1131. ஆட்டியே ஐந்தாநாள்
வில்லைபண்ணி அழகான பூப்புடத்தில் தயிலம்வாங்கிப்
பூட்டியே
கலயத்திற்கட்டிவைத்துப் பொறித்தெடுத்த முட்டைதோல் பலமும்பத்து
நீட்டியே கல்வத்திற்
பொடியாய்ப்பண்ணி நினைவாக வெண்காரம் பலமுமைந்து
தீட்டியே வீரமது பலமும்ரண்டு
சிறப்பாகக் கூடவிட்டுத் தயிலத்தாலாட்டே
விளக்கவுரை :
1132. ஆட்டியே மூன்றுநாள்
வில்லைகட்டி அசங்காமல் சரவுலையிலைந்துதரமூது
பூட்டியே சத்தெல்லாம்
பொருக்கிக்கொண்டு பொரிக்காரமிட்டுருக்கி யொன்றாய்ச்சேர்த்து
வாட்டியே ஒன்றுக்கு நாலுதங்க
மருவிநின்று வுருகையிலேகூடவிட்டுத்
தீட்டியே நாகமிட்டுச்
சூதமிட்டுச் சிறப்பாகக் கெந்தியிட்டுக் களங்கமாமே
விளக்கவுரை :
[ads-post]
1133. ஆமிந்தக் களங்கெடுத்து நவலோகத்தில் நூற்றுக்கொன்றிடவே யைம்பத்தைந்து
வாமிந்தப் பொன்னதுவும்
பச்சைபோல்காணும் வாய்ப்பாகக் குப்பியிலே செந்தூரித்துண்ணு
நேமிந்தச் சடந்தானும்
பச்சைநிறமாகும் தேகமென்றால் பொற்சிலைபோ லழுந்திக்காணும்
காமிந்தக் கற்பாந்தகாடிகாலங்
காலனுமேயணுகாமல் சித்தியாமே
விளக்கவுரை :
1134. சித்தியாம் வெகுசுளுக்கு
நாகபற்பம் திறமாகக் கேளுங்கள் மாணாக்காளே
பத்தியாம்
நாகமதுபலந்தான்பத்து பகருகின்ற இலுப்பைநெய்யில் சாரம்போட்டு
மத்தியாமூமாறுதரம்தான்சாய்த்து
முகியாமல் தகடுதட்டிப் புளியிலைபோல்நறுக்கிக்
கத்தியாங்
கடுகொருபலந்தானைந்து காரமாமிளகாயம் பலமுமஞ்சே
விளக்கவுரை :
1135. அஞ்சான
அபினைந்துபலமுந்தூக்கி அழகான எலுமிச்சைபழசார்விட்டு
துஞ்சான மூன்றுநாள்
நேயமுடனரைத்து துடியாக வழித்தெல்லாம் குழம்பாய்வைத்து
பிஞ்சான தகட்டுக்குப் பூசபூச
பேராக வாகையுட பட்டைவாங்கி
தஞ்சான திடித்துநன்றாய்
தகடுவைத்து சார்பாக மேல்மூடி புடத்தைப்போடே
விளக்கவுரை :