போகர் சப்தகாண்டம் 786 - 790 of 7000 பாடல்கள்
சாதிலிங்கவைப்பு
786. தானென்ற சாதிலிங்கவைப்புகேளு
சாற்றறிய சூதமது பலந்தானூறு
தேனென்ற கெந்தகந்தான்
இருபத்தைந்து நேர்ப்பாக கெந்தகத்தை ஓட்டிவிட்டு
வானென்ற கணவில்வைத்து
உருக்கிக்கொண்டு வரிசையாய்ச் சூதத்தை அதிலேபோட்டு
தானென்ற அயத்துடுப்பால்
கிண்டிக்கிண்டுக் கறுப்பாகத்தூள்போலே ஆகும்பாரே
விளக்கவுரை :
787. ஆகுமப்பா கெந்தகத்தில் நாலத்தொன்று அசையாதே வெடியுப்புப்பொடித்துப்போடு
வாகுமப்பா
செம்பாலேகுடம்போலான வகையாகவதற்குள்ளே தூளைப்போடு
ஏகுமப்பா அரைவாசி
மட்டும்போடு எழிலான வானுகையின்மேலேவைத்து
போகுமப்பா தீயெரிப்பா
யெட்டுநாள்தான் புகழான பதங்கித்து லிங்கமாமே
விளக்கவுரை :
[ads-post]
788. ஆமப்பா பதங்கித்துப்
பவளம்போலே அசையாதுமேல்நின்றததுதான் லிங்கம்
போமப்பா
பாண்டமதுசெம்புத்தொட்டி புகழான அடியில்நின்றால் தீமுறுகலாச்சு
காமப்பா நடுவில்நின்றால்
கார்முகிலுமாச்சு கடுகியிதில்மெழுகுசெய்யில் வேதையாகும்
சேமப்பா ஷானமுப்பத்திரண்டு
சிறப்பானவைப்புக்கு நாலுமாச்சே
விளக்கவுரை :
789. வைப்பான நாகமென்ற பாஷானத்தை
வகையாகசொல்லுகிறேன் வேதையாக
மெய்ப்பான
நாகமதுபலந்தான்பத்து விரவியே இலுப்பைநெய்யில் சுத்திசெய்து
வைப்பான தகடுகட்டிப்
புளியிலைபோல்நறுக்கி நயமானகூத்தனென்ற யிலையரைத்து
கைப்பான தகட்டுக்குக்
கவசங்கட்டி கடுகியைந்து வெருவிலே புடத்தைப்போடே
விளக்கவுரை :
790. போட்டபின்பு யீரைந்து
புடந்தானப்பா புகழான அயச்சட்டித்தனிலுருக்கி
நீட்டபின்பு குமரிவேர்
பொடியாய்நறுக்கி நிற்வாகக் கூடவிட்டுஅயத்தால் கிண்டு
மூட்டபின்பு பனிரண்டுசாமந்தானு
முத்தமனே வேர்போட்டுக்கிடைக்கிண்ட
மாட்டபின்பு
மஞ்சள்நிறபற்பமாகும் மைந்தனேயிதைநிறுத்துக் கல்வத்திற்போடே
விளக்கவுரை :