போகர் சப்தகாண்டம் 1256 - 1260 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1256. கூறினேன் போகரிஷிசொல்லுமார்க்கம் கொற்றவனாம் விபிஷணன்திரவியங்கள்
தேறினதோர் கோடிவரையுகாந்த தங்கம் கொட்டியே கிடக்குமது லங்கைதன்னில்
மீறினதோர் பச்சைவடம் தாவடங்கள் மின்னலைப்போ லொளிவீசு மிலங்கைதன்னில்
மாறியதோர் கோட்டைமுகம் பதிமுன்னாக மன்னவனார் நிதியனைத்தங் காணலாமே

விளக்கவுரை :


1257. காணலாம் பொற்கோபுர வாசல்முன்னே கருவான செந்தூரக்கிடாரமுண்டு
தூணெலாந் தங்கமதுசெம்புவண்ணம் துறைநடுவெ ஜெயரசக்கிடாரமுண்டு
பூணெலாம் வாபரணமெத்தவுண்டு பொங்கமுடன் தானிருக்கும் புரவிபூண்டு
நீணலாந் தெய்வலோகபுரவிமீதில் நெடிதான ரக்கையதுதோன்றுந்தானே

விளக்கவுரை :

[ads-post]

1258. தானான பரவியதுதானிருக்குந் தனியான சப்ரகூட மண்டபந்தான்   
வேனான செம்பினுட மாளிதானும் விண்ணுலகில் விசுவகர்ம நிரூபந்தன்னால்
பானான விபீஷணனாமாண்டு தன்னில்பாவித்த மண்டபத்தின் மகிமைசொல்வோம்
கானான யிந்திரசித்தன் சிசுபாலன்தான் காட்டியதோர் வாதவித்தை காணலாமே

விளக்கவுரை :


1259. ஆமேதான் ஜெயரசமாஞ் செந்தூரத்தை அடவுடனே தாம்பிரத்தின் மாளிதன்னில்
தாமேதான் காலடியில் மண்டபத்தில் தாக்கவே தூம்சரமாம் ஜெயசூதத்தை
காமேதான் தடவிதணலைக்காட்டக் கட்டடமாமாளிகையும் பழுத்துதங்கம்
நாமேதான் கண்டபடி சொர்ணமாளி நளினமுட னிந்திரசித்தனாட்டினானே

விளக்கவுரை :


1260. நாட்டினான் சித்தர்முதல் ரிஷிகள்தாமும் நடுக்கமுடன் திடுக்கிட்டு ஓடிவந்து
மீட்டினதோர் ஜெயசூததூம்பரத்தை மேதினியிலாரிடமும் கிட்டாமற்றான்
பூட்டினார் கிராடமென்ற ஜெயசூதத்தை பூதலத்தில் யாரேனும் நெருங்கவொட்டால்
தாட்டினாற் சமாதியிலே கிடாரமெல்லாந் தாணியில் பாதாளம் புதைத்திட்டாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 1251 - 1255 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1251. பொருள்சொல்வார் நளராஜன் திரவியங்கள் பூதலத்தில்மெத்தவுண்டு புகலப்போமோ
இருள்சேர்ந்த காட்டகத்தில் புதைத்துவைத்தார் எழிலான தேவரிஷிவனந்தானப்பா
மருள்சாய்ந்த மராமரமாம் விருட்சமுண்டு மலையோர லதினருகே சித்தர்கூட்டம்
அருள்சூழ்ந்த மூலவர்க்கர் மெத்தவுண்டு அவருடைய பலாபலத்தை யறையக்கேளே

விளக்கவுரை :


1252. கேளேநீ திரவியங்கள் மலைபோற்றங்கம் குவிந்திருக்குஞ் சாவடியாங் குளமொன்றுண்டு
சூளேநீ ராட்சதங்கள் கூட்டமப்பா சொல்லவொண்ணா ரிஷிகளுட சேர்வைமெத்த
அளேதான் மானிடர்க ளெவர்போனாலும் அண்டவொண்ணாதிரவியத்தை யெடுக்கப்போமோ
தாளேதான் மந்திரமாமதர்வணவேதம் தாக்குடனே தானறிந்தோர் போகலாமே  

