போகர் சப்தகாண்டம் 3121 - 3125 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3121. போக்கான காலாங்கி நாதர்பாதம் பொங்கமுடன் யான்வணங்கி சீனதேசம்
நோக்கமுடன் காடுமலை வனாந்திரங்கள் நொடிக்குள்ளே சென்றுமல்லோ வேதைபார்த்தேன்
தாக்கவே சீனபதி தேசத்தார்கள் சட்டமுடன் எந்தனையும் குருவாயெண்ணி
வாக்குடனே குருமொழியாஞ்சீஷனென்று வசனித்தார் கோடியுகம் வசனித்தாரே

விளக்கவுரை :


3122. வசனித்தார் சீனபதி மாந்தரெல்லாம் வறைகோடி திசைகோடி வகுக்கக்கோடி
நிசமுடனே என்வாக்கு மெய்யென்றெண்ணி நீடாழி யுலகமெலாம் வசனிப்பார்கள்
தசமுடனே தாரிணியிலஞ்சனத்தை தாக்குடனே வெகுமாந்தர் செய்துபார்த்து   
பிசகில்லா பிரணவத்தை மெய்யென்றெண்ணி பேருலகில் மாந்தரெல்லாம் துதித்திட்டாரே

விளக்கவுரை :

[ads-post]

3123. துதித்தாரே காலாங்கி நாதர்தம்மை தோற்றமுடன் எந்நாளும் வாசீர்மித்து
மதிப்புடனே யவர்பாதம் தான்வணங்கி வகையுடனே எப்போதும் கருணைகூர்ந்து
கதிப்புடனே சமாதிதனிலிருந்துகொண்டு சதாகாலம் லாடமதில் மையேபூண்டு
விதிப்பயனை தானெண்ணி விண்ணின்மீதல் வெகுகாலம் தானிருந்தார் மாந்தர்தாமே

விளக்கவுரை :


3124. தாமான வின்னமொரு மார்க்கம்பாரு தயவுடனே மாணாக்கள் பிழைக்கவென்று
கோமானாம் பங்குனி சித்திரையிலப்பா கொற்றவனே பூநீறு விளையுங்காலம்
மானான பூநீரை தானெடுத்து மார்க்கமுடன் செப்புகிறேன் மைந்தாகேளு
பானான பூநீரை படிதான்ரண்டு பாகமுடன் வாரிவந்து செப்பக்கேளே

விளக்கவுரை :


3125. செப்பவென்றால் கற்சுன்னம் படிதான் நான்கு தெளிவான வமுரியது படிதான்பத்து
ஒப்பமுடன் நல்லெண்ணை படிதானைந்து உத்தமனே இரண்டையுந்தான் கலக்கிக்கொண்டு
நெப்பமுடன் தெளிவிருத்தி பின்னுங்கேளு நேர்ப்புடனே தான்காய்ச்ச வுப்பேயாகும்
துப்புறவே யுப்பதுவும் மிகவேபூக்கும் துறையாக வுப்பதுவை பத்துமுறை காச்சே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3116 - 3120 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3116. ஆச்சென்று விடுகாதே யின்னங்கேளு அப்பனே யான்கண்டவரைக்குஞ் சொல்வேன்
நாச்சலுடன் எழுநூற்று சொச்சம்வீட்டில் நடுவாக மத்திமத்தில் சதுரம்போடு
வீச்சுடனே பதினைந்து வரைதான்போடு விவரமுடன் குறுக்கு வரை பதினைந்தாகும்
ஏச்சலுடன் நெடுகுவரை பதினைந்தாகும் எழிலான நூத்தியம்பதரையுமாச்சே

விளக்கவுரை :


3117. அறையான வீடுமுனை சூலல்போடு அப்பனே ரீங்காரங் கொண்டுமாறு
திரையோடு ஓங்காரமுள்ளடக்கி திட்டமுடன் எட்டியென்ற பீடமீதில்
முறையோடு மௌனமதாயிருந்துகொண்டு மூன்றெழுத்தும் ஐந்தெழுத்தும் ஓதித்தீரு
சிறையான வைரவனும் முன்னேநிற்பான் சீறலுடன் பிரணவத்தை யோதுவீரே

விளக்கவுரை :

[ads-post]

3118. ஓதுகையில் அஞ்செழுத்தை வுள்ளடக்கி உத்தமனே நவ்வெழுத்தை மவ்வெழுத்திலூணி
தீதுரவே பகையாளிதன்னை நோக்கி திட்டமுடன் கற்பூரவொலிதான்கொண்டு
காதலுடன் வட்சரத்தை வுள்ளமர்த்தி கருவாகச் செய்பவனே சித்தனாகும்
நோதலுடன் வஞ்சனத்தை கையில்தீட்டி நோக்கமுடன் செய்பவனே சித்தனாமே

விளக்கவுரை :


3119. ஆமேதான் பிரணவத்தை வுச்சரித்து ஆண்டவனைத் தாநினைத்து வருளும்வோதி
தாமேதான் பாதாள வஞ்சனத்தை தாரணியி லெல்லவரும் கண்டுமெச்ச
வேமேதான் சத்துரு மித்துருவு தானும் வேகமுடன் சென்றுமல்லோ வுறவுபேசி
நாமேதான் ரீங்காரம் வுள்ளடக்கி நாட்டமுடன் ஓங்காரம் உள்ளேபூட்டே  

விளக்கவுரை :


3120. பூட்டுகையில் பிரணவத்தையோதும்போது பொங்கமுடன் சத்துருமித்துருவுமாகும்
நாட்டுகையில் நசிமசிமசியென்றேயோத நாசமடா வஞ்சனத்தின் தயிலத்தாலே
வாட்டுகையில் குறளிமுதல் பூதபேதம் வஞ்சனாதேவிமுதல் வசியமாகும்
சூட்டுகையில் காலனவன் எதிரேநிற்கான் துரைராஜ வஞ்சனத்தின் மையின்போக்கே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3111 - 3115 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3111. காணலாம் வஞ்சனமாங் கருவினாலே காசினியில் வெகுகோடிவித்தை காண்பீர்
பூணலாம் மந்திரத்தின் வசியத்தாலும் போக்கான பிரணவத்தின் வாறலாலும்
தோணவே தேவதையும் வசியத்தாலே தோற்றமுள்ள கருவியிட பேதத்தாலும்
நாணவே சதாகாலம் மாளிசென்று நாட்டமுடன் ஜாலவித்தை யாடலாமே

விளக்கவுரை :


3112. ஆடலாம் ஜெககோடி பதிகள்கோடி அப்பனே வெகுகால மிருந்துகொண்டு 
தேடலாம் சின்மயத்தின் கேசரமாம் வித்தை தெளிவுடனே ஆடுதற்கு யின்னங்கேளு
கூடலாம் கேசரத்தில் இருந்துகொண்டு கோடான கோடிவித்தை யாடலாகும்
நீடலாம் வானரத்தின்வித்தைகேளும் நெடிதான அங்குதனார் வித்தையாமே

விளக்கவுரை :

[ads-post]

3113. வித்தையிலே யின்னமொரு வித்தைகேளும் வீரனாம்அங்குதனார் அனுமார்தானும்
நித்தமுடன் வஞ்சனமா மையைத்தானும் நீடுறவே உள்ளங்கை தன்னிற்தாக்கி
சுத்தமுடன் கேசரத்தி லிருந்துகொண்டு துப்புரவாய் அட்சரத்தை யோதும்போது
மத்திபத்தில் நடுமையமிருந்துகொண்டு மானிலத்தில் வஞ்சனத்தை போடுவாரே

விளக்கவுரை :


3114. போடையிலே ஜாதிவர்ணஞ் சொல்லக்கேளும் பொலிவான நீலவிழித்தானுமாக
நீடயிலே பூனையென்ற நேத்திரமாகும் நீடாழி வஞ்சனத்தை பார்க்கவென்றால்
கூடயிலே குபேரனென்ற பட்டணந்தான் குவலயத்தின் நிதிகளெல்லாங் காணலாகும்
தேடயிலே வனுமானும் முன்னேநிற்கும் தெளிவான தேவதையுங் காணலாமே

விளக்கவுரை :


3115. காணயிலே பிரணவத்தை யோதும்போது கருவான மைதனிலே மகிமைகேளு
தோணவே வீரபத்ரன் முன்னேநிற்பான் தோற்றுகையில் அனுமாருங் கொண்டுசெல்லும்
பூணவே ஸ்ரீராமர் வைத்தபொன்னை பொங்கமுடன் பாதாள வஞ்சனத்தில்
நாணவே யனுமாரும் மிகவேசொல்லும் நாட்டமுடன் நிதியெடுக்க ஜாலமாச்சே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3106 - 3110 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3106. பாரேதான் எழுநூற்றிருபதுக்குள் பகருவேன் கோகர்ண ஜாலந்தன்னை
நேரேதான் நெடுஞ்ஜால மாளிகைக்குள் நேர்மையுடன் கிடையொன்று நாட்டியேதான்
வாரேதான் நெடுங்கம்பி நாலுபக்கம் வாகுடனே தானிருத்தி விட்டம்பூண்டு
சேரேதான் மேல்வட்டங் கயர்கள்மாட்டி சிறப்புடனே கீழ்வட்டம் மணிகள்மாட்டே

விளக்கவுரை :


3107. மாட்டவே நடுக்கம்பந்தன்னிலேதான் மதிப்புடனே மேற்சிகரம்நின்றுகொண்டு
ஓட்டமுடன் கயறுதனைப் பிடித்துக்கொண்டு ஓங்கார சத்தமுடன் சுத்திவந்து
நாட்டமுடன் தரணிதனை அண்ணாந்துபார்த்து நயமுடனே குளிகைதனை வாயிற்பூண்டு
தேட்டமுடன் துதிக்கையிலே கரணம்தன்னை தெளிவாகக் காணுதற்கு ஜாலங்கேளே

விளக்கவுரை :

[ads-post]

3108. கேளேதான் வஞ்சனமாம் மையைத்தீட்டி கெவனமுடன் லாடமதில் வசியம்பூண்டு
பாளேதான் போகாமல் கருவுதன்னை பாங்குடனே தேகத்திற்பூசக்கேளு
நாளேதான் வர்ணரூபங் கெஜரூபமாக்கி நானிலத்தில் மெலிருந்து குதிப்பாயானால்
சூளேதான் சகஸ்திரமாம் யானைத்தோற்றம் சுந்தரனே பார்வைக்கு வாதாயந்தானே

விளக்கவுரை :


3109. தானான சகஸ்திரமாம் யானைரூபம் தகமையுடன் மாந்தரெல்லாம் காணலாகும்
பானான பராபரத்தை காணமாட்டார் பாரினிலே கோகர்ணவித்தை காண்பார்
தானான வித்தையது கோகர்ணவித்தை தேசத்தில் கிட்டாது மாந்தருக்கு
வேனான சீனபதி தேசத்தார்கள் விருப்பமுடன் செய்கின்ற ஜாலமாமே

விளக்கவுரை :


3110. ஆமேதான் மச்சென்ற மாளிதன்னில் அப்பனே கோகர்ணவத்தை செய்வேன்
தாமேதான் கயர்தனிலே மேலேநின்று தாக்கான வூசியென்ற காந்தந்தன்னால்
வாமேதான் உச்சானிதன்னிலப்பா வேகமுடன் நின்றுகொண்டு கரத்தைவீச
சாமேதான் சகஸ்திரமாங் கரங்கள்தானும் சரஞ்சரமாய் வந்துவிழக்காணலாமே

விளக்கவுரை :


Powered by Blogger.