போகர் சப்தகாண்டம் 3091 - 3095 of 7000 பாடல்கள்
3091. தஅனான வீரியனும் ஆரியனாய்வேண்டும் தகமையுள்ள வீரியனாயிருப்பானானால்
வேனான மந்திரத்தை
மிகவும்பேசும் மிக்கான கிரமவிதி தானடத்தும்
பானான குருமுறைபோல்
யாகஞ்சொல்லும் பாலகனே யாகமது குறுதிகூறும்
தேனான வீரியனாங் குட்டிதன்னை
தெளிவுபெற லோகமதில் வசியஞ்செய்யே
விளக்கவுரை :
3092. செய்யவே குட்டியெனும்
வசியமானால் ஜெகத்திலே கோடிவித்தை யாடலாகும்
பையவே மாந்தர்மேலேவதாகும்
பாங்குடனே கல்லதனை எறியலாகும்
மெய்யுடனே ஜெகஜால
வித்தையப்பா மேதினியில் ஆருந்தான் செய்யவில்லை
பெய்யவே சங்கலீயன்
கறுப்பன்தானும் பேரான வண்ணமா ரேழுமாமே
விளக்கவுரை :
[ads-post]
3093. ஏழான வண்ணமார் காவலாளர்
எழிலான ஜாலமென்ற மாளிதன்னில்
பாழான வையன்மார்
பிடாரிதானும் பச்சையென்ற தேவதையும் காளியோடு
வாழாத குமரிகளாஞ் சத்தகன்னி
வளமுடனே பச்சையென்ற பல்லக்குதன்னை
தாழாமல் தோலதனில்
எடுத்துக்கொண்டு தகமையுடன் காளிதனை தூக்குவாரே
விளக்கவுரை :
3094. தூக்கியே ஜாலமென்ற
மாளிதன்னில் துப்புரவாய் காவலுடன் இருந்துகொண்டு
நோக்கமுடன் தேவதையை
வசியஞ்செய்து நொடிக்குள்ளே கோடிவித்தை யாடலாகும்
பார்க்கவென்றால் லோகமதில்
மாந்தர்யாவும் பதபதைத்து நடுநடுங்கி கதருவார்கள்
வாக்குடனே வரமுனக்கு
பதமுந்தந்து வாகுடனே செல்லுமென செப்புந்தானே
விளக்கவுரை :
3095. சொல்லவென்றால் இன்னம்வெகு
கூத்துகேளிர் செயலான நாதர்முனி ரிஷிகள்தாமும்
வெல்லவே பூதமதை வசியஞ்செய்து
வேணவுபசாரமது வதன்கையாலே
புல்லவே
யேவல்தனைச்செய்யவென்று புகழாக வசியமது செய்துகொண்டு
மெல்லமே தம்பணிக்கு ஆனதாக்கி
மேன்மையுடன் சித்துகளு மாடினாரே
விளக்கவுரை :