விளக்கவுரை :

[ads-post]

1253. போகலாம் பொன்னெல்லாம் வாரிவந்து பூதலத்தி லரசனாய் வாழலாமே
வாழலாமென்றுசொல்லி தனத்தைத்தேடி தாரணியில் வைத்திறந்தோர் கோடாகோடி
வேகலாந்தீயதனி லென்றஜோதி மேதினியில் கேட்டிருந்து வீணாய்மாண்டார்
நோகலாஞ் சித்தர்மனமென்றெண்ணாமல் நொடிக்குள்ளே சாபத்தால் மாண்டிட்டாரே

விளக்கவுரை :


1254. மாண்டிட்டார் வரைகோடி ரிஷிசாபத்தால் மண்டிலத்தில் மடிந்தவர்கள் கோடாகோடி
தூண்டிட்ட கருமான மின்னமொன்று சூட்சமுடன் சொல்லுகிறேன் மைந்தாகேளு
வேண்டிட்ட திரவியங்கள் மெத்தவுண்டு விலாடனாம் நகரமதில் மலையோரந்தான்
தாண்டிட்ட கோபுரமாந் தேவஸ்தானம் தனிப்பிள்ளையார் கோவில்வுண்டுபாரே

விளக்கவுரை :


1255. பாரேதான் திருக்கோயில்குளமுண்டு படிமாம்வட்டக்கல்பாறையுண்டு
நேரேதான் சிவாலிங்கஞ் சமைந்திருக்கும் நெடிதான குத்துக்கல்பாறையுண்டு
சீரேதான் தருமரிட திரவியங்கள் தேடவொண்ணா மலைபோலதங்கமப்பா
சீரேதான் களஞ்சியங்கள் கோடாகோடி குறிக்கமுடிதென்று கூறினாரே   

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 1246 - 1250 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1246. கண்டேனே ரிஷிகளுட கூட்டந்தன்னைக் காலாங்கிநாயனார் சமாதிகண்டேன்
உண்டான சமாதியிடபக்கந்தன்னில் வுத்தமனே மேருகிரி சமாதியோகம்
அண்டாத தடாகமொன்று யங்கேயுண்டு அதிலுள்ள வதிசயங்கள் யாவுஞ்சொல்வேன்
திண்டான வாயிரங்கால் மண்டபந்தான் திறமாகக் கட்டியிருக்கும் வண்மைபாரே

விளக்கவுரை :


1247. பாரேதான் சித்தர்கள் கூட்டமாகப் பதிவாக தூணருகில் சமாதியிருப்பார்
நேரேதான் காலாங்கி மூவர்தாமும் நெடுந்தூரஞ் சமாதியது நெருங்கிருப்பார்
சாரேதான் சதகோடி திரிஷிகள் தாமும் சார்பாகத் தானருகில்வந்து
கூரேதான் தீதங்கள் மிகவுங்கேட்பார் கோடிமனுதானுரைப்பார் சித்தர்தாமே

விளக்கவுரை :

[ads-post]

1248. தாமேதான் கருக்குருவும் விள்ளச்சொல்வார் தாக்கான செந்தூரக்காடு சொல்வார்
வேமேதான் சுன்னமென்ற காடுஞ்சொல்வார் மிக்கான கிடாரங்களிருப்புசொல்வார்
போமேதான் ராமரிடவைப்புஞ்சொல்வார் பொலிவான கெடிஸ்தலமும் புகழ்ந்துசொல்வார்
நாமேதான் ராவணிஸ்தலமும் சொல்வார் நலமான திரவியமு மிடஞ்சொல்வாரே

விளக்கவுரை :


