721. கொள்ளாத அயச்செம்பு
பலந்தானாறு குறிப்பான தங்கமொன்று நாகமொன்று
விள்ளாத ஈயமொன்று
உருக்கியாட்டி விரவிடுநீ கல்வத்தில்பொடியாய்ப்பண்ணி
அள்ளாத சூதமது பலந்தானொன்று
அசடில்லா கெந்தகந்தான் பலமும்நாலு
தள்ளாத மாளிகையின்
சாற்றாலாட்டி துடியாகவெண்சாமம் ரவியிற்போடே
விளக்கவுரை :
722. போட்டெடுத்து பொடியாக்கி
மேருக்கேற்றி புகழான வானுகையின் மேலேவைத்து
ஆட்டெடுத்து
பனிரண்டுசாமந்தீயை ஆறவிட்டு பார்த்தாக்கால் செந்தூரமாகும்
பூட்டெடுத்து
ஆயிரத்துக்கொன்றுபோடு புகழாகப் பதினாறுமாற்றுகாணும்
நீட்டெடுத்து மண்டலந்தான்
தினங்குன்றியுண்ணு நேரானசட்டைகக்கிப் பாலையாமே
விளக்கவுரை :
[ads-post]
723. ஆமென்ற காந்தமது
பலந்தான்பத்து அப்பனேகுன்றிபோல் உடைத்துக்கொண்டு
காமென்ற செம்பிலிப்பால்
படிதான்நாலு கலரவிட்டு சுருக்கிடுநீ நாலுசாமம்
தாமென்ற கல்வத்தில்
செம்பிலிப்பால் விட்டுத்தாக்கி அரைநால்சாமம் புடத்தைப்போடு
ஆமென்ற பாலாலே யரைத்தரைத்து
அப்பனே ஐந்துபுடம் போட்டுத்தீரே
விளக்கவுரை :
724. தீர்ந்தபின்பு பொடியாக்கி
சட்டியிட்டு செம்பிலியின் ரோமமது பலந்தான்பத்து
ஆய்ந்தபின்பு சுருக்கிட்டு
ரோமந்தன்னை அப்பனே தயிலத்தில் பிரட்டிப்போடு
காய்ந்தபின்பு ரோமத்தின்
தயிலமெல்லாம் கரியோடே வாரிவைத்து கருத்தைக்கேளு
தேய்த்தபின்பு கருங்குன்றிச்
சாறதுவும்படிதான் சிறப்பான கொள்ளிலைசார் படிதானொன்றே
விளக்கவுரை :
725. ஒன்றானபொன்னினாவாரையின்சாறு
உயர்ந்த ஆதளையின்பால் படிதானொன்று
கன்றான செவ்வல்லிக்கிழங்கு
சார்படிதான் கார்த்திகையின் கிழங்குசார்படிதானொன்று
தின்றான
புளிபரணைக்கிழங்குச்சாறு சிறப்பான நல்லெண்ணெய்ச் சமனாக்கூட்டி
நன்றான அடுப்பேற்றி
கமலம்போல் எரித்து நலமாக்குழம்பான பதத்தில்பாரே
விளக்கவுரை :