போகர் சப்தகாண்டம் 1136 - 1140 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1136. மூடியே சீலைசெய்து அவிர்புடமாய்ப்போடு முயற்சியாய்ப் பத்துவிசைப் போட்டெடுத்து
ஆடியே விளக்கெண்ணெய் விட்டுருக்கி அப்பனே நாகத்தைக் கிண்ணி பண்ணிக்கொண்டு
நாடியே கிண்ணிநிறை சூதமப்பா நலமான தாளகமுஞ் சரியாய்க் கூட்டி
தேடியே தேடிசார்விட்டரைத்து சிறப்பாகக் கிண்ணிதனி லுள்ளேபூசே

விளக்கவுரை :


1137. பூசியே வாலுகையில் சட்டிவைத்துப் பொருந்தவே மணல்விட்டு அடியிற்றானும்
நேசியே யதின்மேலே யுப்புவிட்டு நினைவாகக் கிண்ணிதனைப் பதித்துவைத்து
தேசியே எலுமிச்சம் பழச்சாறு தானுஞ் சிறப்பாக எரியிட்டுச் சுறுக்குபோடு
மாசியே பதினைந்து நாள்தான் தீயைமறவாமல் போட்டிடுவாய் இரவுபகல்தானே

விளக்கவுரை :

[ads-post]

1138. தானாகு மெலுமிச்சம்பழச்சாறு தானுஞ்சாதகமாய் வற்றவற்றச் சுறுக்குபோடு
பானாகும் பதினைந்துநாள்தான் சென்றால் பக்குவமாய் எடுத்துவைப்பாய் பீங்கானுக்குள்
கானாகு மல்லிகைபூப்போலே நிற்குங்கசடற்ற செம்பிலே நூற்றுக்கொன்று
கோனாகு மெழுகிலோட்டி கொடுத்தாயானால் குறையாது பனிரண்டுமாற்றுமாமே

விளக்கவுரை :


1139. ஆமப்பா துரிசியது பலமுமொன்று அழகான தாளகமும் பலமுமொன்று
வேமப்பா கள்ளிப்பால் வார்த்தரைத்து விளங்கவே மூன்றுநாளாகுமட்டும்
தாமப்பா குன்றிபோலுண்டைபண்ணி தாக்கான வெள்ளீயம் பலந்தானாலு
போமப்பா குகையில்நின்று வுறுகும்போது போக்கான வுண்டையெல்லாம் கிராசம்போடே

விளக்கவுரை :


1140. போட்டுடனே யுண்டையெல்லாமானபின்பு பொடிபண்ணிச் சாரத்தூள் மேலேபோட்டு
ஆட்டுடனே கற்றாழஞ்சாற்றில்சாய்த்து அடவாக யேழுதரமுருக்கிசாய்ப்பாய்
பூட்டுனே வங்கத்தில் சமனாய்வெள்ளி பொலிவாக வுருக்கியல்லோ கிண்ணிவார்த்து
மாட்டுடனே கிண்ணியிடை சூதம்வீர மருவியதோர் வெள்ளையென்ற பாஷாணங்காணே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 1131 - 1135 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1131. ஆட்டியே ஐந்தாநாள் வில்லைபண்ணி அழகான பூப்புடத்தில் தயிலம்வாங்கிப்
பூட்டியே கலயத்திற்கட்டிவைத்துப் பொறித்தெடுத்த முட்டைதோல் பலமும்பத்து
நீட்டியே கல்வத்திற் பொடியாய்ப்பண்ணி நினைவாக வெண்காரம் பலமுமைந்து
தீட்டியே வீரமது பலமும்ரண்டு சிறப்பாகக் கூடவிட்டுத் தயிலத்தாலாட்டே 

விளக்கவுரை :


1132. ஆட்டியே மூன்றுநாள் வில்லைகட்டி அசங்காமல் சரவுலையிலைந்துதரமூது
பூட்டியே சத்தெல்லாம் பொருக்கிக்கொண்டு பொரிக்காரமிட்டுருக்கி யொன்றாய்ச்சேர்த்து
வாட்டியே ஒன்றுக்கு நாலுதங்க மருவிநின்று வுருகையிலேகூடவிட்டுத்
தீட்டியே நாகமிட்டுச் சூதமிட்டுச் சிறப்பாகக் கெந்தியிட்டுக் களங்கமாமே

