1251. பொருள்சொல்வார் நளராஜன்
திரவியங்கள் பூதலத்தில்மெத்தவுண்டு புகலப்போமோ
இருள்சேர்ந்த காட்டகத்தில்
புதைத்துவைத்தார் எழிலான தேவரிஷிவனந்தானப்பா
மருள்சாய்ந்த மராமரமாம்
விருட்சமுண்டு மலையோர லதினருகே சித்தர்கூட்டம்
அருள்சூழ்ந்த மூலவர்க்கர்
மெத்தவுண்டு அவருடைய பலாபலத்தை யறையக்கேளே
விளக்கவுரை :
1252. கேளேநீ திரவியங்கள்
மலைபோற்றங்கம் குவிந்திருக்குஞ் சாவடியாங் குளமொன்றுண்டு
சூளேநீ ராட்சதங்கள்
கூட்டமப்பா சொல்லவொண்ணா ரிஷிகளுட சேர்வைமெத்த
அளேதான் மானிடர்க
ளெவர்போனாலும் அண்டவொண்ணாதிரவியத்தை யெடுக்கப்போமோ
தாளேதான்
மந்திரமாமதர்வணவேதம் தாக்குடனே தானறிந்தோர் போகலாமே
விளக்கவுரை :
[ads-post]
1253. போகலாம் பொன்னெல்லாம்
வாரிவந்து பூதலத்தி லரசனாய் வாழலாமே
வாழலாமென்றுசொல்லி
தனத்தைத்தேடி தாரணியில் வைத்திறந்தோர் கோடாகோடி
வேகலாந்தீயதனி லென்றஜோதி
மேதினியில் கேட்டிருந்து வீணாய்மாண்டார்
நோகலாஞ்
சித்தர்மனமென்றெண்ணாமல் நொடிக்குள்ளே சாபத்தால் மாண்டிட்டாரே
விளக்கவுரை :
1254. மாண்டிட்டார் வரைகோடி
ரிஷிசாபத்தால் மண்டிலத்தில் மடிந்தவர்கள் கோடாகோடி
தூண்டிட்ட கருமான
மின்னமொன்று சூட்சமுடன் சொல்லுகிறேன் மைந்தாகேளு
வேண்டிட்ட திரவியங்கள்
மெத்தவுண்டு விலாடனாம் நகரமதில் மலையோரந்தான்
தாண்டிட்ட கோபுரமாந்
தேவஸ்தானம் தனிப்பிள்ளையார் கோவில்வுண்டுபாரே
விளக்கவுரை :
1255. பாரேதான்
திருக்கோயில்குளமுண்டு படிமாம்வட்டக்கல்பாறையுண்டு
நேரேதான் சிவாலிங்கஞ்
சமைந்திருக்கும் நெடிதான குத்துக்கல்பாறையுண்டு
சீரேதான் தருமரிட
திரவியங்கள் தேடவொண்ணா மலைபோலதங்கமப்பா
சீரேதான் களஞ்சியங்கள்
கோடாகோடி குறிக்கமுடிதென்று கூறினாரே
விளக்கவுரை :