுபோல் வில்லைதட்டே  

விளக்கவுரை :


Powered by Blogger.