போகர் சப்தகாண்டம் 1136 - 1140 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1136 - 1140 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1136. மூடியே சீலைசெய்து அவிர்புடமாய்ப்போடு முயற்சியாய்ப் பத்துவிசைப் போட்டெடுத்து
ஆடியே விளக்கெண்ணெய் விட்டுருக்கி அப்பனே நாகத்தைக் கிண்ணி பண்ணிக்கொண்டு
நாடியே கிண்ணிநிறை சூதமப்பா நலமான தாளகமுஞ் சரியாய்க் கூட்டி
தேடியே தேடிசார்விட்டரைத்து சிறப்பாகக் கிண்ணிதனி லுள்ளேபூசே

விளக்கவுரை :


1137. பூசியே வாலுகையில் சட்டிவைத்துப் பொருந்தவே மணல்விட்டு அடியிற்றானும்
நேசியே யதின்மேலே யுப்புவிட்டு நினைவாகக் கிண்ணிதனைப் பதித்துவைத்து
தேசியே எலுமிச்சம் பழச்சாறு தானுஞ் சிறப்பாக எரியிட்டுச் சுறுக்குபோடு
மாசியே பதினைந்து நாள்தான் தீயைமறவாமல் போட்டிடுவாய் இரவுபகல்தானே

விளக்கவுரை :

[ads-post]

1138. தானாகு மெலுமிச்சம்பழச்சாறு தானுஞ்சாதகமாய் வற்றவற்றச் சுறுக்குபோடு
பானாகும் பதினைந்துநாள்தான் சென்றால் பக்குவமாய் எடுத்துவைப்பாய் பீங்கானுக்குள்
கானாகு மல்லிகைபூப்போலே நிற்குங்கசடற்ற செம்பிலே நூற்றுக்கொன்று
கோனாகு மெழுகிலோட்டி கொடுத்தாயானால் குறையாது பனிரண்டுமாற்றுமாமே

விளக்கவுரை :


1139. ஆமப்பா துரிசியது பலமுமொன்று அழகான தாளகமும் பலமுமொன்று
வேமப்பா கள்ளிப்பால் வார்த்தரைத்து விளங்கவே மூன்றுநாளாகுமட்டும்
தாமப்பா குன்றிபோலுண்டைபண்ணி தாக்கான வெள்ளீயம் பலந்தானாலு
போமப்பா குகையில்நின்று வுறுகும்போது போக்கான வுண்டையெல்லாம் கிராசம்போடே

விளக்கவுரை :


1140. போட்டுடனே யுண்டையெல்லாமானபின்பு பொடிபண்ணிச் சாரத்தூள் மேலேபோட்டு
ஆட்டுடனே கற்றாழஞ்சாற்றில்சாய்த்து அடவாக யேழுதரமுருக்கிசாய்ப்பாய்
பூட்டுனே வங்கத்தில் சமனாய்வெள்ளி பொலிவாக வுருக்கியல்லோ கிண்ணிவார்த்து
மாட்டுடனே கிண்ணியிடை சூதம்வீர மருவியதோர் வெள்ளையென்ற பாஷாணங்காணே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar