போகர் சப்தகாண்டம் 1156 - 1160 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1156. வார்த்துமே யரைத்துநன்றாய்குகையிற்பூசி வாகாகக்கட்டினதோர் சூதம்வைத்து
ஏர்த்துமே வுருகையிலே பூநாகசத்தை இதமான சூதத்தினிடையே தாக்குபோர்த்துமே
புடந்தானுஞ் சொல்லக்கேளு புகழான வானசத்தை சித்திரமூலங்
கோர்த்துமே தொடையோடு முள்ளங்கித்தாழை கொடிதான நாயுருவி வமுரிகூட்டே

விளக்கவுரை :


1157. கூட்டுநீ புரசோடுதேவதாளி கொடிக்கள்ளி புனமுருங்கை சதுரக்கள்ளி
மாட்டுநீயெள்ளோடு புறாவினெச்சம் மகத்தான பதினைந்தும் வெவ்வேறேவாங்கித்
தீட்டுநீ வெவ்வேறாய்ச் சுட்டுசாம்பல் திறமாக வகைவகையாய்ப் படியளந்துபோட்டு
மூட்டுநீ பாண்டத்திற் கொட்டிநீயு மூத்திரந்தான் பதினைந்துபடிவாரே

விளக்கவுரை :

[ads-post]

1158. படியைந்து கோமியத்தைக் கூடவாரு பாங்கான கழுதையொடு குதிரையானை
நெடியைந்து ஆடோடுநாலுங்கேளு நிலவரமாயமுரிபடியைந்யுவாரு  
கொடியைந்து படிதானும் நாற்பதாச்சு கூசாதே சாம்பலுக்குங் கரைத்துவைத்து
தேடியைந்து மூன்றுநாள் தெளிவைவாங்கிச் சிறப்பாக வடுப்பேற்றி யெரித்திடாயே

விளக்கவுரை :


1159. எரித்திடவே குழம்புபோல் வருதல்கண்டு இணக்கமொடு படிகாரங் கெந்தினுப்பு
அரித்திட்டுக் கல்லுப்புச் சத்திசாரம் ஆதியாம் நவாச்சாரம் ஏவட்சாரம்தான்
பொரித்திட்ட வெங்காரஞ் சவர்காரம்தான் புகழான கெந்தியுப்பு வளகிலுப்பு
சரித்திட்டு கடல்நுரையு மன்னபேதி சார்பான துரிசியொடு பூநீறுதானே

விளக்கவுரை :


1160. தானான வகைக்கொன்று பலமுமைந்து சார்பாகப் பொடிபண்ணிக் குழம்பிலிட்டுப்
பானான பாஷாணநிலையைக்கேளு பரிவான கெந்தியொடு சங்குசுன்னந்
தேனான வீரமொடு வகைக்குமொரு பலந்தான்சிறக்கவே எருக்கம்பால் படிதான்வாரு
கானான குழம்புதனிலொக்கவிட்டுக் கலரவேயடுப்பெரித்து மெழுகுபோல்வாங்கே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 1151 - 1155 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1151. மாளாமற்கனமான கற்பமுண்ணு மாயியைத்தான் பூசைபண்ணு மயக்கம்போக
தாளாமல் வாசியைத்தான் பூட்டிவாங்கி சதாநித்தம் குருபதத்தில் சரணம்பண்ணு
ஆளாமல் பலத்திலஃ மனதையூணு ஆனந்தமாவதற்கு அமுதமுண்ணு
மீளாமல் கெவனத்திலேறவென்றால் விடுஞ்சூதம் பசிக்குண்ண மருந்ருகேளே

விளக்கவுரை :


1152. கேளுநீ யானையென்ற சூதராஜன் கெவனத்தில் பறக்கின்ற மார்க்கமெல்லாம்
கேளுநீ பரிசுத்த வேமமாக விbங்கியதோர் பகலிரவுமொன்றாய்க்காட்ட
தாளுநீ நிமைக்குமுன்னே கோடிகாதஞ் சஞ்சரித்து அடுக்கெல்லாம் தாண்டியேற
மீளுநீ அட்டமா சித்தியாடமிருந்துவட வாக்கினிபோல் பசியண்டாக்கே

