போகர் சப்தகாண்டம் 886 - 890 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

886. சாட்டியே கல்வத்திலிதனைப்போட்டுத் தயங்காமல் பொடிபண்ணிக் காட்டுச்செம்பு
நீட்டியே கிழங்கின்சாற்றுவைத்துக்கொண்டு நினைவாகயரைத்திடுவாய் மூன்றுநாள்தான்
வாட்டியே ரவியில்வைத்துப் பொடியாய்ப்பண்ணி வளமானகாசிபென்ற குப்பியிலேபோடு
ஓட்டியே வாலுகையின்மேலேவைத்து உற்பனமாயடுப்பெரித்து ஆறவிட்டுவாங்கே

விளக்கவுரை :


887. வாங்கியே முன்போலக் கல்வத்திட்டு வளமானகிழங்குசார் விட்டுஆட்டி
தேங்கியே யரைத்திட்டு மூன்றுநாள்தான் திறமாக பொடியாக்கிக் குப்பிக்கேற்றி
ஓங்கியே யரைக்கையிலே பலந்தான்கெந்தி உற்பனமாய்ப் போட்டரைத்து குப்பிக்கேற்றி
தாங்கியே மூன்றுநாள் தீயையாட்டு தப்பாமலிப்படிதான் ஐந்துதரமேற்றே

விளக்கவுரை :

[ads-post]

888. ஐந்துமே வாலுகையின் தளத்தில்நிற்கும் அசங்காமல் அயச்சிமிழிலெடுத்துவைத்து
உஞ்சுமே நவலோகம் நூற்றுக்கொன்றீய உற்பனமாய்ப் பத்தரையேமாற்றுகாணும்
செஞ்சுமே நோயெல்லாம் தவிடுபொடியாகும் கெடியான காலனுமே யஞ்சிப்போவான்
மிஞ்சியதோர் புளியுப்புவிட்டுத் தின்றால் மேவியதோர் சட்டைகக்கிப் பாலையாமே

விளக்கவுரை :


889. லையாஞ் சிவப்பான கெந்திதன்னை பகரக்கேள்பராபரைக்கு மூதல்நாகந்தான்
ஓலையாலெழுதவென்றால் இதனினாட்டு உத்தமனே கடல்தண்ணீர்க் கொப்பேயாகும்
மாலையாங்கொன்றையைத்தான்தரித்தசிவன்மைந்தர் மயங்கினார் இதினுடைய ஆட்டைபார்த்து
ஆலையாய் சரக்கெல்லாம் கொல்லும்கொல்லும் அம்மம்மா ஆயியுட நாதந்தானே 

விளக்கவுரை :


890. நாதமென்றுமிதுக்குப்பேர் சத்திகெந்தி நலமான கோழித்தலைச் சூடனென்றும்
போதமென்ற விதினுடைய வைப்புதன்னைப் போக்கோடே வெளியாகச் சொன்னேன் மக்காள்
நிதமென்ற நெல்லிக்காய் கெந்தகத்தை நினைவாகப் பலம்பத்து நிறுத்துக்கொண்டு
கீதமென்ற செவ்வகத்தி செவ்வலரிமுருக்கு கெடியான செவ்வல்லி செம்பருத்திதானே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 881 - 885 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

881. இருக்கிறதோர் கற்பூரம்விராகநாலு இதமான கெந்தியது விராகனொன்று
பருக்கிறதோர் கல்வத்திற் பொடியாய்ப்பண்ணி பணவிடைதான் அனுபானத்தோடேகொள்ள
செருக்கிறதோர் கடிவிஷங்கள் புண்கள்சூலை செருமியவெண் குஷ்டங்கள் பவுத்திரங்கள்கிரந்தி
அருக்கிறதோர் வியாதியெல்லாம் அகன்றுபோகும் ஆதித்தன் கண்டதொரு பனிபோலாமே

விளக்கவுரை :


