போகர் சப்தகாண்டம் 726 - 730 of 7000 பாடல்கள்
726. பார்க்கவே கெந்தகந்தான் பலமும்மூன்று பரிவான வெண்காரம் பலமுமைந்து
ஏர்க்கவே இதைவிற்று
செலவுசெய்து வெளிதான வீரமதுபலமுமொன்று
கார்க்கவே குடோரியது
பலமுமொன்று கல்வத்திலிட்டெல்லாம் பொடியாய்ப்பண்ணி
சேர்க்கவே
முன்மருந்திலொக்கப்போட்டு சிறப்பாகக் குழம்பான பதத்தில்வாங்கே
விளக்கவுரை :
727. வாங்கியே காந்தத்தில்
பிசறிக்கொண்டு வளமான சரவுலையில் வூதுவூது
தாங்கியே காட்டோடு
சத்தாய்வீழும் தப்பாமல் சத்தெல்லாம் பொருக்கிக்கொண்டு
தேங்கியே கரடெடுத்துத்
தயிலத்தில்பிசறிச் செப்பரியநாளத்தால் ஊதித்தீரு
பங்கியே ஐந்துதரம் ஊதித்தீரு
பரிதிபோல் செம்பாக நிறமுமாச்சே
விளக்கவுரை :
[ads-post]
728. செம்பான காந்தமது பலந்தாநாலு
திறமானதங்கமது பலந்தானொன்று
கம்பானநாகமது பலந்தானொன்று
கருதியதோர் கட்டான சூதமொன்று
நம்பான இதுநாலும்
உருக்கிக்கொண்டு நலமாகக் கல்வத்தில் பொடியாய்ப்பண்ணி
கொம்பான குலாமல்லிச்
சாற்றாலாட்டி கூறவேமுன்னநாள் ரவியிற்போடே
விளக்கவுரை :
729. போட்டுவா முன்சொன்ன
சூதத்திலாட்டி பெரிதான கெந்தகத்தைச் சுத்திப்போடு
கேட்டுவா பொடிபண்ணி
மேறுக்கேற்றி கெடியான வானுகையில் மேலேவைத்து
நாட்டுவா பனிரன்டு சாமந்தீயை
நலமாகஆறவிட்டு எடுத்துப்பாரு
காட்டுவாய் மாதளப்பழம்
பூப்போலேயாகும் சாத்திரத்திற் கொண்டாடும் வேதைதானே
விளக்கவுரை :
730. தானென்ற
செந்தூரங்குன்றியுண்ணு சாதகமாய் மண்டலத்திற் சட்டைகக்கும்
கோனானகாயமெல்லாம்
சிவந்துமின்னும் கெடிதான நாகமெல்லாம் பவளம்போலாம்
பானான வஸ்துவுண்டால்
லாகிரியில்லை பாஷானவர்க்கங்கள் கறிசோறாகும்
ஊனான சடந்தானும் கோடிகாணும்
உத்தமனே சமாதியிலே இருக்கலாமே
விளக்கவுரை :