போகர் சப்தகாண்டம் 3006 - 3010 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3006. ஆமேதான் பாஞ்சாலன் பூமிவளமாகும் அப்பனே தென்புவனம் வடபுவனமாகும்
தேமேதான் புல்லவே தீர்த்தக்கரையாகும் தேன்விளையும் நர்மதா வடமேருமாகும்
போமேதான் இத்தாதிதேசநாடு பொலிவான வளர்பூமி என்னலாகும்
மாமேதான் பூநீரு எடுக்குங்காலம் பகருவேன் காலமது செப்பக்கேளே

விளக்கவுரை :


3007. கேளேதான் சித்திரா பருவமுன்னும் கெணிதமுடன் பங்குனிக்கு முன்னதாக
தாளேதான் அமாவாசை பூரணவட்டம் நாள்தேடி பரிபாஷை தாமுணர்ந்து
பாளேதான் போகாமல் நாளைப்பார்த்து பாரினிலே எல்லவரும் நூலாராய்ந்து
வேளேதான் சித்தர்நூல் நுணுக்கம்பார்த்து வேதாந்தத் தாயினது உபவாசங்கேட்டே

விளக்கவுரை :

[ads-post]

3008. கொண்டேதான் உபவாசமிருந்து கொண்டு காடான கோடிமலை தேசங்கண்டு
கண்டேதான் காணாறுதேசம்விட்டு காடுமலை நதிவனமுந் தான்கடந்து
விண்டேதான் பூநீருமெடுக்குங்காலம் விண்ணுலகில் சித்தர்முனி சொல்லைப்போலே
அண்டர்முனி ராட்சதர்கள் இருக்குங்காலம் அங்கனவே தாம்போனார் மாந்தர்தாமே

விளக்கவுரை :


3009. மாந்தராம் தவயோகி சிவயோகிதானும் மார்க்கமுடன் முப்புவனங்காணவென்று
வேந்தர்பதி முதலான தேசராஜர் வெகுகோடி மாந்தரெல்லாம் முப்பைக்காண
போந்தமுடன் நிலாப்பருவம் தன்னிற்சாமம் பொங்கமுடன் நடுவேளை சாமந்தன்னில்
சாந்தமுடன் பிரணவத்தின் மாறல்கொண்டு சட்டமுடன் பூநீருமெடுப்பார்தாமே 

விளக்கவுரை :


3010. எடுக்கையிலே சீனபதிதேசந்தன்னில் எழிலான பூநீரு மெடுக்குமார்க்கம்
அடுக்குடனே யோராளின்கீழ்மட்டாக அப்பனே யவர்பூமி தன்னைத்தோண்டி
இடுக்கமென்ற குழிதனிலே மண்ணைத்தானும் யெழிலாகத் தான்பரப்பீ மூடிப்போடு
ஒடுக்கமுடன் கெட்டணைகள் அதிகங்கொண்டு வுத்தமனே பன்னாடை மேலேசாத்தே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3001 - 3005 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3001. ஓடியே சதாசிவன்தான் பாதங்காப்பு வுரைத்திடுவேன் போகரேழாயிரத்தில்
தேடியே சத்தசாகரமதாக திறமாகப் படிவைத்தேன் சத்தகாண்டம்
கூடியே காலாங்கி நாதர்பாதம் குருவான நாதாக்கள் பாதம்போற்றி
ஆடியே வயித்தியமாம் நாலாங்காண்டம் அப்பனே வாதமது காப்பதாமே

விளக்கவுரை :


3002. தானான சத்தசாகரமுங் கண்டேன் தானான சத்ததீவுகளுங் கண்டேன் 
வேனான சத்தநதி தானுங்கண்டேன் வேகமுடன் அஷ்டதிக்கு தானும்கண்டேன்
கோனான அஷ்டபாலகரைக் கண்டேன் கொடிதான அஷ்டதேவாலயங் கண்டேன்
பானான பராபரியை மனதிலெண்ணி பாங்குபெற பாடிவிட்டேன் மகிமைபாரே

விளக்கவுரை :

[ads-post]

3003. பாரேதான் குளிகையது பூண்டுகொண்டு பண்புடனே சீனபதிசென்றேன்யானும்
நேரேதான் சீனபதி மூன்றுகாதம் நேர்மையுடன் சுத்திவந்து வுளவுகண்டேன்
சீரேதான் பூமிவளம் யானுங்கண்டேன் சிறப்பான அவர்பூமியிதுவேயாகும்
கூரேதான் நாதாக்கள் கண்டதில்லை கொற்றவனே யான்கண்டேன் பூநீராமே

விளக்கவுரை :


3004.  ஆமேதான் பூநீரின் வளப்பங்கேளிர் அகிலமெலாம் பூநீர்கள் மெத்தவுண்டு
தாமேதான் பாண்டிவளமெத்தநாடு தாக்கான யாவடையார் பிரம்மதேசம்
நாமேதான் கண்டபடி சேரநாடு நாதாக்கள் சோழவள மெடுப்பார்பூமி
போமேதான் நெடுங்காலம் தன்னிற்சென்று பொங்கமுடன் தானெடுப்பார் பூநீராமே

விளக்கவுரை :


3005. பூநீரில்ன்னம் வெகுதளமுஞ்சொல்வேன் புகழான காளஸ்திரி சிவகெங்கைதானும்
பூநீராம் பாலுவனம் பூம்பாறையாகும் புகழான திண்டுக்கல் பசுமலையுமாகும்
சோநீராந் தில்லைவனம் காளிங்கமடுவு சொர்ணமென்ற பூமியது வடமதுரையாகும்
தேநீரான் தென்மதுரை வயோத்திநகராகும் தெளிவான பொன்னகரந் தானுமாமே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 2996 - 3000 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2996. தருணமுடன் சித்தாதி சித்தரெல்லாம் வளமையுடன் அவர்தமக்கு வணக்கம்சொல்வார்
கருணையுடன் அவர்பாதம் தொழுதுநிற்பார் காவலுடன் சித்தர்களும் சமாதிபக்கம்
தருணமது சமாதிக்கு முன்னதாக தாழ்மையுடன் காத்திருந்த சித்துதாமே

விளக்கவுரை :


2997. சித்தான காலாங்கி கிருபையாலே சென்றேனே குளிகையது பூண்டுகொண்டு
சத்தான லோகமெல்லாஞ் சுத்திவந்தேன் சாங்கமுடன் காணாத காட்சியெல்லாம்
முத்தான காண்டமது மூன்றுக்குள்ளே முடிவுபெற பாடிவைத்தேன் லோகமார்க்கம்
நித்தமுமே காலாங்கி யாமுந்தானும் நிதந்தோறும் பூசையிலே நினைக்கின்றேனே

விளக்கவுரை :

[ads-post]

2998. நினைக்கையிலே காரியங்கள் எல்லாஞ்சித்தி நீணிலத்தில் அவர்போலுஞ் சித்துமுண்டோ
வனைதோறும் காலாங்கி நூலைப்பார்த்து மார்க்கமுடன் வர்ச்சித்தே பூசிப்பார்கள்
சினத்தவரு முதலாவார் காலாங்கிதம்மால் சீருலகில் கீர்த்தியுடன் வாழலாகும்
வினைப்பயனும் விட்டுமல்லோ புண்ணியனாவாய் வேதாந்தத் தாயினது வருளுமுண்டே

விளக்கவுரை :


2999. அருளான செல்வமுண்டு கியானமுண்டு அப்பனே குருசம்பிரதாயமுண்டு 
பொருளுண்டு புகழுண்டு போகமுண்டு பொன்னுலகப்பதி தனிலேயிடமுமுண்டு
இருளகன்று சூரியன்போல் விலாசமுண்டு எழிலான அஷ்டவிதபாக்கியமுண்டு
மருளகன்று வைகுண்டபதி என்னாளும் வாழ்வுண்டாய் வாழ்த்துமல்லோ இருப்பார்முற்றே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 2991 - 2995 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2991. பாரேதான் சீஷவர்க்கம் கேட்கும்போது பலபலவாம் துறையோடு முறைமையெல்லாம்
நேரேதான் குருவான கமலர்தாமும் நேர்மையுடன் சமாதிக்குள் செல்லுமுன்னே
கூரேதான் அவரவர்க்கு தக்கபாகம் குறிப்புடனே தாம்கொடுத்தார் கமலர்தாமும்
ஆரேதான் சீஷவர்க்கமான போக்கு உகமையுடன் ஞானோப மோதிட்டாரே

விளக்கவுரை :


2992. ஓதவே யுகங்கோடி காலந்தானும் வுத்தமனும் சமாதிதனில் இருந்தாரங்கே
நீதமுடன் சமாதிக்கு பூசைமார்க்கம் நேர்மையுடன் நாள்தோறும் செய்திருந்தார்
காதமெனும் சீனபதிமூன்று காதம் கமலமுனிதன்னை யவர்மாந்தரெல்லாம்
வேதமுடன் சிவபூசை மார்க்கத்தோடு வேள்விகளு மனேகமதாய் நடத்துவாரே

விளக்கவுரை :

[ads-post]

2993. நடத்துகையில் சீனபதி சென்றபோது நாதாந்த காலாங்கி நாதர்தம்மை
திடத்துடனே குருதனையே காணவென்று தீரமுடன் சமாதிக்கு சென்றேன்யானும்
மடபதியா மாயிரம்பேர் சீஷவர்க்கம் மகத்தான குருதனையே காணவென்று
வடகோடி கானகத்தில் மாந்தரெல்லாம் வளமுடனே சமாதிபக்க லிருந்தார்காணே

விளக்கவுரை :


2994. காணவென்றால் அவர்பெருமை யாருக்குண்டு காசினியில் இவரல்லால் ஒருவர்க்குண்டோ
வேணபடி மகிமையது யாருக்குண்டு வேதாந்த காலாங்கிநாதர்க்குண்டு
நீணமுடன் சமாதிதனைக் காணவென்று நேர்மையுடன் அங்கிருந்தேன் சிலதுகாலம்
தோணவே எனதையர் காலாங்கிக்கு சோடசமாம் உபசாரம் சொல்லொணாதே

விளக்கவுரை :


2995. சொல்லவென்றால் ராஜாதிராசர்கில்லை சூரியாதி சந்திராதி யவருக்கில்லை
வெல்லவென்றால் இவர்போலும் சித்துமுண்டோ மேதினியில் கண்டதில்லை சமாதிசித்து
புல்லவே திரியாமல் பூசைமார்க்கம் போற்றவார் காலாங்கி தம்மைத்தானும்
அல்லவே யவர்கிருபை வேண்டுமென்று வனேகமாம் கோடிப்பேர் வருணிப்பாரே

விளக்கவுரை :


Powered by Blogger.