882. பனியென்ற பச்சைரசம் செந்தூரிக்கப் பாங்கான சூதமது பலந்தானெட்டு
கனியென்ற கெந்தகந்தான்ரண்டு பலமாகுங் கனமான வோட்டிலிட்டுத் தணலில்வைத்து
தொனியென்ற கெந்தகத்தை யுருக்கிக்கொண்டு சூதத்தையதில்விட்டு அயத்தால்கிண்டி
நனியென்ற சூதமது கரிபோலாகும் நயத்தோடே வாங்கிமெல்ல குப்பியிற்போடே

விளக்கவுரை :

[ads-post]

883. போட்டுமே அரைவாசிகுப்பிக்கப்பா புகழான வாலுகையின்மேலேவைத்து
நாட்டுமே ஓடாலேமேலேமூடி நயமாகவடுப்பெரித்து சாமம்ரண்டு
ஓட்டுமே ஓடதனை வாங்கிப்போட்டு வுக்கிரமாயெரித்தாக்கால் கெந்தகந்தான்பத்தும்
வாட்டுமே கெந்தகத்தின் நாலுக்கொன்று மருவியதோர் தாளகத்தை நிறுத்துவையே

விளக்கவுரை :


884. வைக்கவே கொஞ்சமாய்க் குப்பியிலேபோட்டு மறவாமல் அயக்கத்தியால் கிண்டுகிண்டு
நைக்கவே தாளகத்தைப் போட்டுப்போட்டு நலமாக கிண்டிவரச் சாகையாலே
உய்க்கவே சரக்கெல்லாம் பதங்கமாகும் உற்றவெறுங் குப்பியாயடியிற்காணும்
செயிக்கவே யடியிலே மருந்தில்லாட்டால் சீரானபதமென்று அடுப்பையாற்றே

விளக்கவுரை :


885. ஆற்றியே யிருநாழியானபின்பு அயக்குறட்டால் குப்பிதன்னை வெளியில்வாங்கி
போற்றியே நீர்தெளித்து ஆறப்போட்டு புகழாக குப்பியெல்லாம் தள்ளிப்போட்டு
தேற்றியே சிவப்பாகக் கம்பிபோலாய்ச் சிறுகதிராய்ப் பலகைபோலிருக்கும்பாரு
சாற்றியே பணவிடைதான் தேனிலுண்ணத் தப்பாதுநோயெல்லாம் சாடிப்போமே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 876 - 880 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

876. சாய்த்திடவே மருந்தெடுத்து நிறுத்துக்கொண்டு சார்பான நாலுக்குச் சூதமொன்று
போய்த்திட்ட மருந்துக்கு நாலுக்கொன்று புகழான வெள்ளியது நிறுத்துப்போட்டு
காய்த்திட்ட முலைப்பாலை விட்டுயாட்டிக் கனமானவில்லைசெய்து அயச்செம்பில்வைத்து
யெய்த்திட்ட யைந்தெருவிற் புடத்தைப்போடு எளிதான செம்புவங்கம் நூற்றுக்கொண்ணே

விளக்கவுரை :


877. ஒண்ணான வெள்ளியது மாற்றுகேளு உற்பனமா யிருபத்தயைந்துமாற்று
கண்ணான சூதமது வெள்ளியாகும் காரீயம்வெள்ளீயம் நாகம் வெள்ளியாகும்
விண்ணான செம்பதுவும் வெள்ளியாகும் மகத்தான வயமதுவும் வெள்ளியாகும்
விண்ணான அம்பலத்தை தெரிசித்தப்பா மேவியதோர் சிலம்பொலி நாதங்கேளே

விளக்கவுரை :

[ads-post]

878. நாதமென்ற பச்சைரச கற்பூரம்பண்ண நலமாக சொல்லுகிறேன் கேளுகேளு
போதமென்ற சூதமது பலந்தானெட்டு புகழான கெந்தகமே பலந்தானொன்று
நீதமென்ற கெந்தகத்தை ஓட்டிவிட்டுவுருக்கி நினைவாகச் சூதத்தை யதில்விட்டுக்கிண்டு
நாதமென்ற கரிபோல தூளாய்ப்போகும் நலமாக வெடுத்துவை பாகங்கேளே

விளக்கவுரை :


