போகர் சப்தகாண்டம் 1086 - 1090 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1086. தீர்க்கவே தாளகத்துக்கங்கிபூட்டி திறமான மணல்மறைவிற்புடத்தைப்போடு
மார்கமாய்ப் புடம்போடலீயமாகும் மகத்தான யீயமதுயென்னசொல்வேன்
பார்க்கவே சூதமது சரிநேரொக்கப் பாங்காகத் தானூட்டி ஜெயநீர்தன்னால்
மூர்க்கமாய் நாற்சாம மரைத்துமேதான் முனையான மகமேருக் குப்பிக்கேற்றே

விளக்கவுரை :


1087. ஏற்றவே சாமமது பனிரண்டாகும் யெழிலான செந்தூரமென்ன சொல்வேன்
மாற்றவே வெள்ளிசெம்பில் பத்துகொன்று வரிசைபெறத்தானுருக்கி குருவொன்றீய
நாற்றமுடன் செம்பதுவும் நீங்கியேதான் நலமான வெள்ளயது மாற்றுகாணும்
தோற்றவே பத்திலோர் தங்கஞ்சேர்த்து சுருதிபெற தகடடித்து புடத்தைப்போடே

விளக்கவுரை :

[ads-post]

1088. போடவே மாற்றதுவு மிகுதியாகிப் பொங்கமுடன் னெட்டரையுங்காணும்பாரு
கூடவே சிவயோகந்தன்னிற்சென்று கும்பகத்தில்மீதிருந்து பாய்ச்சலாகி
நீடவே சதாநித்தம் வாசியோகம் நெடியான பூரணத்தி ரேசித்தேதான்
மாடவே யோகத்தை சாதித்தேறு மகத்தான ரேசகத்தில் மருவிப்பாரே

விளக்கவுரை :


1089. மருவியதோர் வாலையது பிரம்மபீடம் மகத்தான புவனையது கருவிதாரம்
மருவிதோர் திரிப்புரைதான் கபாலபீடம் மகத்தான வஷ்டாங்கந் தன்னிற்சென்று
கருவியதோர் ஞானத்தின் மார்க்கங்கண்டு கருவான வெட்டவெளிதன்னிற்சென்று
உருவிதோர் பரபிரமந்தன்னிற்புக்கி வுத்தமனே லகிரியிலே போற்றிநில்லே

விளக்கவுரை :


1090. போற்றவே மனோன்மணியாள் நிர்த்தஞ்செய்வாள் பொங்கமுடனின்னமொரு மார்கங்கேளு
ஆற்றவே பாஷாணம் பலமைந்தாகும் அப்பனே சுக்கான்றன் கல்லைத்தானும்
தூற்றவே திருகுகள்ளிப் பாலாலாட்டி தூய்மைபெற கவசித்துக் காயவைத்து
மாற்றவே சட்டியிலே மணல்தான்கொட்டி மறவாமல் மணலையுந்தான் மேல்மூடே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 1081 - 1085 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1081. துலைவான செம்பொன்னைக் கோடாகோடி துறையாகத் தேடியென்ன பலந்தானென்ன
நிலையான தேகமது போகும்போது நேரான கடுகளவு செம்பொன்தானும்
கலையான பொன்னதுவும் தன்னோடொக்க கடைசியிலே யாதொன்றுங்கண்டதில்லை
மலையான சாஸ்திரத்தி னுபதேசம் மார்க்கமுட னறிவதற்கு வகைதான்கேளே

விளக்கவுரை :


1082. கேளேதான் சார்புநூலறியவேண்டும் கொடியான வஷ்டாங்கம் பார்க்கவேண்டும்
மீளேதான் தத்துவத்தின் மூலமார்க்கம் மிக்கான சடாதாரக் குருவின்மார்க்கம்
பானேதான் குண்டலியின் வாசிமார்க்கம் பாங்கான அறாதாரத்தின் மார்க்கம்
சூளேதான் ஓங்காரக் குளிகைமார்க்கம் சுடரொளியின் சின்மயத்தின் மார்க்கம்தானே

விளக்கவுரை :

[ads-post]

1083. தானான லிங்கமது சுத்திசெய்து தாக்கான வைங்கோலத் தயிலத்தாலே
வேனாக சுருக்கிடவே கட்டிப்போகும் எழிலாக வங்கமதை யிதுபோற்செய்து
பானான விரண்டையுந்தா னுருக்கிப்பாரு பாங்கான மணிபோலக் கட்டியாடும்
தேனான மணியதனை யுடைத்துக்கொண்டு தெளிவாக வெள்ளிசெம்பில் தன்னிற்றாக்கே

விளக்கவுரை :


1084. தாக்கவே கரியோட்டிலூதிப்போடு தளுக்கறவே கசடுதா னகன்றுபோகும்
நோக்கவே மாற்றதுவும் மாறதாகும் நொடிதான யேமவித்தை சொல்லப்போமோ
தேக்கவே பத்திலோர் தங்கஞ்சேர்த்து தெளிவறவே தகடடித்து புடத்தைப்போடு
நோக்கவே பரியதுவுஞ் சேர்ந்துமல்லோ நொடிதான மாற்றதுவும் எட்டதாகும்

விளக்கவுரை :


1085. எட்டான மாற்றதுவுங் காணமாட்டார் யெழிலான விஞ்சிதின்னுங் குரங்கைப்போல
வட்டாக மயங்கியல்லோ யேங்கிநிற்பார் வரிசைபெற கருவான மின்னமொன்று
திட்டமுடன் சொல்லுகிறேன் மைந்தாகேளு தெளிவான தாளகமும் பலந்தானொன்று
திட்டமாய் சுண்ணாம்பும் பூநீர்தானும் கெடியான வமுரியினா லாட்டித்தீரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 1076 - 1080 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1076. மாட்டவே யறுவகை ஜெயநீர்தன்னால் மதிப்புடனே நாற்சாமமரைத்துமேதான்
நீட்டவே மேருவென்ற குப்பிக்கேற்றி நெடிதாக வெண்சாமம் எரித்துப்போடு
கூட்டவெ யாறவிட்டு யெடுத்துப்பாரு கொடிதான செந்தூரம் முருக்கம்பூப்போல்
தீட்டவே வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று திறமுடனே கொடுத்துருக்க மாற்றாறாமே

விளக்கவுரை :


1077. ஆமேதான் செம்பதனை ஊதிப்போடு அப்பனே மாற்றதுவு மின்னும்பாரு
தாமேதான் பத்திலொன்று தங்கஞ்சேர்த்து தாக்காகப் புடம்போட மாற்றெட்டாகும்
வேமேதான் சிவபதத்தி லிருந்துகொண்டு வெளியான ஜெகஜோதிதன்னைக்கண்டு
போமேதான் பராபரியை மனதிலெண்ணி போற்றடா குருபாதத்தைப் பணிந்துநில்லே

விளக்கவுரை :

[ads-post]

1078. நில்லவே துவாதிஷ்டானந் தன்னிற்சென்று நிலையான கும்பகத்திலிருந்துகொண்டு
புல்லவே பிராணாயந் தன்னிற்சென்று போற்றவே நிர்வாணிரூபிதன்னை
மல்லவே சதாகாலம் போற்றிசெய்து மக்கமென்னுஞ்சாகரத்தை யகற்றிப்போடு
வெல்லவே வேதாந்தந் தன்னிற்சென்று விரைவுடனே சொரூபநிலை சார்ந்துதேறே

விளக்கவுரை :


