போகர் சப்தகாண்டம் 3071 - 3075 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3071. போடேதான் வாசல்வழி முழுதுந்தோறும் போக்கான மையதனை திலதம்போடு
நீடேதான் திலதமதைப் பார்க்கும்போது நிலையான கோட்டைவழி மாளிதோன்றும்
தேடவே வஞ்சனத்தின் மையினாலே தேசத்திலுள்ளதொரு வதிசயங்கள்  
கூடவே மாளிஜாலமென்ற மாளிதன்னில் குறிப்புடனே பார்ப்பதற்குத் தோற்றமாமே

விளக்கவுரை :


3072. தோற்றவே மையாழி மாளிதன்னில் துப்புரவாய் நடுமையம் இருந்துகொண்டு
ஏற்றமுடன் ஒவ்வொரு வறைகள்தன்னில் எழிலான பிரதமையின் பக்கம்சென்று
கூற்றனைப்போல் குறளியிட தந்திரத்தால் கோடான கோடிவழி நடத்தலாகும்
சாற்றலுடன் காமென்ற மாளிதன்னில் சதுராகத் தானடந்த விதிகள்கேளே

விளக்கவுரை :

[ads-post]

3073. விதியுடனே முடிப்பதற்கு இன்னஞ்சொல்வேன் வேதாந்தத் தாயினது வருளினாலே
மதிபோன்ற சந்திரனைப்போலே யொத்தமாது மையாளின்ன மொருபதுமைதானும்
கதிரோனைத்தானெரிக்கும் ஜோதியப்பா காசினியில் ஒருவருந்தான் கண்டதில்லை
துதியுடனே பூதமென்ற குறளிதானும் துப்புறவாய் அதிசயங்கள் சொல்லுந்தானே

விளக்கவுரை :


3074. சொல்லுவதில் அவர்மனதில் தோற்றமெலாம் சூட்சாதி சூட்சமதைக் கண்டுதானும்
வெல்லுவது பிரணவத்தை சொல்வேன்பாரு விருப்பமுடன் அம் இம் வங்கென்றேயோது
புல்லுதற்கு ஆங்தீங்ரீயுஞ்செனவும் புகழான உயிரெழுத்தை மாறல்செய்து
சொல்லுதற்கு சோடசமாம் வாலைச்சக்கரம் தெளிவுடனே போட்டுமல்லோ மாறிக்கொல்லே

விளக்கவுரை :


3075. கொள்ளவே உச்சாடனம் வுரைப்பேன்கேளு கொடிதான பவமகற்றி நீயுமைந்தா
விள்ளவே பாணமுடன் சத்திபூசை விருப்பமுடன் தான்செய்தால் எல்லாஞ்சித்தி
துள்ளவே வனுமாரை வரவழைத்துத் துறையுடனே வறுகோணச் சக்கரத்தில்
எள்ளளவும் பிசகாமல் பழிசேராமல் எழிலான பிரணவத்தை முன்னேகூறே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3066 - 3070 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3066. தாணான குறளியென்ற பூதந்தானும் தகமையுடன் தாம்நினைத்த காரியத்தை
வானாக மாளிகையினுள்ளே சென்று மார்க்கமுடன் ஜாலமென்ற கண்ணாடிக்குள்
பானமுடன் உள்ளிருந்து பேசும்பாரு பாலகன்போல் வார்த்தையது மிகவேசொல்லும்
தேனமிர்தங் கொண்டதொரு சொல்லைபோல தெளிவாக முன்னின்று பேசும்பாரே

விளக்கவுரை :


3067. பேசுகையில் ரூபமதை யாருங்காணார் பேருலகில் மாயவித்தை ஜாலவித்தை
காசுபணங்கேட்டாலும் கொடுக்கும்பூதம் காசினியில் பூதமதை வசமேசெய்வார்
தேசுலவு நாட்டுவளமெல்லாந்தோன்றும் தேசத்தில் அதிதமென்ற வித்தையப்பா
வீசுபுகழ் மண்டபத்தில் ஜாலவித்தை வெகுவாகச் செப்புகிறேன் இன்னங்கேளே

விளக்கவுரை :

[ads-post]

3068. கேளே தான் பூதாதி வித்தைசொல்வேன் கெடியான குறளியென்ற பூதந்தானும்
வீடேதான் பிரணவத்தின் வசமதாக்கி வேகமுடன் ஜாலமென்ற மாளிதன்னில்
நாளேதான் போகாமல் கதிரோன்முன்னே நளினமுடன் பூதமதை ஏவல்செய்து
சூளேதான் ஜாலமென்ற மாளிதன்னில் சூட்சமுடன் குறளிதனை வசியமாட்டே

விளக்கவுரை :


3069. ஆட்டேதான் ராசாதிராசர்தானும் அங்ஙனவே தான்மயங்கி வார்த்தைசொல்வார்
கேட்டேதான் காலாங்கி நாதர்தம்மால் கிருபையுடன் ஜாலமென்ற மாளிதன்னில்
நீட்டமுடன் வாசல்வழி சென்றவர்க்கு நிலையான வட்சரத்தை மாரல்செய்து
கூட்டமென்ற குழல்தனிலே ஓதிப்பின்பு கூர்மையுடன் ஓசையது கேட்குந்தானே

விளக்கவுரை :


3070. ஓசையா மெழுநூற்றிருபதுக்குள் ஒப்பமுடன் சப்தமது கேட்கும்பாரு
ஆசையுடன் தலைமாளி முதலில்நின்று அப்பனே நடுமாளி மையமட்டும்
பூசையுடன் கடமாளி நெடுகுமட்டும் பொங்கமுடன் தந்தியென்ற கம்பியதனால்
பாசையுடன் இரும்புக்கு கம்பிமாட்டி பாகமுடன் குழல்தனிலே சில்லுபோடே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3061 - 3065 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3061. காணவே விழிதனிலே வஞ்சனமுமிட்டு கருத்துடனே பரணவத்தை மாறிக்கொண்டு
தோணவே வெட்டவெளி தன்னில்நின்று தோற்றமுடன் பரிதிதனைக் கண்டபோது
மாணவே விழிதனிலே நிமையொட்டாமல் மாற்கமுடன் கடிகையது பத்தேயாகும்
பூணவே பூமிதனில் நின்றுகொண்டு புகழான நடுநெற்றி மையம்பாரே

விளக்கவுரை :


3062. மையமாய் மட்டமது நின்றுகொண்டு மயங்காமல் விண்ணுலகம் பார்க்கும்போது
பையவே தோற்றுவது ரூபங்காட்டும் பான்மையுடன் சுயரூபம் தன்ரூபம்போல
மெய்யான தேகமது வடிவந்தோன்றும் மிக்கான ரூபமது வர்ணங்காணும்
பொய்யான தரிசனமும் மெய்யேயாகும் போக்கான ரூபமது மெய்போலாமே

விளக்கவுரை :

[ads-post]

3063. ஆமேதான் இப்படியே ரூபங்காட்ட அனேகவித பான்மைகளு மிதனாலாகும்
நாமேதான் சொன்னபடி நான்காங்காண்டம் நாட்டிலே மானிடர்கள் பிழைக்கவென்று
போமேதான் போகரேழாயிரத்தில் பொங்கமுடன் மாண்டவரைக் காணவென்று
தாமேதான் மாளிகையொன்று செய்தேனப்பா சட்டமுடன் ஜெகஜால மாளியாச்சே

விளக்கவுரை :


