போகர் சப்தகாண்டம் 3076 - 3080 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 3076 - 3080 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3076. கூறயிலே மங்சிங் என்றேயோது கொடிதான வுருவதுதான் லட்சமாகும்
தீறமுடன் நிருவாணமாயிருந்து திறமுடனே முக்கோண வட்டத்துள்ளே
சீறலுடன் வராகிதன்னை வரவழைத்து சிறப்புடனே பூசையது செப்பக்கேளும்
நேரமுடனே நடுச்சாம வேளைதன்னில் நேர்மையுடன் மசானகரையிருந்து செய்யே

விளக்கவுரை :


3077. செப்பவென்றால் பூசையது வின்னங்கேளு தெளிவுடனே மசானமதில் சக்கரந்தான்
மெய்யுருவங் கொண்டுமல்லோ புவனைவாலை மேதினியில் கைவசமாய் செய்துகொண்டு
பொய்யுடலை மெய்யென்று நம்பியேதான் புகழான வஞ்சனத்தை மாற்றுதற்கு 
மைவிழியாள் பாசமதை மிகவும்நீங்கி மார்க்கமுடன் தவவிலையில் நின்றிடாயே

விளக்கவுரை :

[ads-post]

3078. நின்றுமே வராகமென்ற சிரசின்மேலே நிலையான பதிவிளக்கை ஏற்றிவைத்து
தன்னுடனே மசானத்தின் சவத்தின்மேல் சட்டமுடன் தீயெரிந்து வேகும்போது
வென்றிடவே வராகத்தின் சிரசின்மேலே வினையமுடன் பதிவிளக்கே யேற்றிவைத்து
சென்றிடவே குறளிதனை வரவழைத்து சிறப்புடனே கொள்ளிதனை காவல்வையே

விளக்கவுரை :


3079. வைத்தவுடன் கொள்ளிவாய் பிசாசுதானும் வாகுடனே குறளிக்கு காவல்நின்று
செத்ததொரு சவத்தின்மேல் இருந்தபன்றி சேரவே சிரசதுவும் எகிரித்தானும்
மெத்தவே ஓங்காரமிட்டுமேதான் மேன்மையுடன் குறளிக்கு எதிர்முன்னாக
சத்தமுடன் கூச்சலிட்டு வராகன்தானும் சதுர்முகமாய் குறளிமுன் பேசும்பாரே

விளக்கவுரை :


3080. பாரேதான் மசானத்தில் பூசைசெய்து பட்சமுடன் குறளியைத்தான் வசியஞ்செய்து
நேரேதான் ஜாலமென்ற மாளிதன்னில் நேர்மையுடன் நாலுபுறம்காவல்வைத்து
சீரேதான் செத்தவர்பேர் கேட்கும்போது சிறப்புடனே குறளிவந்து முன்னேகூறும்
வேரேதான் சஞ்சார மனிதரில்லை வினாவுக்கு விடைகொடுக்கும் குறளியாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar