போகர் சப்தகாண்டம் 1241 - 1245 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1241 - 1245 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1241. பத்தான சாமமது சென்றபின்பு பாங்காக எடத்தப்பார் செந்தூரம்தான்
புத்தான லிங்கமது போலிருக்கும் பொலிவாக செந்தூரம் சொல்லப்போமோ
சத்தான தங்கமது பத்துக்கொன்று தாக்கியரை ஜெயநீரால் மறுக்காலுந்தான்
வித்தான செந்தூரம் வேகமிஞ்சி வெகுதூரம் வேதையது வோடும்பாரே

விளக்கவுரை :


1242. பாரேதான்வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று பாங்காகத் தானுருக்கியெடுத்துப்பாரு
சீரேதான் கருப்புவன்னக் கனகமாகும் சிறப்புடனே யூதிப்பார் சிவந்துபொன்னாம்
நேரேதான் தகடடித்து புடத்தைப்போடு கெடிதான மாற்றதுவு மாறதாகும்   
கூரேதான் நாலுக்கோர் தங்கஞ்சேர்த்துக் குறிப்புடனே சென்றெடுத்து யுருக்கிப்பாரே

விளக்கவுரை :

[ads-post]

1243. சென்றேனே வஷ்டதிசை குளிகைகொன்டேன் திரளான நதிமலைகளனைத்தும்பார்த்தேன்
சென்றேனே பொன்விளையும் மணலுங்கண்டேன் செழிப்பான கெம்பினுட விளையுங் கண்டேன்
சென்றேனே பச்சைமலை யானுஞ்சென்றேன் சிவப்பான வயிசீரிய விளையும்பார்த்தேன்
சென்றேனே நாகார்ச்சுனன் மலையுங்கண்டேன் சேனவித வதிசயங்கள றிந்திட்டேனே

விளக்கவுரை :


1244. அறிந்திட்டேன் வெள்ளியென்ற மலையுங்கண்டேன் அப்பனே செம்பினுட மலையுங் கண்டேன்
பிரிந்திட்டேன் மேருகிரி தன்னிற்சென்றேன் ரோமரிஷிகள் முனிசித்தர்தம்மை
பரிந்திட்டு யவர்களிடம் சென்றுபேசி பலபலவாஞ் சாத்திரங்கள் மறைத்ததெல்லாம்
குறித்திட்டு வெளியாக்க வென்றேயெண்ணி குளிகையிட்டு சீனபதி யமர்ந்திட்டேனே

விளக்கவுரை :


1245. பதியான தீவுதீவாந்திரங்கள் பறக்கவே குளிகையொன்று செய்துகொண்டேன்
நதியான சத்தசாகரமும் கண்டேன் நாதாக்களிருப்பிடமும் துறையுங்கண்டேன்
விதியான சத்திரங்கள் மலைபோற்றங்கம் விஸ்தாரமாயிருக்குங் குகையுங்கண்டேன்
மதியான வெள்ளியென்ற கானாற்கண்டேன் மகத்தான சுரங்கமுதல் யான்கண்டேனே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar