3096. ஆடினார் வெகுகோடி காலமப்பா
அவனியிலே சித்தர்களும் முனிவர்தாமும்
கூடியே பில்லியென்ற
பூதந்தன்னை குணபடுத்தி தம்வசமாய் செய்துகொண்டு
தேடியே வெகுகோடி
நிதிகள்தன்னை தேசமதில் பூதத்தின் வசியத்தாலே
நீடியே கர்ப்பாந்த
காலமட்டும் நீனிலத்தில் தாமிருந்தார் சித்தர்தாமே
விளக்கவுரை :
3097. சித்தான சித்துவகை யின்னுஞ்சொல்வேன் ஜெகதலத்தில் அனேகவித பூதமுண்டு
முத்தான வேதாள பூதமப்பா
மூதுலகில் ராஜர்களும் வசியஞ்செய்வார்
நித்தமுடன் வேதாளமுந்தானும்
நேர்மையுடன் விக்கிரமாதித்தனுக்கு
சுத்தமுடன்
வாகனமாயிருந்துகொண்டு தொல்லுலகில் வெகுகால மிருந்தார்தாமே
விளக்கவுரை :
[ads-post]
3098. இருந்துமே இன்னம்வெகு
வினோதங்கேளு எழிலான ஜாலமென்ற மாளிதன்னில்
பொருந்தவே யெல்லவரும்
பார்க்கவேதான் பொலிவான யெக்காள ஜாலந்தன்னை
திருந்தவே எழுநூற்று
இருபதுக்குள் திறமான மாளிகையாம் பக்கோரத்தில்
வருந்தியே தானிருந்து
ஜாலமாளி வாகுடனே குடியிருப்பு கண்டோம்பாரே
விளக்கவுரை :
3099. கண்டோமே யின்னமொரு
கருமானங்கேள் கருவான நாகார்ச்சுன் ஆசீர்மத்தில்
தண்டுளவ மாலையணிபூண்டுகொண்டு
தக்கனுட பாகமதில் தானிருந்து
கொண்டல்வண்ணன் அச்சுதனும்
கோமான்தானும் குடியிருப்பு கோட்டைதனில் காவல்நின்ற
துண்டரிகமானதொரு ராட்சதபூதம்
துடியான தேவனா பூதமாமே
விளக்கவுரை :
3100. ஆமேதான் பூதமது
தன்னைத்தானும் அப்பனே ஜாலமென்றமாளிதன்னில்
போமேதான் நடுமையம்
மத்திவாசல் பொங்கமுடன் கறுவீரன் பத்திரகாளி
வேமேதான் கறுப்பண்ணன்
டாகினிதானும் மிக்கான காட்டேரி சங்கிலிநாயன்
தாமேதான் சொன்னபடி மசானவீறி
சட்டமுடன் தெய்வங்கள் அனேகமுண்டே
விளக்கவுரை :