1079. சார்ந்ருமே வுப்பிட்டப் பாண்டம்போல தட்டழிந்துபோகுமே தேகந்தானும்
கூர்ந்துமே தேகமது கல்தூணாகும் குறியான காயமது கற்பஞ்சொல்வேன்
தேர்ந்துபார் செங்கடுக்காய் நிதமுமுண்ணு தெளிவான மண்டலந்தா னுண்டபோது
ஆர்ந்துமே சுவாசமது கீழேநோக்கும் மகங்கார்க்குண்டதியி னுணுக்கம்பாரே  

விளக்கவுரை :


1080. நுணுக்கமாம் சதாசிவத்தின் பெருமைபாரு நுனிநாக்கு மூக்குமுனைசிரசுதானும்
கணுக்கமாங் குண்டலியை வாசிபற்றிக் கதிரொளியைக் காணுதற்கு லக்கோயில்லை
பணுக்கமாம் நேசகபூரகத்தில் தானும்பார்க்கவே மதிலயத்தை யூணிநிற்கும்
துணுக்கமாம் காயமது யிறுகிப்போகும் துன்பசாகரத்தைவிட்டுத் துலைவாய்நில்லே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 1071 - 1075 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1071. தாமேதான் பசுவுக்கு ஞானமார்க்கம் தாக்குடனே போதித்தால் அறிவுமுண்டோ
வேமேதான் கரைகடந்த ஞானிதானும் வெளியான சற்குருவின் முன்னேவந்து
போமேதான் சொன்னாலும் தெரியாதொன்றும் புகட்டினாலென்னபலன்தானுண்டாமோ
நாமேதான் சொன்னபடி யேழாயிரத்தில் நலமான நுட்பமெல்லாம் காட்டினேனே

விளக்கவுரை :


1072. காட்டினேன் நுட்பமெல்லா முலகத்தோர்க்கு நலமாக கொட்டிவிட்டேன் பிசகுமல்ல
காட்டினேன் பிள்ளைகளும் பிழைக்கவென்று கருத்தறியாமல் போனால்நானென்ன செய்வேன்
பூட்டினேன் பிழைக்கவென்று மைந்தாகேளு பிசகாமல் சொல்லிவிட்டேன் ஞானமார்க்கம்
மாட்டினேன் அரைக்கீரை அறுத்தாலும்தான் மறுகாகாலும் ததைப்பதுபோலாகும்பாரே

விளக்கவுரை :

[ads-post]

1073. பாரேதான் அவரவர்கள் குணம்போலாகும் பாங்கான கற்பகத்தை சார்ந்தாலென்ன
சீரேதான் பலநூறுங்கற்றாலென்ன சிவயோகந்தன்னிலே சென்றாலென்ன 
நேரேதான் தத்துவங்கள் அறிந்தாலென்ன நெடிதான வாசிடைதா னிறுத்திலென்ன
கூரேதான் அஷ்டசித்துக் கொண்டாலென்ன குணமில்லை பூவுலகிலொன்றங்காணே

விளக்கவுரை :


1074. காணவே தாளகத்தின் வேதைகேளு கடிதான தாளகமோர் பலமதாகும்
மாணவே சுண்ணாம்புக் கவசஞ்செய்து மதிப்புடனே பனங்கள்ளிற் சாமம்நாலு
நீணவே தாளித்துச் சுத்திசெய்து நெடிதான தாளகத்தை யெடுத்துப்பாரு
வேணவே துருசதுஊம் நேரேயொக்க விரைவாகப் படிசாற்றால் அரைத்துப்பூசே

விளக்கவுரை :


1075. பூசியே ரவிதனிலே காயப்போடு பொங்கமுடன் சுண்ணாம்புச் சீலைசெய்து
வீசியே குக்குடமாம் போடயீயம் விரைவான வங்கமது யென்னசொல்வேன்
ஊதியே காந்தமது யீயமாச்சு உப்பனமாந் தாளகத்தின் வேதையாச்சு
மாசில்லா வங்கமது நேரேசூதம் மாட்டாகெந்தகமு மாட்டித்தீரே

விளக்கவுரை :


Powered by Blogger.