போகர் சப்தகாண்டம் 896 - 900 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

896. நிறமான கெந்தகத்தில் வேகம்பட்டால் நினைக்குமுன்னே சூதமதுயேமமாகும்
மறவான லோகத்தில் பரிசிக்கவேதை யானுண்டகற்பமிது யானுங்கொண்டேன்
திறமான தங்கமது செம்புமாகுஞ் சேர்ந்தநவலோகத்தில் யிரத்துக்கோடும்
குறமாது மாமியுட நாதமப்பா கொண்டாக்கால் கடிகையிலே சித்தியாமே

விளக்கவுரை :


897. சித்தியாந் தேவருக்கும் ஐந்துபூதம் ஜெகத்திலுள்ள சித்தருக்கும் ஐந்துபூதம்
முத்தியாம் ஊர்வனமும் ஐந்துபூதம் உயர்ந்துநின்ற விருட்சமெல்லாம் ஐந்துபூதம்
புத்தியாம் பாம்பினமும் ஐந்துபூதம் போக்கான ஐந்தினாலெல்லாமாச்சு
பத்தியாம் வாதத்தில் பஞ்சபட்சி பாஷாணவைப்புதனைப் பாடினேனே

விளக்கவுரை :

[ads-post]

898. பாடினேன் வடமொழியைப்பிரித்துப்பார்த்து பரிவாக ஆத்தாளைக் கேட்டுகேட்டு
ஓடினேன்குளிகையிட்டு நாதாக்கள் பதத்தில் உகந்தடுமை யாகியல்லோ வாதம்பார்த்தேன்
வாடினேன் மனமிளைத்து வாதம்பார்த்து பயக்கமெல்லாம் குருசொல்ல மனதிலெண்ணி
நாடினேன் உலகக்தோர் நம்மைபோல நவிந்துயான் வெளியாகத் திறந்திட்டேனே

விளக்கவுரை :


899. திறந்திடாதிருந்தாக்கால் சரக்குவைப்பை ஜெகத்திலே வாதம்பொய்யாகுமென்று
இறந்திடாதிருக்க வெளியாகச்சொன்னேன் ஏழைமதிபோகாதே பார்க்கவென்றால்
மறந்திடாக் கருவையெல்லாம் உன்னிப்பாரு மாயமாம் வாசினையால் மனம்புண்ணாகும்
பிறந்திடாதிருக்கவென்றால் காயசித்திபண்ணு பெரியோர்கள் பதம்போற்றிக் கருவைக்கேளே

விளக்கவுரை :


900. கருவென்ன தாளகமும் பலமுமைந்து காந்தளப்பூப்போலான பூநீறைந்து
உருவென்ன லிங்கமது பலமுமைந்து உயர்த்தியாய் சிலையதுவும் பலமுமைந்து
குருவென்ன கெவுரியது பலமுமைந்து கூட்டியெல்லாம் கல்வத்திற்பொடியாய்ப்பண்ணி
திருவென்ன செங்கீரைச்சாறுவிட்டு சிறப்பாக வேழுநாள் அரைத்திடாயே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 891 - 895 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

891. தானானமாந்துளிரும் குமரிவேரும் தயங்குமணித் தக்காளிசாணாக்கியோடு
பானான புளியாரைப் பத்துங்கேளு பாங்காக வெவ்வேறாய்ப் படிதான்சாறு
கோனாகவார்த்து வொவ்வொன்றாய்க் கலக்கிக்கொண்டு கொடியதொரு யிந்திரமாங் கோபப்பூச்சி
தேனானபூநாகம் ரண்டுங்கேளு தேசிக்காயளவரைத்து கீடப்போடே

விளக்கவுரை :


892. போடவே வெடியுப்பு சீனம்ரண்டு பொலிவாக வகைக்குமொரு பலமும்போட்டு
வாடவேபசுவின்பால் படிதானைந்து மாசற்ற எலுமிச்சப் பழச்சாறுசேரே
தேடவே கலக்கியொன்றாய் வைத்துக்கொண்டு திறமாகச் சட்டியிலே படிதான்வார்த்து
நீடவே சீலைகட்டி அதின்மேற்கெந்தி நினைவாகப் பரப்பியல்லோ மேற்கட்டிமூடே

விளக்கவுரை :

[ads-post]

893. மூடியே சீலைசெய்து குருதான்கெல்வி முயற்சியாய்ச் சட்டிதனைப்புதைத்துப்போடு
நாடியே மேற்சட்டி தெரியவிட்டு நழுகாமல் புடம்போடு பத்தெருவிலப்பா
தேடியே ஆறவிட்டு எடுத்துப்பாரு சிறப்பாக உருகியெல்லாம் சாறுதனில்நிற்கும்
வாடியே மணியெல்லாம் பொருக்கிக்கொண்டு மறுபடியும் சாறொக்கப்படிதான்வாறே

விளக்கவுரை :


894. படிச்சாறு வார்த்துமே மறுசீலைகட்டிப் பாங்காக மணியெல்லாம் பொறுக்கிவைத்து
துடியாக பரப்பியே மேற்சட்டிமூடி துப்புரவாய்ச் சீலைசெய்து புடத்தைப்போடு
அடிச்சாறு வற்றவற்ற மறுவாறுவார்த்து அதட்டியே இருபத்தொன்றுபோடு
கடிதுதள்ளிவிட்டு மணியெல்லாம் பொறுக்கிக் கழுவியே தண்ணீரில் ரவியிற்போடே

விளக்கவுரை :


895. போட்டபின்பு எடுத்ததனை கல்வத்திலிட்டு பொடிபண்ணிக்கல்வத்தில் மயில்நெய்வார்த்து
பூட்டபின்பு வாலுகையின்மேலேவைத்து பொருந்தவே தீமூட்டிக்கமலம்போல
நாட்டபின்பு காடாக்கிநி நாலுசாமம் நலமாகத் தீயாக்கினி யாறுசாமம்
கேட்டபின்பு நாற்சாமம் ஆறவிட்டு எரிக்கச்சிவசிவா மாதளம்பூ நிறம்போலாமே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 886 - 890 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

886. சாட்டியே கல்வத்திலிதனைப்போட்டுத் தயங்காமல் பொடிபண்ணிக் காட்டுச்செம்பு
நீட்டியே கிழங்கின்சாற்றுவைத்துக்கொண்டு நினைவாகயரைத்திடுவாய் மூன்றுநாள்தான்
வாட்டியே ரவியில்வைத்துப் பொடியாய்ப்பண்ணி வளமானகாசிபென்ற குப்பியிலேபோடு
ஓட்டியே வாலுகையின்மேலேவைத்து உற்பனமாயடுப்பெரித்து ஆறவிட்டுவாங்கே

விளக்கவுரை :


887. வாங்கியே முன்போலக் கல்வத்திட்டு வளமானகிழங்குசார் விட்டுஆட்டி
தேங்கியே யரைத்திட்டு மூன்றுநாள்தான் திறமாக பொடியாக்கிக் குப்பிக்கேற்றி
ஓங்கியே யரைக்கையிலே பலந்தான்கெந்தி உற்பனமாய்ப் போட்டரைத்து குப்பிக்கேற்றி
தாங்கியே மூன்றுநாள் தீயையாட்டு தப்பாமலிப்படிதான் ஐந்துதரமேற்றே

விளக்கவுரை :

[ads-post]

888. ஐந்துமே வாலுகையின் தளத்தில்நிற்கும் அசங்காமல் அயச்சிமிழிலெடுத்துவைத்து
உஞ்சுமே நவலோகம் நூற்றுக்கொன்றீய உற்பனமாய்ப் பத்தரையேமாற்றுகாணும்
செஞ்சுமே நோயெல்லாம் தவிடுபொடியாகும் கெடியான காலனுமே யஞ்சிப்போவான்
மிஞ்சியதோர் புளியுப்புவிட்டுத் தின்றால் மேவியதோர் சட்டைகக்கிப் பாலையாமே

விளக்கவுரை :


