போகர் சப்தகாண்டம் 3106 - 3110 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3106. பாரேதான் எழுநூற்றிருபதுக்குள் பகருவேன் கோகர்ண ஜாலந்தன்னை
நேரேதான் நெடுஞ்ஜால மாளிகைக்குள் நேர்மையுடன் கிடையொன்று நாட்டியேதான்
வாரேதான் நெடுங்கம்பி நாலுபக்கம் வாகுடனே தானிருத்தி விட்டம்பூண்டு
சேரேதான் மேல்வட்டங் கயர்கள்மாட்டி சிறப்புடனே கீழ்வட்டம் மணிகள்மாட்டே

விளக்கவுரை :


3107. மாட்டவே நடுக்கம்பந்தன்னிலேதான் மதிப்புடனே மேற்சிகரம்நின்றுகொண்டு
ஓட்டமுடன் கயறுதனைப் பிடித்துக்கொண்டு ஓங்கார சத்தமுடன் சுத்திவந்து
நாட்டமுடன் தரணிதனை அண்ணாந்துபார்த்து நயமுடனே குளிகைதனை வாயிற்பூண்டு
தேட்டமுடன் துதிக்கையிலே கரணம்தன்னை தெளிவாகக் காணுதற்கு ஜாலங்கேளே

விளக்கவுரை :

[ads-post]

3108. கேளேதான் வஞ்சனமாம் மையைத்தீட்டி கெவனமுடன் லாடமதில் வசியம்பூண்டு
பாளேதான் போகாமல் கருவுதன்னை பாங்குடனே தேகத்திற்பூசக்கேளு
நாளேதான் வர்ணரூபங் கெஜரூபமாக்கி நானிலத்தில் மெலிருந்து குதிப்பாயானால்
சூளேதான் சகஸ்திரமாம் யானைத்தோற்றம் சுந்தரனே பார்வைக்கு வாதாயந்தானே

விளக்கவுரை :


3109. தானான சகஸ்திரமாம் யானைரூபம் தகமையுடன் மாந்தரெல்லாம் காணலாகும்
பானான பராபரத்தை காணமாட்டார் பாரினிலே கோகர்ணவித்தை காண்பார்
தானான வித்தையது கோகர்ணவித்தை தேசத்தில் கிட்டாது மாந்தருக்கு
வேனான சீனபதி தேசத்தார்கள் விருப்பமுடன் செய்கின்ற ஜாலமாமே

விளக்கவுரை :


3110. ஆமேதான் மச்சென்ற மாளிதன்னில் அப்பனே கோகர்ணவத்தை செய்வேன்
தாமேதான் கயர்தனிலே மேலேநின்று தாக்கான வூசியென்ற காந்தந்தன்னால்
வாமேதான் உச்சானிதன்னிலப்பா வேகமுடன் நின்றுகொண்டு கரத்தைவீச
சாமேதான் சகஸ்திரமாங் கரங்கள்தானும் சரஞ்சரமாய் வந்துவிழக்காணலாமே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3101 - 3105 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3101. உண்டான தெய்வங்கள் அனேகமுண்டு உத்தமனே சர்வகலைக்கியானமுண்டு
பண்டான பொய்களவு சூதுமுண்டு பண்பான விசுவாசம் இல்லைகண்டீர்
திண்டான ராட்சதமாம் பூதந்தன்னில் திறளான நவகோடி ரிஷிகளெல்லாம்
கண்டிதமாய் இத்தாதி பூதந்தன்னில் காசினியிற் கோடிவித்தை யாடலாமே

விளக்கவுரை :


3102. ஆடலாம் பலபேத பூதந்தன்னால் வப்பனே வஷ்டகர்ம வித்தையாகும்
நீடவே ஜாலமென்ற மாளிதன்னில் நேர்புடனே கோடிவரை யாடலாகும்
பாடவே பூதங்கள் தன்னினாலும் பாங்குடனே சங்கீதங்கூறலாகும்
தேடவே எக்காள ஜாலந்தன்னை தெளிவுடனே யாட்டிவைக்கும் பூதம்பாரே

விளக்கவுரை :

[ads-post]

3103. பாரேதான் அஷ்டவிதமாளிதன்னில் பாங்குடனே அஷ்டவித வாத்தியங்கள்
நேரேதான் ஒருமாளி சின்னமாகும் நேர்ப்புடனே ஒருமாளி திரிசங்காகும்
வேரேதான் ஒருமாளி பிரம்மதானம் வேகமுடன் ஒருமாளி துத்தாரியாகும்
சேரேதான் ஒருமாளி தம்பூறுமாகும் சிறப்பான ஒருமாளி மத்தளமுமாமே

விளக்கவுரை :


3104. ஆமேதான் ஒருமாளி கைத்தளமுமாகும் வப்பனே ஒருமாளி தம்பறையுமாகும்
வாமேதான் எட்டுவித மாளிதன்னில் வாகுடனே பலபேத வாத்தியங்கள்
நாமேதான் ஒருமித்த வண்ணமாகும் நலமுடனே மாளிதனில் சென்றுமேதான்
பாமேதான் மந்திராட்சரத்தை யோத பாடுமே பலவித வாத்தியங்கள் தானே

விளக்கவுரை :


3105. தானான வாத்தியங்கள் கேட்கும்போது தகமையுடன் மாநதரெல்லாம் பிரமிப்பாகும்
கோனான மாளிதன்னில் குடியிருப்பு கொற்றவனே யாருந்தான் இல்லஐகண்டீர்
தேனான வமிர்தமது போலேயல்லோ தெளிவான வாத்தியங்கள் கூறலாகும்
பானான பலபேத தொனிகள் தோற்றும் பாரினிலே மாந்தரெல்லாம் பிரமிப்பாரே


விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3096 - 3100 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3096. ஆடினார் வெகுகோடி காலமப்பா அவனியிலே சித்தர்களும் முனிவர்தாமும்
கூடியே பில்லியென்ற பூதந்தன்னை குணபடுத்தி தம்வசமாய் செய்துகொண்டு
தேடியே வெகுகோடி நிதிகள்தன்னை தேசமதில் பூதத்தின் வசியத்தாலே
நீடியே கர்ப்பாந்த காலமட்டும் நீனிலத்தில் தாமிருந்தார் சித்தர்தாமே

விளக்கவுரை :


3097. சித்தான சித்துவகை யின்னுஞ்சொல்வேன் ஜெகதலத்தில் அனேகவித பூதமுண்டு
முத்தான வேதாள பூதமப்பா மூதுலகில் ராஜர்களும் வசியஞ்செய்வார்
நித்தமுடன் வேதாளமுந்தானும் நேர்மையுடன் விக்கிரமாதித்தனுக்கு
சுத்தமுடன் வாகனமாயிருந்துகொண்டு தொல்லுலகில் வெகுகால மிருந்தார்தாமே

விளக்கவுரை :

[ads-post]

3098. இருந்துமே இன்னம்வெகு வினோதங்கேளு எழிலான ஜாலமென்ற மாளிதன்னில்
பொருந்தவே யெல்லவரும் பார்க்கவேதான் பொலிவான யெக்காள ஜாலந்தன்னை
திருந்தவே எழுநூற்று இருபதுக்குள் திறமான மாளிகையாம் பக்கோரத்தில்
வருந்தியே தானிருந்து ஜாலமாளி வாகுடனே குடியிருப்பு கண்டோம்பாரே

விளக்கவுரை :


3099. கண்டோமே யின்னமொரு கருமானங்கேள் கருவான நாகார்ச்சுன் ஆசீர்மத்தில்
தண்டுளவ மாலையணிபூண்டுகொண்டு தக்கனுட பாகமதில் தானிருந்து
கொண்டல்வண்ணன் அச்சுதனும் கோமான்தானும் குடியிருப்பு கோட்டைதனில் காவல்நின்ற
துண்டரிகமானதொரு ராட்சதபூதம் துடியான தேவனா பூதமாமே

விளக்கவுரை :


3100. ஆமேதான் பூதமது தன்னைத்தானும் அப்பனே ஜாலமென்றமாளிதன்னில்
போமேதான் நடுமையம் மத்திவாசல் பொங்கமுடன் கறுவீரன் பத்திரகாளி
வேமேதான் கறுப்பண்ணன் டாகினிதானும் மிக்கான காட்டேரி சங்கிலிநாயன்
தாமேதான் சொன்னபடி மசானவீறி சட்டமுடன் தெய்வங்கள் அனேகமுண்டே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3091 - 3095 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3091. தஅனான வீரியனும் ஆரியனாய்வேண்டும் தகமையுள்ள வீரியனாயிருப்பானானால்
வேனான மந்திரத்தை மிகவும்பேசும் மிக்கான கிரமவிதி தானடத்தும் 
பானான குருமுறைபோல் யாகஞ்சொல்லும் பாலகனே யாகமது குறுதிகூறும்
தேனான வீரியனாங் குட்டிதன்னை தெளிவுபெற லோகமதில் வசியஞ்செய்யே

விளக்கவுரை :


3092. செய்யவே குட்டியெனும் வசியமானால் ஜெகத்திலே கோடிவித்தை யாடலாகும்
பையவே மாந்தர்மேலேவதாகும் பாங்குடனே கல்லதனை எறியலாகும்
மெய்யுடனே ஜெகஜால வித்தையப்பா மேதினியில் ஆருந்தான் செய்யவில்லை
பெய்யவே சங்கலீயன் கறுப்பன்தானும் பேரான வண்ணமா ரேழுமாமே

விளக்கவுரை :

[ads-post]

3093. ஏழான வண்ணமார் காவலாளர் எழிலான ஜாலமென்ற மாளிதன்னில்
பாழான வையன்மார் பிடாரிதானும் பச்சையென்ற தேவதையும் காளியோடு
வாழாத குமரிகளாஞ் சத்தகன்னி வளமுடனே பச்சையென்ற பல்லக்குதன்னை
தாழாமல் தோலதனில் எடுத்துக்கொண்டு தகமையுடன் காளிதனை தூக்குவாரே

விளக்கவுரை :


3094. தூக்கியே ஜாலமென்ற மாளிதன்னில் துப்புரவாய் காவலுடன் இருந்துகொண்டு
நோக்கமுடன் தேவதையை வசியஞ்செய்து நொடிக்குள்ளே கோடிவித்தை யாடலாகும்
பார்க்கவென்றால் லோகமதில் மாந்தர்யாவும் பதபதைத்து நடுநடுங்கி கதருவார்கள்
வாக்குடனே வரமுனக்கு பதமுந்தந்து வாகுடனே செல்லுமென செப்புந்தானே

விளக்கவுரை :


3095. சொல்லவென்றால் இன்னம்வெகு கூத்துகேளிர் செயலான நாதர்முனி ரிஷிகள்தாமும்
வெல்லவே பூதமதை வசியஞ்செய்து வேணவுபசாரமது வதன்கையாலே
புல்லவே யேவல்தனைச்செய்யவென்று புகழாக வசியமது செய்துகொண்டு
மெல்லமே தம்பணிக்கு ஆனதாக்கி மேன்மையுடன் சித்துகளு மாடினாரே

விளக்கவுரை :


Powered by Blogger.