3066. தாணான குறளியென்ற
பூதந்தானும் தகமையுடன் தாம்நினைத்த காரியத்தை
வானாக மாளிகையினுள்ளே சென்று
மார்க்கமுடன் ஜாலமென்ற கண்ணாடிக்குள்
பானமுடன் உள்ளிருந்து
பேசும்பாரு பாலகன்போல் வார்த்தையது மிகவேசொல்லும்
தேனமிர்தங் கொண்டதொரு
சொல்லைபோல தெளிவாக முன்னின்று பேசும்பாரே
விளக்கவுரை :
3067. பேசுகையில் ரூபமதை
யாருங்காணார் பேருலகில் மாயவித்தை ஜாலவித்தை
காசுபணங்கேட்டாலும்
கொடுக்கும்பூதம் காசினியில் பூதமதை வசமேசெய்வார்
தேசுலவு
நாட்டுவளமெல்லாந்தோன்றும் தேசத்தில் அதிதமென்ற வித்தையப்பா
வீசுபுகழ் மண்டபத்தில்
ஜாலவித்தை வெகுவாகச் செப்புகிறேன் இன்னங்கேளே
விளக்கவுரை :
[ads-post]
3068. கேளே தான் பூதாதி
வித்தைசொல்வேன் கெடியான குறளியென்ற பூதந்தானும்
வீடேதான் பிரணவத்தின்
வசமதாக்கி வேகமுடன் ஜாலமென்ற மாளிதன்னில்
நாளேதான் போகாமல்
கதிரோன்முன்னே நளினமுடன் பூதமதை ஏவல்செய்து
சூளேதான் ஜாலமென்ற
மாளிதன்னில் சூட்சமுடன் குறளிதனை வசியமாட்டே
விளக்கவுரை :
3069. ஆட்டேதான் ராசாதிராசர்தானும்
அங்ஙனவே தான்மயங்கி வார்த்தைசொல்வார்
கேட்டேதான் காலாங்கி
நாதர்தம்மால் கிருபையுடன் ஜாலமென்ற மாளிதன்னில்
நீட்டமுடன் வாசல்வழி சென்றவர்க்கு
நிலையான வட்சரத்தை மாரல்செய்து
கூட்டமென்ற குழல்தனிலே
ஓதிப்பின்பு கூர்மையுடன் ஓசையது கேட்குந்தானே
விளக்கவுரை :
3070. ஓசையா மெழுநூற்றிருபதுக்குள்
ஒப்பமுடன் சப்தமது கேட்கும்பாரு
ஆசையுடன் தலைமாளி
முதலில்நின்று அப்பனே நடுமாளி மையமட்டும்
பூசையுடன் கடமாளி
நெடுகுமட்டும் பொங்கமுடன் தந்தியென்ற கம்பியதனால்
பாசையுடன் இரும்புக்கு
கம்பிமாட்டி பாகமுடன் குழல்தனிலே சில்லுபோடே
விளக்கவுரை :