3121. போக்கான காலாங்கி நாதர்பாதம்
பொங்கமுடன் யான்வணங்கி சீனதேசம்
நோக்கமுடன் காடுமலை
வனாந்திரங்கள் நொடிக்குள்ளே சென்றுமல்லோ வேதைபார்த்தேன்
தாக்கவே சீனபதி தேசத்தார்கள்
சட்டமுடன் எந்தனையும் குருவாயெண்ணி
வாக்குடனே
குருமொழியாஞ்சீஷனென்று வசனித்தார் கோடியுகம் வசனித்தாரே
விளக்கவுரை :
3122. வசனித்தார் சீனபதி மாந்தரெல்லாம்
வறைகோடி திசைகோடி வகுக்கக்கோடி
நிசமுடனே என்வாக்கு
மெய்யென்றெண்ணி நீடாழி யுலகமெலாம் வசனிப்பார்கள்
தசமுடனே தாரிணியிலஞ்சனத்தை
தாக்குடனே வெகுமாந்தர் செய்துபார்த்து
பிசகில்லா பிரணவத்தை
மெய்யென்றெண்ணி பேருலகில் மாந்தரெல்லாம் துதித்திட்டாரே
விளக்கவுரை :
[ads-post]
3123. துதித்தாரே காலாங்கி
நாதர்தம்மை தோற்றமுடன் எந்நாளும் வாசீர்மித்து
மதிப்புடனே யவர்பாதம்
தான்வணங்கி வகையுடனே எப்போதும் கருணைகூர்ந்து
கதிப்புடனே
சமாதிதனிலிருந்துகொண்டு சதாகாலம் லாடமதில் மையேபூண்டு
விதிப்பயனை தானெண்ணி
விண்ணின்மீதல் வெகுகாலம் தானிருந்தார் மாந்தர்தாமே
விளக்கவுரை :
3124. தாமான வின்னமொரு
மார்க்கம்பாரு தயவுடனே மாணாக்கள் பிழைக்கவென்று
கோமானாம் பங்குனி
சித்திரையிலப்பா கொற்றவனே பூநீறு விளையுங்காலம்
மானான பூநீரை தானெடுத்து
மார்க்கமுடன் செப்புகிறேன் மைந்தாகேளு
பானான பூநீரை படிதான்ரண்டு
பாகமுடன் வாரிவந்து செப்பக்கேளே
விளக்கவுரை :
3125. செப்பவென்றால் கற்சுன்னம் படிதான் நான்கு தெளிவான வமுரியது படிதான்பத்து
ஒப்பமுடன் நல்லெண்ணை
படிதானைந்து உத்தமனே இரண்டையுந்தான் கலக்கிக்கொண்டு
நெப்பமுடன் தெளிவிருத்தி
பின்னுங்கேளு நேர்ப்புடனே தான்காய்ச்ச வுப்பேயாகும்
துப்புறவே யுப்பதுவும்
மிகவேபூக்கும் துறையாக வுப்பதுவை பத்துமுறை காச்சே
விளக்கவுரை :