போகர் சப்தகாண்டம் 3081 - 3085 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 3081 - 3085 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3081. குறளியாம் ஜாலமென்ற மாளிதன்னில் குறிப்பான நடுவாசல் திட்டுவாசல்
திறமுடனே கூட்டமது எட்டுபேராய் தீரமுடன் எணதிசையாம் திக்குபாலர்
மறளுடைய மேல்வாசல் முன்னேநின்று மதிப்புடைய நாகமென்ற குழல்சந்தாலே
சுறளுடனே மேல்வட்ட பரிதிமுன்னே சூட்சமுடன் செத்தவரைக்காணலாமே

விளக்கவுரை :


3082. காணலாம் அவரவர்கள் அடையாளத்தை கண்டுமே மகத்தெதிரே பேசலாகும்
தோணவே பேசுதற்கு முன்னேதானும் தோற்றமுடன் மயினமது நிறம்போல்நிற்கும்
பூணவே அந்தவண்ணம் என்னலாகும் புகழான ரூபமது கண்ணிற்றோற்றும்
வேணவே உபசாம் மிகவும்பேசும் விருப்பமுடன் முன்னின்று மறையும்பாரே  

விளக்கவுரை :

[ads-post]

3083. மறையிலே நாம்நினைத்த ரூபம்தோற்றும் மன்னவனே மயங்காதே மதிகொள்ளாதே
திரையுடனே முடியல்லோ கண்ணாடிக்குள் தீரமுடன் முன்னின்று வார்த்தைகூறும்
முறையுடனே தான்புகலும் முனிநாதாகேள் முன்னின்று போவதற்கு பின்னேசென்று
குறையன்றி குன்னடந்த காரியத்தை கூறிடுமே மனிதரைப்போல் கூறுமாமே

விளக்கவுரை :


3084. கூறவென்றால் எழுநூற்று இருபதுக்குள் கொப்பெனவே மந்திரத்தை உச்சாடித்து
தீரமுடன் குறளிதனை கிட்டழைத்து திகழுடனே ஞானோபதேசஞ்சொல்லி
கோதமுடன் கைதனிலே மையைப்பூசி கொப்பெனவே கண்ணாடிமேலேவைத்து
பாறமுடன் வட்டமொத்தம் விண்ணைப்பார்க்க பருவமுடன் உருவமது தெரியும்பாரே

விளக்கவுரை :


3085. தோணுமே ஜெகஜால மாளிதன்னில் தோற்றமுடன் கருவெல்லாம் இதற்குள்ளாடும்
காணுமே கையொளியில் வட்டந்தானும் களிப்புடனே மையுருவாய் காணலாகும்
ஏணவே கருமறைப்பை காணலாகும் எழிலான சமயமது வாய்க்கும்பாரு
வூணவே வட்டமென்ற பக்கம்நின்று உத்தமனே நடுமையத்தி லர்தந்தீட்டே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar