3106. பாரேதான்
எழுநூற்றிருபதுக்குள் பகருவேன் கோகர்ண ஜாலந்தன்னை
நேரேதான் நெடுஞ்ஜால
மாளிகைக்குள் நேர்மையுடன் கிடையொன்று நாட்டியேதான்
வாரேதான் நெடுங்கம்பி
நாலுபக்கம் வாகுடனே தானிருத்தி விட்டம்பூண்டு
சேரேதான் மேல்வட்டங்
கயர்கள்மாட்டி சிறப்புடனே கீழ்வட்டம் மணிகள்மாட்டே
விளக்கவுரை :
3107. மாட்டவே
நடுக்கம்பந்தன்னிலேதான் மதிப்புடனே மேற்சிகரம்நின்றுகொண்டு
ஓட்டமுடன் கயறுதனைப்
பிடித்துக்கொண்டு ஓங்கார சத்தமுடன் சுத்திவந்து
நாட்டமுடன் தரணிதனை
அண்ணாந்துபார்த்து நயமுடனே குளிகைதனை வாயிற்பூண்டு
தேட்டமுடன் துதிக்கையிலே
கரணம்தன்னை தெளிவாகக் காணுதற்கு ஜாலங்கேளே
விளக்கவுரை :
[ads-post]
3108. கேளேதான் வஞ்சனமாம்
மையைத்தீட்டி கெவனமுடன் லாடமதில் வசியம்பூண்டு
பாளேதான் போகாமல் கருவுதன்னை
பாங்குடனே தேகத்திற்பூசக்கேளு
நாளேதான் வர்ணரூபங்
கெஜரூபமாக்கி நானிலத்தில் மெலிருந்து குதிப்பாயானால்
சூளேதான் சகஸ்திரமாம்
யானைத்தோற்றம் சுந்தரனே பார்வைக்கு வாதாயந்தானே
விளக்கவுரை :
3109. தானான சகஸ்திரமாம் யானைரூபம் தகமையுடன் மாந்தரெல்லாம் காணலாகும்
பானான பராபரத்தை காணமாட்டார்
பாரினிலே கோகர்ணவித்தை காண்பார்
தானான வித்தையது
கோகர்ணவித்தை தேசத்தில் கிட்டாது மாந்தருக்கு
வேனான சீனபதி தேசத்தார்கள்
விருப்பமுடன் செய்கின்ற ஜாலமாமே
விளக்கவுரை :
3110. ஆமேதான் மச்சென்ற
மாளிதன்னில் அப்பனே கோகர்ணவத்தை செய்வேன்
தாமேதான் கயர்தனிலே
மேலேநின்று தாக்கான வூசியென்ற காந்தந்தன்னால்
வாமேதான் உச்சானிதன்னிலப்பா
வேகமுடன் நின்றுகொண்டு கரத்தைவீச
சாமேதான் சகஸ்திரமாங்
கரங்கள்தானும் சரஞ்சரமாய் வந்துவிழக்காணலாமே
விளக்கவுரை :