போகர் சப்தகாண்டம் 1286 - 1290 of 7000 பாடல்கள்
1286. ஏறலாந் தேவதாகோபுரத்தில்
யெழிலான குடைதனையே கையிலேந்தி
தேறலாஞ் சிகரபுரை மீதிருந்து
தேற்றமுடன் குடைதனையே விரித்துயேந்தி
மாறலாமேலிருந்து
கீழ்குதிக்கில் மதிப்புடனே தீரனாயிருந்துகொண்டு
கூறலாமிக பழக்க மதிகமாகி
குன்றின் மேலேறுதற்கு குணமுண்டாமே
விளக்கவுரை :
1287. குணமுண்டா மடமனமுண்டாங்
குவலயத்தில் கோடிபேருளைவந்து மனங்களிப்பார்
பணமென்ன
கோடிதனம்படைத்தாலென்ன பாருலகிலிவ்வித்தைப் பகரப்போமோ
சின்மதிலே யானுமிந்தவித்தை
தன்னைச்சீனபதிசென்று செய்துகீர்த்திபெற்றேன்
வளமுடனே மானிடர்கள்
பிழைக்கவென்று வாகுடனே பாடிவைத்தேன் வளமைபாரே
விளக்கவுரை :
[ads-post]
1288. பாடினதோர் வண்மையினால்
சித்தரெல்லாம் பாருலகிலென்மீது கோபங்கொண்டார்
தேடினதோர் நாதாக்கள
தீதவித்தை தெருவினிலே வீணாகப்போச்சுதென்று
கூடியே யெல்லோரு
மொன்றாய்க்கூடி கூறினார் சாபமதுயென்னசொல்வேன்
நாடியே காலாங்கிநாதர்
பாதம்தான்வணங்கி சாபமதை தவிர்த்திட்டேனே
விளக்கவுரை :
1289. தவிர்திட்டேன் மறுபடியஞ்சித்தர்கூடி தயவுடனே யெனையழைத்து தர்க்கம்பேசி
மவிர்த்திட்ட ஜாலமது
மிஞ்சிப்போச்சு மகத்தான வித்தையது பாழாய்ப்போச்சு
உயிர்த்துவிட்ட வித்தையது
சொல்லப்பாவுத்தமனே செத்தவரைப் பிழைக்கும்வித்தை
நிவர்த்தி கட்டுமற்றதெல்லாம்
செய்யவென்று நீணிலத்தில் நாதாக்கள் தடுத்திட்டார்
விளக்கவுரை :
1290. தடுத்திட்ட மொழிபடியே
யான்வணங்கி தட்டாமலவர்பாதம் பணிந்துமேதான்
அடுத்திட்ட நிர்வாணி
பாதஞ்சென்று அப்பனே நெடுந்தவசு தானிருந்து
கொடுத்திட்ட வித்தையெல்லாங்
குவலயத்தில் கொட்டினேன் மானிடர்கள் பிழைக்கவென்று
எடுத்திட்டு குளிகைதனைக்
கொண்டுயானும் ஏகினேன் சீனபதியமர்ந்திட்டேனே
விளக்கவுரை :