3101. உண்டான தெய்வங்கள்
அனேகமுண்டு உத்தமனே சர்வகலைக்கியானமுண்டு
பண்டான பொய்களவு சூதுமுண்டு
பண்பான விசுவாசம் இல்லைகண்டீர்
திண்டான ராட்சதமாம்
பூதந்தன்னில் திறளான நவகோடி ரிஷிகளெல்லாம்
கண்டிதமாய் இத்தாதி
பூதந்தன்னில் காசினியிற் கோடிவித்தை யாடலாமே
விளக்கவுரை :
3102. ஆடலாம் பலபேத பூதந்தன்னால்
வப்பனே வஷ்டகர்ம வித்தையாகும்
நீடவே ஜாலமென்ற மாளிதன்னில்
நேர்புடனே கோடிவரை யாடலாகும்
பாடவே பூதங்கள் தன்னினாலும்
பாங்குடனே சங்கீதங்கூறலாகும்
தேடவே எக்காள ஜாலந்தன்னை
தெளிவுடனே யாட்டிவைக்கும் பூதம்பாரே
விளக்கவுரை :
[ads-post]
3103. பாரேதான் அஷ்டவிதமாளிதன்னில்
பாங்குடனே அஷ்டவித வாத்தியங்கள்
நேரேதான் ஒருமாளி
சின்னமாகும் நேர்ப்புடனே ஒருமாளி திரிசங்காகும்
வேரேதான் ஒருமாளி
பிரம்மதானம் வேகமுடன் ஒருமாளி துத்தாரியாகும்
சேரேதான் ஒருமாளி
தம்பூறுமாகும் சிறப்பான ஒருமாளி மத்தளமுமாமே
விளக்கவுரை :
3104. ஆமேதான் ஒருமாளி
கைத்தளமுமாகும் வப்பனே ஒருமாளி தம்பறையுமாகும்
வாமேதான் எட்டுவித
மாளிதன்னில் வாகுடனே பலபேத வாத்தியங்கள்
நாமேதான் ஒருமித்த
வண்ணமாகும் நலமுடனே மாளிதனில் சென்றுமேதான்
பாமேதான் மந்திராட்சரத்தை
யோத பாடுமே பலவித வாத்தியங்கள் தானே
விளக்கவுரை :
3105. தானான வாத்தியங்கள்
கேட்கும்போது தகமையுடன் மாநதரெல்லாம் பிரமிப்பாகும்
கோனான மாளிதன்னில்
குடியிருப்பு கொற்றவனே யாருந்தான் இல்லஐகண்டீர்
தேனான வமிர்தமது போலேயல்லோ
தெளிவான வாத்தியங்கள் கூறலாகும்
பானான பலபேத தொனிகள்
தோற்றும் பாரினிலே மாந்தரெல்லாம் பிரமிப்பாரே
விளக்கவுரை :