3064. ஆச்சப்பா ஜெகஜால மாளிதன்னில் அப்பனே யாம்கோடிவரைதான்சொல்வோம்
பேச்சப்பா பேசுதற்கு என்னசொல்வோம் பேரான செத்தவர்பேர் கேட்கச்சொல்லி
கூச்சலுடன் பின்னிருந்த பிரணவத்தை குறிப்புடனே மாறியல்லோ குறளிதன்னால்
மூச்சிருந்து பேசுமது பேச்சைப்போல முன்னிருந்து பேசும்வகை மொழிசொல்வேனே

விளக்கவுரை :


3065. மொழிசொன்ன வார்த்தைக்கு முன்னேநின்று மூர்கமுடன் குறளியது பின்னேசென்று
வழிசெல்லும் பிரதமையின் வாசல்முன்னே வழிமடக்கி வார்த்தையது முன்னேகூறும்
பழியில்லா மாந்தருக்கு ஜெகஜாலத்தை பாங்குடனே பூதமது கூறும்பாரு  
முழியுடனே முகங்காட்டி பல்லைக்காட்டி மூர்க்கமுடன் கோபித்துப் பேசுந்தானே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3056 - 3060 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3056. தாமான மாளிகையாஞ் செப்பக்கேளு தடநீளம் சதுரமது சொல்வேன்பாரு
வாமான குறுக்குவரை இருபதாகும் வாகான நெடுக்குவரை நாற்பதாகும்
நாமான கணக்குவகை வீடுசொல்வோம் நாற்சதுர மெழுநூற்றிருபதாச்சு
சாமான மாகவல்லோ துரைகள்பதாறும் சட்டமுடன் கண்ணாடி கதவுமாட்டே

விளக்கவுரை :


3057. மாட்டவே கண்ணாடி வாசலுக்குள் மார்க்கமுடன் குழலொன்று நிறுத்தியங்கே
நீட்டமுடன் எழுநூற்றிருபதுக்கும் நெடிதான குழலொன்று வெவ்வேறாகும்
வாட்டமுடன் கண்ணாடி சுற்றோரந்தான் வாகுடனே காந்தமென்ற கம்பிதானும்
தேட்டமுடன் தானமைத்து நடுமையத்தில் தெளிவாக குழல்தனிலே பின்னிப்போடே

விளக்கவுரை :

[ads-post]

3058. பின்னவே நாகமென்ற குழலில்தானும் பேரான கம்பியது சேர்ந்தபோது
நன்மையாய் வேகமுடன் வாய்வினாலே நளினமுடன் காற்றதுவும் மிகவேதங்கி
பன்னவே சப்தமது மிகவுண்டாச்சு பாங்குடனே வாசல்வழி தன்னிலப்பா
சொன்னதுபோல் செவிதனக்கு கேட்கும்பாரு சூட்சமது கருவாளி காண்பான்பாரே

விளக்கவுரை :


3059. பார்க்கவென்றால் வாசல்முகம் வொவ்வொன்றுக்கும் பாங்குடனே பிரதமைகள் தானமைத்து
ஏக்கவே ஆண்பெண்ணாய் ரூபமமைத்து எழிலான வாடைகளும் கொண்டுசாத்தி
தீர்க்கமுடன் பூதமென்ற கண்ணாடிக்குள் திறமையுடன் பூதமதைக்காணலாகும்
சேர்க்கவே கண்ணாடி வருக்கந்தோறும் சிறப்பான கருமையைத் தீட்டிடாயே

விளக்கவுரை :


3060. தீட்டவே கருமையை நாட்டிப்பாரு திறமான வஞ்சனமு மிதற்கீடல்ல
நீட்டமுடன் எழுநூற்று சொச்சம்வீட்டில் நிலையான மைதனையே வமைத்தபின்பு
கூட்டமுடன் ஒவ்வொரு கண்ணாடிதன்னில் குறிப்புடனே ரூபமதைக்காணலாகும்
வாட்டமுடன் சிகரமது மேல்வட்டத்துள் வாகுடனே பரிதியது ஒளிவுகாணே

விளக்கவுரை :


Powered by Blogger.