விளக்கவுரை :

[ads-post]

1153. ஆக்குவது சூதமது குகையில்நின்று அமளியாயுருக்கையிலே பூநாகத்தை
நோக்குவது சமனாகக் கொடுத்துவாங்கி நேராகப்புடமிட்டு விடுவித்தாக்கால்
தேக்குவது சூதமென்ற ராஜாவுக்குச் சிவணுண்ட ஆலம்போல்பசியண்டாகும்
நீக்குவது அரசனைப்போல் நினைத்ததெல்லாம் வெல்லும் நேரிட்ட கெந்திசத்தை யிட்டுத்தாண்டே

விளக்கவுரை :


1154. தாண்டியே பின்னுபாசங்களெல்ல்ம் முட்டுதனித்தபின்பு மூலிகைக்குச் சத்தைப்பூட்டு
தீண்டியபின் நவலோக மிட்டுத்தீரு திறமாக புடத்தையிட்டு நவாவிட்டிணமூட்டு
வேண்டியபின் தனித்ததங்கம் செம்பைபூட்டு மேலான மணிபார்த்த வருணனைபோலாகும்
தூண்டியே யிவ்வளவுங்கடந்துபோச் சுகமான செம்பையினிசொல்லக்கேளே

விளக்கவுரை :


1155. சொல்லவே குகைக்குள்ளே மருந்துபூசத் துடியான சிலைகெந்திநிமிளைக்காந்தம்
கொல்லவே பூநாகமிவை தானைந்து கொடிதாகச்சமமாக நிறுத்துகொண்டு
கல்லவே கஞ்சாவினஃ விரையினொக்க கலரவே ரோமத்தின் தயிலம்வார்த்து
பல்லவே மூன்றுநாள்ட்டியாட்டிப் பக்குவமாய் ரோமத்தின் தயிலம்வாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 1146 - 1150 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1146. கொல்லுமே சூதமதுமாண்டுதானால் கோடானகோடிவித்தை யாடலாகும்
வெல்லுமே சூதத்திற் கெந்திரெட்டி விரைவாகத்தான் சேர்த்து ஜெயநீர்தன்னால்
புல்லுமே நாற்சாம மரைத்தபோது புகழான மதவானை யடங்கும்பாரு
தெல்லுபோல் பில்லையது செய்துமேதான் சிறப்பாக ரவியில்வைத்து காயப்போடே

விளக்கவுரை :


1147. போடவே பில்லையது காய்ந்தபின்பு பொலிவாக வோட்டில்வைத்து சீலைசெய்து
நீடவே தளவாயாஞ் சட்டிதன்னில் கெடிதாக வுப்பதனை நிரபக்கொட்டி 
சூடவே வகலதனைவோட்டில்வைத்து சூட்சமுடன் தானெரிப்பாய் நாலுசாமம்
சாடவே ஆறவிட்டு மறுநாள் தீயை சட்டமுடன் தானெரிப்பாய் கமலந்தானே

விளக்கவுரை :

[ads-post]

1148. கமலமாமேழு நாளெரிப்பாய் மைந்தா கருணைபெற தீயாறி யெடுத்துப்பாரு
அமலமாஞ் செந்தூரமென்ன சொல்வேன் அப்பனே கண்கொள்ளா வேதையாகும்
தமலமாய் வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று தாக்கடா மாற்றதுவும் பத்தேயாகும்
புமலமாம் பசுந்தங்கமிதுக் கொப்பாமோ பூதலத்தி லாச்சரியமிகு வேதையாமே

விளக்கவுரை :


