போகர் சப்தகாண்டம் 1126 - 1130 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1126 - 1130 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1126. ரண்டெல்லாம் பொடிபண்ணிப் பாலிற்போடு நேர்ப்பான பன்றிநெய்சேரவிட்டு
பண்டெல்லாம் அயச்சட்டிக்குள்ளேவார்த்துப் பருவமாமடுப்பேற்றி யெரித்துவாங்கி
கொண்டெல்லாம் குழம்பான பதத்திற்கிண்டிக்கொண்டுமே கலயத்திற்கட்டிவைத்து
துண்டெல்லாஞ் சகஸ்திரமாம் வேதையிலேபோட்டுத் துவளபரையெண்சாமம்
வில்லைகட்டே

விளக்கவுரை :


1127. வில்லைகட்டி சரவுலையில் போட்டுவூது மேலானசத்தெல்லாங் கழன்றுவீழும்
கல்லைகட்டி சத்தெல்லாம் பொருக்கிக்கொண்டு கறடெடுத்து தயிலத்தி லரைத்துவூது
வில்லைகட்டி ஐந்துதரமூதுவூது சிறப்பாகச் சத்தெல்லாமொன்றாய்ச்சேர்த்து
முல்லைகட்டி காரமிட்டு வுருக்கினாக்கால் முத்துபோல் வெளுப்பாகும் சத்தாகும்பாரே

விளக்கவுரை :

[ads-post]

1128. சத்தெடுத்துப் பலமொன்று நிறுத்திக்கொண்டு தங்கமது நாலுக்கு ஒன்றுயிட்டு
பத்தெடுத்து நாகமது அரைப்பலந்தான் போட்டு பரிவாகயுருக்கிநன்றாய்ச் சூதம்போட்டுக்
கொத்தெடுத்து கெந்தகத்தை ரண்டுபலம்போட்டு குறிப்பாகக் கல்வத்தில் பொடியாய்பண்ணி
மத்தெடுத்து அந்திமல்லிச் சாற்றாலாட்டி வகையாகப்பொடிபண்ணி குப்பிக்கேற்றே

விளக்கவுரை :


1129. குப்பிக்கே யேற்றிடுவாய் வாலுகையில்வைத்துக் கூசாமற் பனிரண்டு சாமந்தீப்போடு
குப்பிக்கே சூரியன்போல் சிவந்துகாணும் துடியாகப் பணவிடைதான் தேனிலுண்ணு
சிப்பிக்கே வுடலைப்போல கனசட்டைதள்ளும் தேசியைப்போல் நடப்பதற்கு லெகுவுண்டாகும்
அப்பனே ஆயிரத்துக்கொன்றேயீய மருமமென்ற மாற்றாகு மறிந்துகொள்ளே

விளக்கவுரை :


1130. கொள்ளென்ற அண்டோடசத்துபண்ணிக்குன்றி மணித்தோல்போக்கிப் படிதானொன்று
அள்ளென்ற ரோமமது பலந்தான்பத்து அப்பனே அண்டத்தின் மேலேசுத்தி 
தள்ளன்ற  கெஜபுடத்தினீற்றிக்கொண்டு தயவாகப் பற்பத்தைக் கவசஞ்செய்து
முள்ளென்ற முசலெலும்புத் தூள்தான்பத்து முயற்சியா யெருக்கம்பால் விட்டுஆட்டே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar