போகர் சப்தகாண்டம் 1246 - 1250 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1246 - 1250 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1246. கண்டேனே ரிஷிகளுட கூட்டந்தன்னைக் காலாங்கிநாயனார் சமாதிகண்டேன்
உண்டான சமாதியிடபக்கந்தன்னில் வுத்தமனே மேருகிரி சமாதியோகம்
அண்டாத தடாகமொன்று யங்கேயுண்டு அதிலுள்ள வதிசயங்கள் யாவுஞ்சொல்வேன்
திண்டான வாயிரங்கால் மண்டபந்தான் திறமாகக் கட்டியிருக்கும் வண்மைபாரே

விளக்கவுரை :


1247. பாரேதான் சித்தர்கள் கூட்டமாகப் பதிவாக தூணருகில் சமாதியிருப்பார்
நேரேதான் காலாங்கி மூவர்தாமும் நெடுந்தூரஞ் சமாதியது நெருங்கிருப்பார்
சாரேதான் சதகோடி திரிஷிகள் தாமும் சார்பாகத் தானருகில்வந்து
கூரேதான் தீதங்கள் மிகவுங்கேட்பார் கோடிமனுதானுரைப்பார் சித்தர்தாமே

விளக்கவுரை :

[ads-post]

1248. தாமேதான் கருக்குருவும் விள்ளச்சொல்வார் தாக்கான செந்தூரக்காடு சொல்வார்
வேமேதான் சுன்னமென்ற காடுஞ்சொல்வார் மிக்கான கிடாரங்களிருப்புசொல்வார்
போமேதான் ராமரிடவைப்புஞ்சொல்வார் பொலிவான கெடிஸ்தலமும் புகழ்ந்துசொல்வார்
நாமேதான் ராவணிஸ்தலமும் சொல்வார் நலமான திரவியமு மிடஞ்சொல்வாரே

விளக்கவுரை :


1249. சொல்லுவார் பொன்னென்ற காட்டையெல்லாம் சூட்சமுடன் சூட்சமுடன்றானுரைப்பார் வதீதமெத்த
வெல்லுவார் அயோத்திநகராசனான வீரியனா மரிச்சந்திரன் வைத்தபொன்னை
கெல்லுவாரஃ பாதாளவஞ்சனத்தைக் கீர்த்தியுடன்றான் கொடுப்பார்மைந்தாகேளு
புல்லுவார் புரூரன்றன் பொன்னையெல்லாம் பொருப்பாகத் தானெடுக்கும் வகைசொல்வாரே

விளக்கவுரை :


1250. வகையுடனே ராஜாக்கள் வைத்தமார்க்கம் வகுப்புடனே தானெடுப்பார் சித்தர்வர்க்கம்
தொகையுடனே விக்கிரமாதித்தன் சொத்தைதுறைகோடி பரிசனமாமெல்லாஞ்சொல்வார்
நகையுடனே ராஜருட சோழவர்க்கம் நாட்டிலுள்ள பொருளையெல்லாம் விரித்துச்சொல்வார்
பகையுடனே பாண்டவாள் திருதராட்சன் பண்பாகத் தேடிவைத்த பொருள்சொல்வாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar