3126. காச்சிடவே சாம்பலது
செப்பக்கேளு கருவான சாம்பலது எருச்சாம்பலப்பா
நீச்சென்ற வெருச்சாம்பல்
கொண்டுவந்து நிசமான குழம்பதுவைத்தானெடுத்து
பாச்சியே சல்லாவை மேலேபோட்டு
பாகமுடன் குழம்பதுவை மேலேயூத்து
ஏச்சலென்ற வுண்டைதனை
எடுத்துக்கொண்டு எழிலான ரவிதனிலே காயப்போடே
விளக்கவுரை :
3127. காய்ந்தபின்பு
பாண்டமதிலிட்டு மைந்தாகவனமுடன் வரைப்பாண்டம் போட்டுமேதான்
தோய்ந்திடவே மல்லியென்ற
யிலையைமைந்தா சுத்தமுடன் வதன்மேலே வைத்துக்கொண்டு
தோய்ந்திடவே மேற்சட்டி
கொண்டுமூடி தெளிவாக சீலையது வலுவாய்ச்செய்து
பாய்ந்திடவே தீயெரிப்பாய்
நாலுசாமம் பதமுடனே தானெடுப்பாய் பின்னுங்கேளே
விளக்கவுரை :
[ads-post]
3128. பின்னுங்கேள் ஏரியிலே
வளர்ந்த பிண்டம் பாரான இறைச்சியுடன் அதிகங்கொண்டு
வின்னமுடன் துவாரமது
விட்டுமைந்தா விவரமுடன் வீரமது வொன்றேயாகும்
கன்னலுடன் பச்சையென்ற
பூரந்தானும் கருவான பூநீரும் சரியாய்ச்சேர்த்து
பன்னவே சிப்பிக்குத்
துவாரமிட்டு பாலகனே இம்மருந்தில் குன்றிபோடே
விளக்கவுரை :
3129. குன்றியா மருந்ததுதான்
போட்டபின்பு குமுறவே தளவாயாஞ் சட்டிதன்னில்
வென்றிடவே யடுக்கடுக்காய்
பரப்பிமைந்தா மேல்மூடி காற்றில்லா ஒடுக்கந்தன்னில்
பன்றிடவே வைத்தவுடன்
சலமிரங்கும் பட்சமுடன் ஜெயநீரை எடுத்துபாலா
தான்றிடவே மேற்சொன்ன
பூநீர்சேர்த்து சாங்கமுடன் தானரைப்பாய் சாமம்நாலே
விளக்கவுரை :
3130. நாலான சாமமது வரைக்கும்போது
நலமான வுரவண்டு குழியானைதானும்
காலான சூதமுடன் பச்சைபூரம்
கருவான வாறுபுள்ளி தண்டுஞ்சேர்த்து
பாலான சீனமுடன்
காரஞ்சேர்த்து பாகமுடன் தானரைப்பாய் லகுவதாக
வேலான பில்லையது தட்டிமைந்தா
வேகமுடன் ரவிதனிலே காயப்போடே
விளக்கவுரை :