விளக்கவுரை :

[ads-post]

1133. ஆமிந்தக் களங்கெடுத்து நவலோகத்தில் நூற்றுக்கொன்றிடவே யைம்பத்தைந்து
வாமிந்தப் பொன்னதுவும் பச்சைபோல்காணும் வாய்ப்பாகக் குப்பியிலே செந்தூரித்துண்ணு
நேமிந்தச் சடந்தானும் பச்சைநிறமாகும் தேகமென்றால் பொற்சிலைபோ லழுந்திக்காணும்
காமிந்தக் கற்பாந்தகாடிகாலங் காலனுமேயணுகாமல் சித்தியாமே

விளக்கவுரை :


1134. சித்தியாம் வெகுசுளுக்கு நாகபற்பம் திறமாகக் கேளுங்கள் மாணாக்காளே
பத்தியாம் நாகமதுபலந்தான்பத்து பகருகின்ற இலுப்பைநெய்யில் சாரம்போட்டு
மத்தியாமூமாறுதரம்தான்சாய்த்து முகியாமல் தகடுதட்டிப் புளியிலைபோல்நறுக்கிக்
கத்தியாங் கடுகொருபலந்தானைந்து காரமாமிளகாயம் பலமுமஞ்சே

விளக்கவுரை :


1135. அஞ்சான அபினைந்துபலமுந்தூக்கி அழகான எலுமிச்சைபழசார்விட்டு
துஞ்சான மூன்றுநாள் நேயமுடனரைத்து துடியாக வழித்தெல்லாம் குழம்பாய்வைத்து
பிஞ்சான தகட்டுக்குப் பூசபூச பேராக வாகையுட பட்டைவாங்கி
தஞ்சான திடித்துநன்றாய் தகடுவைத்து சார்பாக மேல்மூடி புடத்தைப்போடே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 1126 - 1130 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1126. ரண்டெல்லாம் பொடிபண்ணிப் பாலிற்போடு நேர்ப்பான பன்றிநெய்சேரவிட்டு
பண்டெல்லாம் அயச்சட்டிக்குள்ளேவார்த்துப் பருவமாமடுப்பேற்றி யெரித்துவாங்கி
கொண்டெல்லாம் குழம்பான பதத்திற்கிண்டிக்கொண்டுமே கலயத்திற்கட்டிவைத்து
துண்டெல்லாஞ் சகஸ்திரமாம் வேதையிலேபோட்டுத் துவளபரையெண்சாமம்
வில்லைகட்டே

விளக்கவுரை :


1127. வில்லைகட்டி சரவுலையில் போட்டுவூது மேலானசத்தெல்லாங் கழன்றுவீழும்
கல்லைகட்டி சத்தெல்லாம் பொருக்கிக்கொண்டு கறடெடுத்து தயிலத்தி லரைத்துவூது
வில்லைகட்டி ஐந்துதரமூதுவூது சிறப்பாகச் சத்தெல்லாமொன்றாய்ச்சேர்த்து
முல்லைகட்டி காரமிட்டு வுருக்கினாக்கால் முத்துபோல் வெளுப்பாகும் சத்தாகும்பாரே

விளக்கவுரை :

[ads-post]

1128. சத்தெடுத்துப் பலமொன்று நிறுத்திக்கொண்டு தங்கமது நாலுக்கு ஒன்றுயிட்டு
பத்தெடுத்து நாகமது அரைப்பலந்தான் போட்டு பரிவாகயுருக்கிநன்றாய்ச் சூதம்போட்டுக்
கொத்தெடுத்து கெந்தகத்தை ரண்டுபலம்போட்டு குறிப்பாகக் கல்வத்தில் பொடியாய்பண்ணி
மத்தெடுத்து அந்திமல்லிச் சாற்றாலாட்டி வகையாகப்பொடிபண்ணி குப்பிக்கேற்றே

விளக்கவுரை :


