போகர் சப்தகாண்டம் 3086 - 3090 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 3086 - 3090 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3086. தீட்டையிலே கருமான மின்னமொன்று திறமுடனே செப்புகிறேன் மைந்தர்க்காக
வாட்டமுடன் ஜெகஜால கொள்ளிதன்னை வாகுடனே தானழைத்து திட்டங்கூறி
தேட்டமுடன் பிரணவத்தை முன்பின்னாகத் தெளிவுடனே ஓதிவைத்த படிநீதானும்
சசட்டியே குறளிக்கு பிரணவத்தைக்கூறி சூட்சமுடன் அட்சரத்தை சுறுக்கிமாறே

விளக்கவுரை :


3087. மாறப்பா வஞ்சமாய் வீட்டுக்குள்ளே மன்னவனே நடுமையம் நின்றுகொண்டு
கூறப்பா செத்தவரைக்காணவென்று குறிப்புடனே பட்சம்வைத்து காண்பதற்கு
நேரப்பா வந்தவர்பேர் வூர்தானென்ன நிலையான இருப்பிடமும் ரூபமென்ன
ஊரப்பா முன்னிருந்த ரூபமென்ன வுத்தமனே இறந்தபின்பு ரூபங்கேளே 

விளக்கவுரை :

[ads-post]

3088. கேளவே வடவத்தின் வரணங்கேளு கெடியான வாடையென்ற ரூபங்கேளு
நீளவே வாபரணப் பெயருங்கேளு நிலையான கைத்தொழிலை யின்னங்கேளு
மீளவே மரபினிடவாச்சாரந்தான் மிக்கான ஒழுக்கமென்ற வாச்சாரங்கேள்
மாளவே மாண்டதோர் வருஷங்கேளு மன்னவனே மாதமென்ற முடிவுங்கேளே

விளக்கவுரை :


3089. கேட்கையிலே இறந்ததோர் நாளுஞ்சொல்லும் கெவுனமுடன் நாழிகையும் முன்னேகூறும்
நீட்கமுடன் அடையாளம் சொல்லும்போது நிஷ்களங்கமாகவல்லோ உண்மைதோன்றும்
சூட்சமுடன் குறளிக்கு திலகவித்தை சுத்தமுடன் சொல்லுகின்ற தன்மையுண்டு
வேட்கமுடன் பில்லைதனை வசியங்செய்து லோகமதில் வெகுசித்து வாடலாமே

விளக்கவுரை :


3090. ஆடலாம் வெகுதந்திரம் குறளிகொண்டு அப்பனே சூனியமும் இதனாலுண்டு
தேடவே குட்டியது மலைக்குட்டிதானும் தெளிவுடனே நாம்சொன்ன காரியத்தை
ஊடவே ஒளிந்திருந்து வதையச்செய்யும் உத்தமனே இருள்மாளி காணலாகும்
நாடவே ஜாலக்காள் மோகினியுந்தானும் நலமான குட்டியென்ற வீரியந்தானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar