போகர் சப்தகாண்டம் 1271 - 1275 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1271. வெளியிட்ட யெந்தன்மேல் சந்தோஷித்து வெளியாக சாத்திரத்தின் மறைப்புதன்னை
பலியிட்ட சாபத்தை நிவர்த்திசெய்து பாருலகி லெள்ளோரும் பிழைக்கவென்று
குளியிட்ட கவனமுதல் கெவுனசித்தி குறிப்பான வடையாள மனைத்துங்காட்டி
வளியிட்டா ரெந்தனுக்கு வாக்குசொல்லி வரங்கொடுத்தா ரிஷிமுனிவர் சித்தர்தாமே

விளக்கவுரை :


1272. சித்தருடவரம்பெற்று திரும்பியானும் சென்றேனே சீனபதிதேசந்தன்னில்
நித்தமுடன் முனிரிஷிகள் சித்தர்தாமும் நேர்துரைத்தமுறைப்படியே யானுங்கொண்டு
சத்தமுடன் செத்ததொரு மனிதர்தம்மை தாரணியில் காணுதற்கு ஜாலஞ்சொல்வேன்
பத்தியடன் மாளிகையா மச்சிவீடு பாங்காகத் தான்சமைப்பீர் மைந்தாகேளே

விளக்கவுரை :

[ads-post]

1273. கேளவே பத்தடியாய் நாலுபக்கம் கெடியான சந்தில்லா மச்சிவீடு
நீளவே யொருபக்கம் சந்தமைத்து நிலையான வாள்போக யிடமுண்டாக்கி
தாளவே கண்ணாடி கீழ்புதைத்து தாக்காகச் சுற்றிலும் படமடைத்து
ஆளவே ஒவ்வொரு படத்தில்தானும் அய்யனே அண்பெண்ணா ரூபஞ்செய்யே

விளக்கவுரை :


1274. செய்யவே கண்ணாடி யறுபத்துநான்கு திறமுடனே வைங்கோல மையினாலே
பையவே வெவ்வேறு சட்டந்தன்னில் பாங்காகப் பலவிதரூபமாக  
தொய்யவே சகலவிதவர்ணத்தாலே தோற்றவே நேத்திரத்திற் கழகாக
மய்யவே மறைப்பினுட கருவினாலே மாட்டடா நெற்றுதனில் பொட்டுவையே

விளக்கவுரை :


1275. வைக்கவே மாளிகையில் மேற்புரத்தில் வகையுடனே வாகாஷங்காண்பதற்கு
கைக்கனத்தக் குழாவொன்று துத்தநாகம் கடுந்தூரம் பார்வையது தெரியவேதான்
மெய்க்கவே குழாவினுட சந்தினாலே மேல்நோக்கி வாகாஷந்தன்னைப்பாரு
பொய்க்கவே கண்ணிமைகள் சிமிட்டாமற்றான் பொங்கமுடன் தானின்று சிரசைப்பாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 1266 - 1270 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1266. பார்க்கவே வெகுகோடி சித்தர்தாமும் பதிவாகக் காணவென்று வருவார்போவார்
ஆர்க்கமுடியாது தனத்தின்சேர்வை ஆஇறிவாரிவ் வுலகில் தீதமெத்த
தீர்க்கவே குளிகைகொண்டு யானுஞ்சென்று திரளான கோட்டைவழி தான்கடந்து
ஏற்கவே சுரங்கத்தின் வழியுங்கண்டேன் யெழிலான ராவணனார் நிதிகண்டேன்

விளக்கவுரை :


1267. நிதியான தளவாசலனைத்தும்கண்டேன் நெடிதான பாஞசாலன் கிடாரவைப்பு
பதியான கடலோரம் விருட்சமுண்டு பாங்கான கோட்டைக்கு யிடபாகத்தில்
வதிமணலென்ற வாறுமுண்டு மகத்தான வாற்றருகே சுணையுமுண்டு  
துதியான கிங்கிலியர் காவலுண்டு துறைமுகத்தில் கறுப்பண்ணன் நிற்பான்பாரே

விளக்கவுரை :

[ads-post]

1268. நிற்பானே பாஞ்சாலன் எக்கியசாலை நெடிதான பொன்விலையுந் தலமொன்றுண்டு
கற்பானகன்னிகை களங்கிருப்பார் கண்டாலே சாபத்தால் சமைப்பார் கண்டீர்    
பொற்பான குடமெடுத்துச் சலமேதூக்கி போற்றியே யெக்கியத்திற் கக்ச்சனையே செய்வார்
துற்பான யாகசாலயத்தைக்கண்டேன் துடியான குளிகையிட்டு நடந்தேன்பாரே

விளக்கவுரை :


1269. நடந்தேனே சீனபதி நாடிவந்தேன் நானங்கே சிகாலமிருந்துபார்த்தேன்
தொடர்ந்தேனே தட்சினமாம்பதிக்கு வந்தேன் தொடரான வஞ்சனமாங் கிரியில்வாழும்
அடர்ந்தேனே யவரிடமாங் குகையிற்சென்று அடங்காத சாத்திரத்தி னளவுபார்த்துக்
கடந்தேனே சிகரமலை மேலைசென்றேன் கடாட்சிக்க ரிஷபத்தை துறைபார்த்தேனே

விளக்கவுரை :


1270. துரைகண்டேன் காலாங்கி பாதங்கண்டேன் துய்யமலர்தானெடுத்து சரணஞ்செய்தேன்
கரைகடந்தேன் கடந்தமுனிரிஷிகள்தம்மை கார்க்கவென்று வவர்களிட பாதஞ்சென்றேன்
முறைகொண்டேன் சித்தர்களை யான்வணங்கி மொழிந்திட்டேன் லோகத்தின்மகிமை தன்னை
தரைகண்டே னடிமுடியனைத்துங்கண்டேன் சதாநிஷ்டையத்தனையும் வெளியிட்டேனே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 1261 - 1265 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1261. புதைத்துமே ரிஷிகோடி முனிவர்தாமும் பஊதலத்தி லிந்திரனாம்சித்தனுக்கு
பதைத்துமே சாபமது கொடுத்திட்டார்கள் பாருலகில் பத்தனாய்த் திரியவென்றார்
சிதைத்துமே இந்திரனாஞ் சித்தராஜன் சிறையிட்டு முறையிட்டுத் திரிந்தான்பாரில்
வதைத்துமே தானிறுந்ர யிந்திரசித்தை வாகுடனே சாபமதை தீர்த்தார்பாரே   

விளக்கவுரை :


1262. தீர்க்கவே ஜனகமுனி பெரியோர்தாமும் திறமுடனே கானகத்தில் கொண்டுசென்று
பார்க்கவே யெல்லோரும் புகழவென்று பாவித்தார் ஞானோபதேசவுண்மை
தேர்க்கவே சித்தருட மகத்துவத்தை தெளிவுறவே ஜனகமுனி யெடுத்துக்கூற
மார்க்கவே மனோலயத்தி லகித்துநின்று மதிப்புடனே யோகசமாதியில் நின்றாரே

விளக்கவுரை :

[ads-post]

1263. நின்றாரே லங்கைபதியோரந்தன்னில் நெடுந்தூரம் சுனையொன்று தடாகமுண்டு
குன்றான மலைபோலப்பூஷணங்கள் கோடானகோடி செம்பொன் கிடாரந்தன்னை
வன்றான பூமியிலேவைத்தார் வாகான வேதாளங்காவலுண்டு
தன்றான பூஷணமாஞ் சாடிவைப்பை தரணியிலே போகரிஷிகண்டிட்டாரே

விளக்கவுரை :


1264. கண்டிட்டே னிலங்கைக்கு மேற்புரத்தில் கருவான சுரங்கமுண்டு கிடாரந்தன்னில்
குண்டிட்ட காவடியாங் கோட்டைவாசல் கொடிதான கிங்கிலியர் அனுமார்கூட்டம்
தாண்டிட்ட காவற்கார ணேகருண்டு சதகோடி ரிஷிகளெல்லாம் வருவார்போவார்
கொண்டிட்ட சீதையாபரணந்தன்னைக் கோடித்துத்தான்வருவார் முனிவர்தாமே

விளக்கவுரை :


1265. முனியான லங்கைக்கு வடபாகத்தில் முனையான மலையோரம் பாரையண்டு
தனியான மண்டபமாங் கோட்டையுண்டு தாக்கான கடலோரங் குத்துக்கல்லாம்
கனியான தேவதாமாவிருட்சம் கடலருகே ராட்சதாள் கூட்டங்காவல் 
பணியான சூரியசந்திரனுங்காணார் பாருலகில் யெவராலும் பார்க்கப்போமோ

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 1256 - 1260 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1256. கூறினேன் போகரிஷிசொல்லுமார்க்கம் கொற்றவனாம் விபிஷணன்திரவியங்கள்
தேறினதோர் கோடிவரையுகாந்த தங்கம் கொட்டியே கிடக்குமது லங்கைதன்னில்
மீறினதோர் பச்சைவடம் தாவடங்கள் மின்னலைப்போ லொளிவீசு மிலங்கைதன்னில்
மாறியதோர் கோட்டைமுகம் பதிமுன்னாக மன்னவனார் நிதியனைத்தங் காணலாமே

விளக்கவுரை :


1257. காணலாம் பொற்கோபுர வாசல்முன்னே கருவான செந்தூரக்கிடாரமுண்டு
தூணெலாந் தங்கமதுசெம்புவண்ணம் துறைநடுவெ ஜெயரசக்கிடாரமுண்டு
பூணெலாம் வாபரணமெத்தவுண்டு பொங்கமுடன் தானிருக்கும் புரவிபூண்டு
நீணலாந் தெய்வலோகபுரவிமீதில் நெடிதான ரக்கையதுதோன்றுந்தானே

விளக்கவுரை :

[ads-post]

1258. தானான பரவியதுதானிருக்குந் தனியான சப்ரகூட மண்டபந்தான்   
வேனான செம்பினுட மாளிதானும் விண்ணுலகில் விசுவகர்ம நிரூபந்தன்னால்
பானான விபீஷணனாமாண்டு தன்னில்பாவித்த மண்டபத்தின் மகிமைசொல்வோம்
கானான யிந்திரசித்தன் சிசுபாலன்தான் காட்டியதோர் வாதவித்தை காணலாமே

விளக்கவுரை :


1259. ஆமேதான் ஜெயரசமாஞ் செந்தூரத்தை அடவுடனே தாம்பிரத்தின் மாளிதன்னில்
தாமேதான் காலடியில் மண்டபத்தில் தாக்கவே தூம்சரமாம் ஜெயசூதத்தை
காமேதான் தடவிதணலைக்காட்டக் கட்டடமாமாளிகையும் பழுத்துதங்கம்
நாமேதான் கண்டபடி சொர்ணமாளி நளினமுட னிந்திரசித்தனாட்டினானே

விளக்கவுரை :


1260. நாட்டினான் சித்தர்முதல் ரிஷிகள்தாமும் நடுக்கமுடன் திடுக்கிட்டு ஓடிவந்து
மீட்டினதோர் ஜெயசூததூம்பரத்தை மேதினியிலாரிடமும் கிட்டாமற்றான்
பூட்டினார் கிராடமென்ற ஜெயசூதத்தை பூதலத்தில் யாரேனும் நெருங்கவொட்டால்
தாட்டினாற் சமாதியிலே கிடாரமெல்லாந் தாணியில் பாதாளம் புதைத்திட்டாரே

விளக்கவுரை :


Powered by Blogger.