3176. பண்ணவே குளிகையது
தூதுளங்காய் பாகமுடன் தானெடுத்து வருந்தும்போது
நண்ணவே காயாதி கற்பமாகும்
நலமான கண்ணிரண்டும் சொருவல்கொஞ்சம்
எண்ணவே மயக்கமது
வதிகங்காணும் எழிலான புன்னகையும் அதிகமாகும்
தண்ணமுடன் தேகமது
கனத்தலாகும் சதாகாலம் நிஷ்டையிலே இருப்பார்தாமே
விளக்கவுரை :
3177. தாமான செபந்தனிலே
இருந்துகொண்டு சதாகாலம் நிஷ்டையிலே வழியுந்தேடி
சேமமுட னுந்தமக்கு
மொழியுஞ்சொல்லி சிறப்புடனே யாசீர்வப் பேருரைத்து
வேமமுட சோடச வுபசாரமோதி
வேகமுடன் பிரணவத்தை மனதிலெண்ணி
நாமமுடன் காலாங்கி
தனைநினைத்து நவின்றிட்டேன் போகரிஷி நவிலத்தானே
விளக்கவுரை :
[ads-post]
3178. தானான வின்னமொரு
கருமானங்கேள் சாற்றுகிறேன் மாணாக்கள் பிழைக்கவென்று
கோனான எனதையர் காலாங்கிநாதர்
குருபதத்தை யடியேனுந்தாள்பணிந்து
வேனான காயகற்ப சூரணத்தை
விருப்பமுடன் யானுரைப்பேன் பின்னுங்கேளிர்
மானான மகதேவ ரிஷிகள்தாமும்
மானிலத்தில் மறைத்துவைத்தார் பான்மையாமே
விளக்கவுரை :
3179. பான்மையாம் கொங்கணரு
மிந்தபாகம் பாரினிலே களங்கமறச்சொல்லவில்லை
மேன்மையுடன் அகஸ்தியரும்
புலஸ்தியருக்கப்பா மேதினியில் விளக்கமறச்சொல்லவில்லை
வாண்மையுடன் புலிப்பாணிக்
கிந்தபாகம் வசனித்தார் ஆயிரத்துவன்னுருக்குள்
மேன்மையுடன் எனைப்போலச்
சொன்னாரில்லை நுட்பமதை மாந்தற்குச் சொன்னேன்பாரே
விளக்கவுரை :
3180. பாரேதான் சுக்குடனே
வாய்விளங்கம் பாங்குடனே திப்பிலியும் வசுவாசிதானும்
நேரேதான் மிளகுடனே
தான்றிக்காயும் நேரான கடுக்காயும் நெல்லிக்காயும்
கூரேதான் சித்திரமாம்
மூலத்தோடு கொடிதான சிவதைவேர் சித்தாமுட்டி
வீரேதான் வாலுளுவை
சோம்புயேலம் விருப்பமுடன் செந்தோன்றி வேறுமாமே
விளக்கவுரை :