889. லையாஞ் சிவப்பான கெந்திதன்னை பகரக்கேள்பராபரைக்கு மூதல்நாகந்தான்
ஓலையாலெழுதவென்றால் இதனினாட்டு உத்தமனே கடல்தண்ணீர்க் கொப்பேயாகும்
மாலையாங்கொன்றையைத்தான்தரித்தசிவன்மைந்தர் மயங்கினார் இதினுடைய ஆட்டைபார்த்து
ஆலையாய் சரக்கெல்லாம் கொல்லும்கொல்லும் அம்மம்மா ஆயியுட நாதந்தானே 

விளக்கவுரை :


890. நாதமென்றுமிதுக்குப்பேர் சத்திகெந்தி நலமான கோழித்தலைச் சூடனென்றும்
போதமென்ற விதினுடைய வைப்புதன்னைப் போக்கோடே வெளியாகச் சொன்னேன் மக்காள்
நிதமென்ற நெல்லிக்காய் கெந்தகத்தை நினைவாகப் பலம்பத்து நிறுத்துக்கொண்டு
கீதமென்ற செவ்வகத்தி செவ்வலரிமுருக்கு கெடியான செவ்வல்லி செம்பருத்திதானே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 881 - 885 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

881. இருக்கிறதோர் கற்பூரம்விராகநாலு இதமான கெந்தியது விராகனொன்று
பருக்கிறதோர் கல்வத்திற் பொடியாய்ப்பண்ணி பணவிடைதான் அனுபானத்தோடேகொள்ள
செருக்கிறதோர் கடிவிஷங்கள் புண்கள்சூலை செருமியவெண் குஷ்டங்கள் பவுத்திரங்கள்கிரந்தி
அருக்கிறதோர் வியாதியெல்லாம் அகன்றுபோகும் ஆதித்தன் கண்டதொரு பனிபோலாமே

விளக்கவுரை :


882. பனியென்ற பச்சைரசம் செந்தூரிக்கப் பாங்கான சூதமது பலந்தானெட்டு
கனியென்ற கெந்தகந்தான்ரண்டு பலமாகுங் கனமான வோட்டிலிட்டுத் தணலில்வைத்து
தொனியென்ற கெந்தகத்தை யுருக்கிக்கொண்டு சூதத்தையதில்விட்டு அயத்தால்கிண்டி
நனியென்ற சூதமது கரிபோலாகும் நயத்தோடே வாங்கிமெல்ல குப்பியிற்போடே

விளக்கவுரை :

[ads-post]

883. போட்டுமே அரைவாசிகுப்பிக்கப்பா புகழான வாலுகையின்மேலேவைத்து
நாட்டுமே ஓடாலேமேலேமூடி நயமாகவடுப்பெரித்து சாமம்ரண்டு
ஓட்டுமே ஓடதனை வாங்கிப்போட்டு வுக்கிரமாயெரித்தாக்கால் கெந்தகந்தான்பத்தும்
வாட்டுமே கெந்தகத்தின் நாலுக்கொன்று மருவியதோர் தாளகத்தை நிறுத்துவையே

விளக்கவுரை :


884. வைக்கவே கொஞ்சமாய்க் குப்பியிலேபோட்டு மறவாமல் அயக்கத்தியால் கிண்டுகிண்டு
நைக்கவே தாளகத்தைப் போட்டுப்போட்டு நலமாக கிண்டிவரச் சாகையாலே
உய்க்கவே சரக்கெல்லாம் பதங்கமாகும் உற்றவெறுங் குப்பியாயடியிற்காணும்
செயிக்கவே யடியிலே மருந்தில்லாட்டால் சீரானபதமென்று அடுப்பையாற்றே

விளக்கவுரை :


885. ஆற்றியே யிருநாழியானபின்பு அயக்குறட்டால் குப்பிதன்னை வெளியில்வாங்கி
போற்றியே நீர்தெளித்து ஆறப்போட்டு புகழாக குப்பியெல்லாம் தள்ளிப்போட்டு
தேற்றியே சிவப்பாகக் கம்பிபோலாய்ச் சிறுகதிராய்ப் பலகைபோலிருக்கும்பாரு
சாற்றியே பணவிடைதான் தேனிலுண்ணத் தப்பாதுநோயெல்லாம் சாடிப்போமே

விளக்கவுரை :


Powered by Blogger.