1149. வேதையாங் குடவனிவே மாற்றெட்டாகும் வெளியான தனிச்செம்பில் மாற்றோமெத்த
பாதையாமின்ன வெகுவேதை யொடும்பாங்கான செந்தூரஞ் சொல்லப்போமோ
நீதையாம் ரசீதமென்ற சூதவித்தை நிலைத்துதடா யேமமென்ற வித்தையாகும்
மேதையாஞ் சியோகம் நிலைக்கப்பாரு மேதினியில் ராசனாய் வாழலாமே

விளக்கவுரை :


1150. தானான குருவுடைய பதத்தைப்போற்றி சமுசயங்க ளிருந்தெல்லாங் கேட்டுக்கேட்டு
கோனான குருசொல்ல வாதம்பாரு கருவில்லாதிருந்தாக்கால் நூலைப்பாரு
ஆனான நூலல்லால் வாதம்பார்த்தால் அணுகாது வாதமொன்றுந் தலைகீழாகும்
தேனான சூதத்தின் சாமமட்டுந்தியேங்கியே நரகெய்திமாளுவானே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 1141 - 1145 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1141. காணிந்த மருந்தெல்லாங் கல்வத்திட்டு கடிதான பெருங்கம்பால் வார்த்துஆட்டிப்
பூணிந்த மருந்தை கிண்ணிக்குள்பூசி பேரான வாலுகையின் மேலேவைத்து
ஆணிந்த வடுப்பேற்றிப் பட்சமொன்று ஆறாமலெரியிட்டு அப்பால்வாங்கித்
தோனிந்தப் பீங்கானி லெடுத்துவைத்து சூட்சமமாங் குருவாகும் நூற்றுக்கொன்றீயே

விளக்கவுரை :


1142. ஈவதுதான் வங்கத்திற் செம்புதனி லெடுத்துப்பா ரிதுபத்துஐந்துமாற்று
ஆவதுதான் சூதமது வெள்ளியாகும் அதிகமாம்பித்தளையும் வெள்ளியாகும்
போவது தானேமவித்தை யிதுதானப்பா பூட்டினேன் தொந்தங்களனேகங்கோடி
தேவதுதான் வெள்ளிவித்தை சுருக்குமெத்த சிவசிவாசித்தர்சொன்னார் கரைகாணேணே

விளக்கவுரை :

[ads-post]

1143. கரைகாணா சாத்திரங்கள் மெத்தவுண்டு காரணமாங் காலாங்கிநாயனார்தாமும்
நிறைகாணா ரேழுலட்சம் விரித்துச்சொன்னார் நேர்ப்பாக விரிவையெல்லாம் பிரித்துபார்த்து
உரைகாணார் சூத்திரமாய்ச் சுருக்கு அப்பாயுற்பனமாந்தொழில்வகை யெல்லாஞ்சொன்னேன்
பரைகாணா யெந்நூலை பொய்யென்றெண்ணில் பாழாகும் நரகத்திலெய்துவாரே

விளக்கவுரை :


1144. எய்துவார் ரவிகோடி நரகத்தில்தானும் ஏனமென்ற பிறப்பாக சபிப்பாளாத்தாள்
அய்துவார் வாதம்பொய் யென்றுசொன்னாலாகா வங்கிஷங்கள் குடும்பமெல்லாம்
நய்துவார் நரகெய்தி வறுமையாகும் நாதாக்கள் பெரியார்களிடசாபம்  
கொய்துவா ரானாலுந் தீர்க்கக்கூடா கொடுஞ்சத்தி ரிஷியிட்ட சாபம்வேரே

விளக்கவுரை :


1145. வாறான வுப்பினுட ஜெயநீர்தன்னால் வாகாக துருசதனையாட்டிமைந்தா
சேறான கழம்புபதந்தன்னிலாட்டி சிறப்பாக வுண்டைக்குச் சாரந்தன்னை
கூறாகக் கவசமது செய்துமைந்தா குணமாக ரவிதனிலே காயவைத்து
தாறான குக்குடமாய் வைத்துநீறு தயவாகச் சூதமதைக் கொல்லும்பாரே

விளக்கவுரை :


Powered by Blogger.