1129. குப்பிக்கே யேற்றிடுவாய் வாலுகையில்வைத்துக் கூசாமற் பனிரண்டு சாமந்தீப்போடு
குப்பிக்கே சூரியன்போல் சிவந்துகாணும் துடியாகப் பணவிடைதான் தேனிலுண்ணு
சிப்பிக்கே வுடலைப்போல கனசட்டைதள்ளும் தேசியைப்போல் நடப்பதற்கு லெகுவுண்டாகும்
அப்பனே ஆயிரத்துக்கொன்றேயீய மருமமென்ற மாற்றாகு மறிந்துகொள்ளே

விளக்கவுரை :


1130. கொள்ளென்ற அண்டோடசத்துபண்ணிக்குன்றி மணித்தோல்போக்கிப் படிதானொன்று
அள்ளென்ற ரோமமது பலந்தான்பத்து அப்பனே அண்டத்தின் மேலேசுத்தி 
தள்ளன்ற  கெஜபுடத்தினீற்றிக்கொண்டு தயவாகப் பற்பத்தைக் கவசஞ்செய்து
முள்ளென்ற முசலெலும்புத் தூள்தான்பத்து முயற்சியா யெருக்கம்பால் விட்டுஆட்டே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 1121 - 1125 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1121. பெரியோர்களென்று சொன்னமொழி யேதுக்குப் பேரின்பசாத்திரத்தி லுரைத்ததாலே
பெரியோர்களாவதுவும் ஏதலாலென்றால் பொய்மறந்து மெய்யுரைத்த பிரதாபத்தாலே
பெரியோர்களானதென்ன யோகநிஷ்டை பேரானகற்பமுண்டு காயசித்திசெய்தார்
பெரியோர்கள் குருபதத்தை மறவாமலென்றும் பேசாமலூமையைப்போ லிருப்பார்பாரே

விளக்கவுரை :


1122. பாரப்பா நிர்மூடவாதிகட்குப் பலியாது யேமமென்ற வித்தைதானும்
நேரப்பா பொய்சொல்லும்புலையருக்கு நிச்சயமாய் காணுகிற யோகம்பொய்யாம்
சேரப்பா காமமென்ற காதுகட்குத்தானும் செயலான காயசித்தி சோபம்பொய்யாம்
தூரப்பா குருசொன்ன மொழிமாயை யிந்ததுஷ்டருக்குச் சகலநூல்களெல்லாம் பொய்யே

விளக்கவுரை :

[ads-post]

1123. பொய்யென்ற வார்த்தையது சொன்னானாகில் போக்கோடேயேழுஜென்ம புலையனாவான்
பொய்யென்று காயசித்தியென்று சொன்னால் பிறந்திடுவான் கழுதையென்ற ஜென்மமாகப்
பொய்யென்று யோகத்தைச் சொன்னானாகில் புளுவான பாழ்நரகில் வீழ்வான்பாவி
பொய்யென்ற பூசையைத்தான் தூசித்தோர்க்கும் பேராகமூவேழுவங்கிஷம்பாழாமே

விளக்கவுரை :


1124. பாழாகும் வஸ்துசுத்தி பானந்தன்னைப் பதையாமற் சொன்னோர்க்கு அல்லலுண்டாம்
கூழாகும் கஞ்சிக்கி ஏங்கிஏங்கிக் கொடிதான பெருவயறுஏளையெய்தி
மீழாகுங்குணமுவலி பித்துக்கொண்டு மிகையெய்தி நகையெய்தி வீடுதோறும்
நாளாக யிரப்புண்டு கொடுப்பார்க்கைபார்த்து நமனுக்குப்பகையாகி நரகெய்வானே

விளக்கவுரை :


1125. எய்தவே சகஸ்திரமாஞ்சத்துகேளு இதமான ஆதளையின் பால்தானல்லோ
கொய்தவே யெருக்கம்பால் சேரையொன்று கோழிமுட்டை வெண்கருவுஞ் சமனாய்க்கூட்டி
பைதவே வெண்காரம் பலந்தானைந்து பகருகின்ற கெந்தகந்தான் பலமும்நாலு
நைதவே துரிசியது பலமுமூன்று நாட்டுவாய் தாளகமும் பலமும்ரண்டே

விளக்கவுரை :


Powered by Blogger.