3061. காணவே விழிதனிலே
வஞ்சனமுமிட்டு கருத்துடனே பரணவத்தை மாறிக்கொண்டு
தோணவே வெட்டவெளி
தன்னில்நின்று தோற்றமுடன் பரிதிதனைக் கண்டபோது
மாணவே விழிதனிலே
நிமையொட்டாமல் மாற்கமுடன் கடிகையது பத்தேயாகும்
பூணவே பூமிதனில்
நின்றுகொண்டு புகழான நடுநெற்றி மையம்பாரே
விளக்கவுரை :
3062. மையமாய் மட்டமது
நின்றுகொண்டு மயங்காமல் விண்ணுலகம் பார்க்கும்போது
பையவே தோற்றுவது
ரூபங்காட்டும் பான்மையுடன் சுயரூபம் தன்ரூபம்போல
மெய்யான தேகமது
வடிவந்தோன்றும் மிக்கான ரூபமது வர்ணங்காணும்
பொய்யான தரிசனமும்
மெய்யேயாகும் போக்கான ரூபமது மெய்போலாமே
விளக்கவுரை :
[ads-post]
3063. ஆமேதான் இப்படியே ரூபங்காட்ட
அனேகவித பான்மைகளு மிதனாலாகும்
நாமேதான் சொன்னபடி
நான்காங்காண்டம் நாட்டிலே மானிடர்கள் பிழைக்கவென்று
போமேதான் போகரேழாயிரத்தில்
பொங்கமுடன் மாண்டவரைக் காணவென்று
தாமேதான் மாளிகையொன்று
செய்தேனப்பா சட்டமுடன் ஜெகஜால மாளியாச்சே
விளக்கவுரை :
3064. ஆச்சப்பா ஜெகஜால மாளிதன்னில்
அப்பனே யாம்கோடிவரைதான்சொல்வோம்
பேச்சப்பா பேசுதற்கு
என்னசொல்வோம் பேரான செத்தவர்பேர் கேட்கச்சொல்லி
கூச்சலுடன் பின்னிருந்த
பிரணவத்தை குறிப்புடனே மாறியல்லோ குறளிதன்னால்
மூச்சிருந்து பேசுமது
பேச்சைப்போல முன்னிருந்து பேசும்வகை மொழிசொல்வேனே
விளக்கவுரை :
3065. மொழிசொன்ன வார்த்தைக்கு முன்னேநின்று மூர்கமுடன் குறளியது பின்னேசென்று
வழிசெல்லும் பிரதமையின்
வாசல்முன்னே வழிமடக்கி வார்த்தையது முன்னேகூறும்
பழியில்லா மாந்தருக்கு
ஜெகஜாலத்தை பாங்குடனே பூதமது கூறும்பாரு
முழியுடனே முகங்காட்டி
பல்லைக்காட்டி மூர்க்கமுடன் கோபித்துப் பேசுந்தானே
விளக்கவுரை :