3171. சொல்லுவார் பரிபூரணானந்தத்தை
சூட்சமுடன் ஞானவெள் ஜோதியென்பார்
வெல்லுவார் லாகிரியைக்
கடந்தோமென்பார் வேதாந்த வெட்டவெளி யறிந்தோமென்பார்
புல்லுவார் பூவுலகை
மறந்தோமென்பார் பூதலத்தில் என்னைவிட குருவோவென்பார்
அல்லலற்று மாய்கைதனை
மறந்தேனென்பார் அப்பனே குளிகையுட வேகந்தானே
விளக்கவுரை :
3172. தானான யின்னமொரு
கருமானங்கேள் தகமையுடன் காயாதி கற்பந்தன்னை
பானான காலாங்கிநாதர்பாதம்
பாரினிலே தான்பணிந்து வடியேன்தானும்
தேனான கற்பமது
சிறுகற்பந்தான் தேசத்தில் மாந்தர்கள் பிழைக்கவென்று
மானான வபினியது சேர்தானப்பா
மார்க்கமுடன் கெஞ்சாவின் சேர்தானொன்றே
விளக்கவுரை :
[ads-post]
3173. ஒன்றான பிரண்டையுந்தான் தேனையூட்டி வுத்தமனே கல்லுரலில் இடித்துத்தீரு
நன்னான புகையிலையை
மேலேசுத்தி பாங்குடனே யெறுக்கிலையை யதன்மேல்சுத்தி
நன்றான
பனைவெல்லங்கவசஞ்செய்து நலமாக பூமிதனில் புதைத்துப்போடு
வென்றிடவே மண்டலந்தான்
சென்றபோது விருப்பமுடன் தானெடுத்து செப்பக்கேளே
விளக்கவுரை :
3174. செப்பவென்றால் கவசமதை
நீக்கிப்போடு தெளிவுடனே வபினியது காரமாகி
ஒப்பமுடன் கோரக்கர்மூலியாலே
ஓகோகோ மகிமைகளு மிகவுண்டாகும்
வெப்பமது வபினிக்கு
மிகவுண்டாகி வீறுடனே பித்தமது வதிகஞ்காட்டும்
தப்பிதங்கள் நேராமல்
வபினிக்கேதான் சாத்துகிறேன் சத்திவகை சொல்லக்கேளே
விளக்கவுரை :
3175. சொல்லவென்றால் பன்னீரால்
மைந்தாநீயும் சுத்தமுடன் தானரைப்பாய் நாலுசாமம்
வெல்லவே திராட்சியென்ற
பழரசத்தால் மேன்மைபெற வெண்சாமம் அரைப்பாயப்பா
புல்லவே மலைத்தேனும்
இரண்டுசாமம் புகழுடனே தானரைப்பாய் புதல்வாநீகேள்
செல்லவே மைபோலவரைத்துமேதான்
சீர்பெறவே சிமிழ்தனிலே பதனம்பண்ணே
விளக்கவுரை :