போகர் சப்தகாண்டம் 726 - 730 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 726 - 730 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

726. பார்க்கவே கெந்தகந்தான் பலமும்மூன்று பரிவான வெண்காரம் பலமுமைந்து
ஏர்க்கவே இதைவிற்று செலவுசெய்து வெளிதான வீரமதுபலமுமொன்று 
கார்க்கவே குடோரியது பலமுமொன்று கல்வத்திலிட்டெல்லாம் பொடியாய்ப்பண்ணி
சேர்க்கவே முன்மருந்திலொக்கப்போட்டு சிறப்பாகக் குழம்பான பதத்தில்வாங்கே

விளக்கவுரை :


727. வாங்கியே காந்தத்தில் பிசறிக்கொண்டு வளமான சரவுலையில் வூதுவூது
தாங்கியே காட்டோடு சத்தாய்வீழும் தப்பாமல் சத்தெல்லாம் பொருக்கிக்கொண்டு
தேங்கியே கரடெடுத்துத் தயிலத்தில்பிசறிச் செப்பரியநாளத்தால் ஊதித்தீரு
பங்கியே ஐந்துதரம் ஊதித்தீரு பரிதிபோல் செம்பாக நிறமுமாச்சே

விளக்கவுரை :

[ads-post]

728. செம்பான காந்தமது பலந்தாநாலு திறமானதங்கமது பலந்தானொன்று
கம்பானநாகமது பலந்தானொன்று கருதியதோர் கட்டான சூதமொன்று
நம்பான இதுநாலும் உருக்கிக்கொண்டு நலமாகக் கல்வத்தில் பொடியாய்ப்பண்ணி
கொம்பான குலாமல்லிச் சாற்றாலாட்டி கூறவேமுன்னநாள் ரவியிற்போடே

விளக்கவுரை :


729. போட்டுவா முன்சொன்ன சூதத்திலாட்டி பெரிதான கெந்தகத்தைச் சுத்திப்போடு
கேட்டுவா பொடிபண்ணி மேறுக்கேற்றி கெடியான வானுகையில் மேலேவைத்து
நாட்டுவா பனிரன்டு சாமந்தீயை நலமாகஆறவிட்டு எடுத்துப்பாரு
காட்டுவாய் மாதளப்பழம் பூப்போலேயாகும் சாத்திரத்திற் கொண்டாடும் வேதைதானே

விளக்கவுரை :


730. தானென்ற செந்தூரங்குன்றியுண்ணு சாதகமாய் மண்டலத்திற் சட்டைகக்கும்
கோனானகாயமெல்லாம் சிவந்துமின்னும் கெடிதான நாகமெல்லாம் பவளம்போலாம்
பானான வஸ்துவுண்டால் லாகிரியில்லை பாஷானவர்க்கங்கள் கறிசோறாகும்
ஊனான சடந்தானும் கோடிகாணும் உத்தமனே சமாதியிலே இருக்கலாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar