போகர் சப்தகாண்டம் 3181 - 3185 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3181. வேறான வெட்டிவேர் துத்திமூலம் வெளியான வாவாரை பஞ்சமூலம்
கூறானதாது மாதுளையின்வேறும் குணமான செங்கொட்டை சிவனார்வேம்பு
நாறான செங்காலி வேறினோடு நறுங்கந்தம் பீனாறி பட்டைதானும்
பாறான பூதமாம் விருட்சத்தோடு பாங்கான கருங்குன்றி வேறுமாமே

விளக்கவுரை :


3182. ஆமேபிரன் கருங்காலி பட்டைதானும் அப்பனே செனாமறைவேறினோடு
தாமேதான் வெம்பாடை பட்டைதானும் தாக்கான கொழிஞ்சியிட பட்டைமூலம்
வேமேதான் வராலியிட மூலந்தானும் விரையான பேய்மிரட்டி பட்டைமூலம்
நாமேதான் சொன்னபடி வகிற்கட்டைதானும் நலமான சந்தனமும் செஞ்சாந்துமாமே

விளக்கவுரை :

[ads-post]

3183. சந்தான பூவந்திபட்டைதானும் சதுரான வெண்ணாவல் பட்டையோடு
காந்தமெனும் வேய்கையுட பட்டைதானும் கருவான வுதிரமாம் மூலத்தோடு
பாந்தலெனும் கொங்கலவன் மூலத்தோடு பளிங்கான விராலியிட மூலந்தானும்
வேந்தர்கைக் கோலூன்றி விருட்சமூலம் விரைவான பட்சையுட மூலந்தானே

விளக்கவுரை :


3184. மூலமொடு கரும்பசளை செம்பசளைதானும் முஷ்டியுடன் கருவாகை பெருவாகைதானும்
சீலமுடன் பற்பாடம் யிம்புராவும் சிறியாளின் நங்கையொடு பெரியாநங்கை
காலமெனும் புளியாரை சிறியாரைதானும் தகமையுள்ள நிலவேம்பு கருவேம்புதானும்
பாலமெனும் பொடுதலையாம் சீந்திலோடு பசுமையாப் பொற்சீந்தியாமே

விளக்கவுரை :


3185. சீந்திலொடு செவ்வாழை கருவாழையானும் சிறப்பான வுப்பதுவும் தானுமாகும்
சாந்திமலர் நந்தியாவட்டமூலம் சார்புடனே கொன்றைவேர் புன்னைவேறும்
தாந்திகழும் செங்கழுநீர் பூண்டுதானும் தகமையுள்ள வட்டாரி துத்திமூலம்
ஏந்தலெனும் மயிர்கொன்றை இருவாட்சிதானும் என்மகனே வகைக்குவொரு பலமாய்த்தூக்கே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3176 - 3180 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3176. பண்ணவே குளிகையது தூதுளங்காய் பாகமுடன் தானெடுத்து வருந்தும்போது
நண்ணவே காயாதி கற்பமாகும் நலமான கண்ணிரண்டும் சொருவல்கொஞ்சம்
எண்ணவே மயக்கமது வதிகங்காணும் எழிலான புன்னகையும் அதிகமாகும்
தண்ணமுடன் தேகமது கனத்தலாகும் சதாகாலம் நிஷ்டையிலே இருப்பார்தாமே

விளக்கவுரை :


3177. தாமான செபந்தனிலே இருந்துகொண்டு சதாகாலம் நிஷ்டையிலே வழியுந்தேடி
சேமமுட னுந்தமக்கு மொழியுஞ்சொல்லி சிறப்புடனே யாசீர்வப் பேருரைத்து
வேமமுட சோடச வுபசாரமோதி வேகமுடன் பிரணவத்தை மனதிலெண்ணி
நாமமுடன் காலாங்கி தனைநினைத்து நவின்றிட்டேன் போகரிஷி நவிலத்தானே

விளக்கவுரை :

[ads-post]

3178. தானான வின்னமொரு கருமானங்கேள் சாற்றுகிறேன் மாணாக்கள் பிழைக்கவென்று
கோனான எனதையர் காலாங்கிநாதர் குருபதத்தை யடியேனுந்தாள்பணிந்து
வேனான காயகற்ப சூரணத்தை விருப்பமுடன் யானுரைப்பேன் பின்னுங்கேளிர்
மானான மகதேவ ரிஷிகள்தாமும் மானிலத்தில் மறைத்துவைத்தார் பான்மையாமே

விளக்கவுரை :


3179. பான்மையாம் கொங்கணரு மிந்தபாகம் பாரினிலே களங்கமறச்சொல்லவில்லை
மேன்மையுடன் அகஸ்தியரும் புலஸ்தியருக்கப்பா மேதினியில் விளக்கமறச்சொல்லவில்லை
வாண்மையுடன் புலிப்பாணிக் கிந்தபாகம் வசனித்தார் ஆயிரத்துவன்னுருக்குள்
மேன்மையுடன் எனைப்போலச் சொன்னாரில்லை நுட்பமதை மாந்தற்குச் சொன்னேன்பாரே

விளக்கவுரை :


3180. பாரேதான் சுக்குடனே வாய்விளங்கம் பாங்குடனே திப்பிலியும் வசுவாசிதானும்
நேரேதான் மிளகுடனே தான்றிக்காயும் நேரான கடுக்காயும் நெல்லிக்காயும்
கூரேதான் சித்திரமாம் மூலத்தோடு கொடிதான சிவதைவேர் சித்தாமுட்டி
வீரேதான் வாலுளுவை சோம்புயேலம் விருப்பமுடன் செந்தோன்றி வேறுமாமே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3171 - 3175 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3171. சொல்லுவார் பரிபூரணானந்தத்தை சூட்சமுடன் ஞானவெள் ஜோதியென்பார்
வெல்லுவார் லாகிரியைக் கடந்தோமென்பார் வேதாந்த வெட்டவெளி யறிந்தோமென்பார்
புல்லுவார் பூவுலகை மறந்தோமென்பார் பூதலத்தில் என்னைவிட குருவோவென்பார்
அல்லலற்று மாய்கைதனை மறந்தேனென்பார் அப்பனே குளிகையுட வேகந்தானே  

விளக்கவுரை :


3172. தானான யின்னமொரு கருமானங்கேள் தகமையுடன் காயாதி கற்பந்தன்னை
பானான காலாங்கிநாதர்பாதம் பாரினிலே தான்பணிந்து வடியேன்தானும்
தேனான கற்பமது சிறுகற்பந்தான் தேசத்தில் மாந்தர்கள் பிழைக்கவென்று
மானான வபினியது சேர்தானப்பா மார்க்கமுடன் கெஞ்சாவின் சேர்தானொன்றே

விளக்கவுரை :

[ads-post]

3173. ஒன்றான பிரண்டையுந்தான் தேனையூட்டி வுத்தமனே கல்லுரலில் இடித்துத்தீரு
நன்னான புகையிலையை மேலேசுத்தி பாங்குடனே யெறுக்கிலையை யதன்மேல்சுத்தி
நன்றான பனைவெல்லங்கவசஞ்செய்து நலமாக பூமிதனில் புதைத்துப்போடு
வென்றிடவே மண்டலந்தான் சென்றபோது விருப்பமுடன் தானெடுத்து செப்பக்கேளே

விளக்கவுரை :


3174. செப்பவென்றால் கவசமதை நீக்கிப்போடு தெளிவுடனே வபினியது காரமாகி
ஒப்பமுடன் கோரக்கர்மூலியாலே ஓகோகோ மகிமைகளு மிகவுண்டாகும்
வெப்பமது வபினிக்கு மிகவுண்டாகி வீறுடனே பித்தமது வதிகஞ்காட்டும்
தப்பிதங்கள் நேராமல் வபினிக்கேதான் சாத்துகிறேன் சத்திவகை சொல்லக்கேளே

விளக்கவுரை :


3175. சொல்லவென்றால் பன்னீரால் மைந்தாநீயும் சுத்தமுடன் தானரைப்பாய் நாலுசாமம்
வெல்லவே திராட்சியென்ற பழரசத்தால் மேன்மைபெற வெண்சாமம் அரைப்பாயப்பா
புல்லவே மலைத்தேனும் இரண்டுசாமம் புகழுடனே தானரைப்பாய் புதல்வாநீகேள்
செல்லவே மைபோலவரைத்துமேதான் சீர்பெறவே சிமிழ்தனிலே பதனம்பண்ணே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3166 - 3170 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3166. காணவே வானுலகில் போகுஞ்சித்தர் கண்ணுக்குற்றேற்றுவது மெய்போலாகும்
பூணவே சூரியனும் எதிரேநிற்பான் பொங்கமுடன் சந்திரனும் தூரேநிற்பான்
வேணவே லாகிரிகளுண்டபோது வெகுவான வினோதவகை சொல்லலாகும்
தோணவே நேத்திரங்களி லிருந்துகொண்டு தொல்லுலகில் கண்டதெல்லாம் பினத்துவாரே

விளக்கவுரை :


3167. பினத்துவார் ஆகாசமார்க்கந்தன்னை பெருமையுடன் அதிசயங்கள் மிகவுஞ்சொல்வார்
நினைப்புடனே கண்ணுக்கு தோற்றம்யாவும் நிலையான வதிசயம்போல் கூறுவார்கள்
புனப்புடனே பித்தமது மேலேசொக்கி புகழான கபாலத்தை வரட்சிசெய்யும்
தினப்புடனே சரரிரமெங்கும் தினவுண்டாகும் திரளான தேகமது சொக்கிப்போமே 

விளக்கவுரை :

[ads-post]

3168. சொக்கவே காயாதி பூரணத்தால் தொல்லுலகில் அதிதவகை மெத்தக்கூறும்
சிக்கவே மலைகுகைகள் வனாந்திரத்தில் சிறப்புடனே சித்தர்களைக் கண்டேனென்பார்
ஒக்கவே யவர்களிடம் கூடிருந்து உத்தமனே காயகற்பங் கொண்டேனென்பார்  
தக்கவே கைலங்கிரி கண்டேனென்பார் சாயுச்சிய போதையிலே இருந்தார்பாரே

விளக்கவுரை :


3169. போதையிலே ஞானமுண்டு வருளுஞ்சொல்வார் பொங்கமுடன் அதிசயங்கள் வினோதஞ் சொல்வார்
தீதையிலே கற்பமது வுண்டபோது திரளான தத்துவங்கள் மிகவுஞ்சொல்வார்
பாதையிலே இருந்துகொண்டு கண்ணைமூடி பாரினிலே பரிபாச வார்த்தைசொல்வார்
வாதையிலே யன்னமது தேவையில்லை வைகுண்டபதிதனிலே கேட்பார்பாரே

விளக்கவுரை :


3170. கேட்கையிலே லாகிரிகள் மிகவும்மிஞ்சி கெடிதான வடிதடிகள் மிகவுண்டாகி
மூட்கமுடன் கீழ்விழுந்து பிரண்டெழுந்து முனையான கும்பகத்திலிருப்பேனென்று
தாட்கமல பீடமதில் வீற்றிருக்கும் தாயான மஹேஸ்பரியை காண்பேனென்றும்
சூட்சமுடன் சுந்தரனார் தானென்று சொல்லுவார் பலதுதியுஞ் சொல்லுவாரே

விளக்கவுரை :


Powered by Blogger.