879. கேளப்பா மண்ணாலே தோண்டிபண்ணி கெடியாகச் சந்துவாய்ப் பொருந்தச்சுட்டு
நாளப்பா மேல்தோண்டிக் குள்ளேபூச நலமான மத்தைச்சார் மூன்றுதரம்பூசி
வேளப்பா வுலர்ந்தபின்பு அடித்தோண்டிக்குள்ளே விரவிதோர்கறி யுப்பு அரைத்தோண்டிமட்டும்
வாளப்பா பொடிபண்ணி தோண்டியிலேபோட்டு மருவிதோர் செங்கல் மண்ணாழிதானே

விளக்கவுரை :


880. ஆமப்பா பதங்கமது மேல்தோண்டிக்குள்ளே அப்பனேயேறியது மாப்போல்நிற்கும்
தாமப்பா பதங்கமெல்லா மயிற்குச்சுகட்டித் ததும்பாம லெடுத்தல்லோ குப்புக்கிட்டு
வாமப்பா வாலுகையின் மேலேவைத்து மறவாமல் தீப்போடு பனிரண்டுசாமம்
காமப்பா பதங்கமது யிறுகியேறிக் கம்பிபோல் வெளும்பாக விருக்கும்பாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 871 - 875 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

871. ஆச்சப்பா வெள்ளையென்ற பதங்கம்கேளு ஆதிவெள்ளைப்பாஷாணக் குதிரைப்பல்லும்
ஓச்சப்பா தாளகமும் பூநீறும்வீரம் உத்தமனே சாரமொடு துருசுசீனம்
பாச்சப்பா கல்லுப்பு வெடியுப்புக் கெவுரி பரிவாக வெள்ளையென்ற அப்பிரகத்தோடு
காச்சப்பா நாகமொடு வெள்ளீயப்பொடியும் கடல்நுரையும் சவ்வுநீரண்டத்தோடே

விளக்கவுரை :


872. ஓடோடு அன்னமென்ற பேதிதானும் உத்தமனே சூடனொடு அரப்பொடியுஞ்சிங்கி
காடோடு வக்கிராந்த கஞ்சமென்ற நிமிளை காந்தமொடு சத்தியென்ற சாரந்தானும்
நாடோடு இரபத்து ஐந்துமாச்சு நலமான சூடனதுஇருபத்தைந்து
பாடோடு யெருகாலம்பால்விட்டாட்டி பதறாம லேழுநாளரைத்துலர்த்தே

விளக்கவுரை :

[ads-post]

873. உலர்த்தியே விமலையாய் வைத்துக்கொண்டு உத்தமனே வெள்ளிபண்ணி  
அலர்த்தியே அயச்சட்டியுள்ளங்கைபோல் அப்பனே வரையிட்டு பண்ணிவைத்து
மலர்த்தியே மருந்துதனை யுள்ளேவைத்து வகையாக மேற்கிண்ணிப் பொருந்தப்பார்த்து
பிலர்த்தியே முன்கவசம் போலேசெய்து பேராகமுக்கலரின் மேலேயேற்றே

விளக்கவுரை :


874. ஏங்கியேகல்வைத்துத் திரியைப்போட்டு இதமான முள்ளியெண்ணெய் விளக்குயேற்றி
போற்றியே மூன்றுநாளவியாமலேற்று புகழான பதங்கமது யேறும்பாரு
ஆற்றியே பதங்கமெல்லா மெடுத்துவாங்கி யாதிவெள்ளை யப்பிரேக நவநீதம்பண்ணி
சாற்றியே குகையொன்று சில்லுபண்ணி சார்பான அண்டவெள்ளைக் கருவால்வண்ணே

விளக்கவுரை :


875. பண்ணியதோர் குகைக்குள்ளே மருந்தைவைத்து பரிவாக மேல்மூடிசீலைசெய்து
கண்ணியதோர் கெஜபுடத்திற் போட்டெடுத்து கனமான குகைக்குள்ளே வைத்துருக்கி
கண்ணியதோர் சூதம்நின்று வருகும்போது நலமான கிண்ணியைநீ சமனாய்ப்போடு
திண்ணியதோர் சூதமிடை வெள்ளீயம் போட்டு திறமாக காரமிட்டு வுருக்கிச்சாயே

விளக்கவுரை :


Powered by Blogger.