3056. தாமான மாளிகையாஞ்
செப்பக்கேளு தடநீளம் சதுரமது சொல்வேன்பாரு
வாமான குறுக்குவரை
இருபதாகும் வாகான நெடுக்குவரை நாற்பதாகும்
நாமான கணக்குவகை
வீடுசொல்வோம் நாற்சதுர மெழுநூற்றிருபதாச்சு
சாமான மாகவல்லோ
துரைகள்பதாறும் சட்டமுடன் கண்ணாடி கதவுமாட்டே
விளக்கவுரை :
3057. மாட்டவே கண்ணாடி வாசலுக்குள் மார்க்கமுடன் குழலொன்று நிறுத்தியங்கே
நீட்டமுடன்
எழுநூற்றிருபதுக்கும் நெடிதான குழலொன்று வெவ்வேறாகும்
வாட்டமுடன் கண்ணாடி
சுற்றோரந்தான் வாகுடனே காந்தமென்ற கம்பிதானும்
தேட்டமுடன் தானமைத்து
நடுமையத்தில் தெளிவாக குழல்தனிலே பின்னிப்போடே
விளக்கவுரை :
[ads-post]
3058. பின்னவே நாகமென்ற
குழலில்தானும் பேரான கம்பியது சேர்ந்தபோது
நன்மையாய் வேகமுடன்
வாய்வினாலே நளினமுடன் காற்றதுவும் மிகவேதங்கி
பன்னவே சப்தமது
மிகவுண்டாச்சு பாங்குடனே வாசல்வழி தன்னிலப்பா
சொன்னதுபோல் செவிதனக்கு
கேட்கும்பாரு சூட்சமது கருவாளி காண்பான்பாரே
விளக்கவுரை :
3059. பார்க்கவென்றால் வாசல்முகம்
வொவ்வொன்றுக்கும் பாங்குடனே பிரதமைகள் தானமைத்து
ஏக்கவே ஆண்பெண்ணாய்
ரூபமமைத்து எழிலான வாடைகளும் கொண்டுசாத்தி
தீர்க்கமுடன் பூதமென்ற
கண்ணாடிக்குள் திறமையுடன் பூதமதைக்காணலாகும்
சேர்க்கவே கண்ணாடி
வருக்கந்தோறும் சிறப்பான கருமையைத் தீட்டிடாயே
விளக்கவுரை :
3060. தீட்டவே கருமையை
நாட்டிப்பாரு திறமான வஞ்சனமு மிதற்கீடல்ல
நீட்டமுடன் எழுநூற்று
சொச்சம்வீட்டில் நிலையான மைதனையே வமைத்தபின்பு
கூட்டமுடன் ஒவ்வொரு
கண்ணாடிதன்னில் குறிப்புடனே ரூபமதைக்காணலாகும்
வாட்டமுடன் சிகரமது
மேல்வட்டத்துள் வாகுடனே பரிதியது ஒளிவுகாணே
விளக்கவுரை :