1249. சொல்லுவார் பொன்னென்ற காட்டையெல்லாம் சூட்சமுடன் சூட்சமுடன்றானுரைப்பார் வதீதமெத்த
வெல்லுவார் அயோத்திநகராசனான வீரியனா மரிச்சந்திரன் வைத்தபொன்னை
கெல்லுவாரஃ பாதாளவஞ்சனத்தைக் கீர்த்தியுடன்றான் கொடுப்பார்மைந்தாகேளு
புல்லுவார் புரூரன்றன் பொன்னையெல்லாம் பொருப்பாகத் தானெடுக்கும் வகைசொல்வாரே

விளக்கவுரை :


1250. வகையுடனே ராஜாக்கள் வைத்தமார்க்கம் வகுப்புடனே தானெடுப்பார் சித்தர்வர்க்கம்
தொகையுடனே விக்கிரமாதித்தன் சொத்தைதுறைகோடி பரிசனமாமெல்லாஞ்சொல்வார்
நகையுடனே ராஜருட சோழவர்க்கம் நாட்டிலுள்ள பொருளையெல்லாம் விரித்துச்சொல்வார்
பகையுடனே பாண்டவாள் திருதராட்சன் பண்பாகத் தேடிவைத்த பொருள்சொல்வாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 1241 - 1245 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1241. பத்தான சாமமது சென்றபின்பு பாங்காக எடத்தப்பார் செந்தூரம்தான்
புத்தான லிங்கமது போலிருக்கும் பொலிவாக செந்தூரம் சொல்லப்போமோ
சத்தான தங்கமது பத்துக்கொன்று தாக்கியரை ஜெயநீரால் மறுக்காலுந்தான்
வித்தான செந்தூரம் வேகமிஞ்சி வெகுதூரம் வேதையது வோடும்பாரே

விளக்கவுரை :


1242. பாரேதான்வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று பாங்காகத் தானுருக்கியெடுத்துப்பாரு
சீரேதான் கருப்புவன்னக் கனகமாகும் சிறப்புடனே யூதிப்பார் சிவந்துபொன்னாம்
நேரேதான் தகடடித்து புடத்தைப்போடு கெடிதான மாற்றதுவு மாறதாகும்   
கூரேதான் நாலுக்கோர் தங்கஞ்சேர்த்துக் குறிப்புடனே சென்றெடுத்து யுருக்கிப்பாரே

விளக்கவுரை :

[ads-post]

1243. சென்றேனே வஷ்டதிசை குளிகைகொன்டேன் திரளான நதிமலைகளனைத்தும்பார்த்தேன்
சென்றேனே பொன்விளையும் மணலுங்கண்டேன் செழிப்பான கெம்பினுட விளையுங் கண்டேன்
சென்றேனே பச்சைமலை யானுஞ்சென்றேன் சிவப்பான வயிசீரிய விளையும்பார்த்தேன்
சென்றேனே நாகார்ச்சுனன் மலையுங்கண்டேன் சேனவித வதிசயங்கள றிந்திட்டேனே

விளக்கவுரை :


1244. அறிந்திட்டேன் வெள்ளியென்ற மலையுங்கண்டேன் அப்பனே செம்பினுட மலையுங் கண்டேன்
பிரிந்திட்டேன் மேருகிரி தன்னிற்சென்றேன் ரோமரிஷிகள் முனிசித்தர்தம்மை
பரிந்திட்டு யவர்களிடம் சென்றுபேசி பலபலவாஞ் சாத்திரங்கள் மறைத்ததெல்லாம்
குறித்திட்டு வெளியாக்க வென்றேயெண்ணி குளிகையிட்டு சீனபதி யமர்ந்திட்டேனே

விளக்கவுரை :


1245. பதியான தீவுதீவாந்திரங்கள் பறக்கவே குளிகையொன்று செய்துகொண்டேன்
நதியான சத்தசாகரமும் கண்டேன் நாதாக்களிருப்பிடமும் துறையுங்கண்டேன்
விதியான சத்திரங்கள் மலைபோற்றங்கம் விஸ்தாரமாயிருக்குங் குகையுங்கண்டேன்
மதியான வெள்ளியென்ற கானாற்கண்டேன் மகத்தான சுரங்கமுதல் யான்கண்டேனே

விளக்கவுரை :


Powered by Blogger.